உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / மாஞ்சோலை தேயிலை தோட்டம்: அரசே ஏற்று நடத்த வேண்டுகோள்

மாஞ்சோலை தேயிலை தோட்டம்: அரசே ஏற்று நடத்த வேண்டுகோள்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

'மாஞ்சோலை தேயிலை தோட்டத்தை, மாநில தேயிலை தோட்ட கழகம் (டான் டீ) எடுத்து நடத்தும் என்ற முதல்வரின் குரலை கேட்க ஆவலோடு இருக்கிறோம்' என தோட்ட தொழிலாளி வீடியோ வெளியிட்டு, அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். மாஞ்சோலை தோட்ட தொழிலாளியும், ஊத்து தி.மு.க., கவுன்சிலருமான ஸ்டாலின், தன்னை கவுன்சிலர் என அறிமுகப்படுத்தி, தோட்ட தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பற்றி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.அதில், அவர் பேசியுள்ளதாவது:மாஞ்சோலையில் நான்கு தலைமுறைகளாக வாழ்ந்து வருகிறோம். சொந்த ஊரே மாஞ்சோலை தான். ஆதார், ரேஷன் முகவரி எல்லாம் மாஞ்சோலை தான். இங்கு, நாங்கள் சமத்துவபுரமாக வாழ்ந்து வருகிறோம். வனத்திற்கும், வன விலங்குகளுக்கும் பாதுகாப்பாக இருக்கிறோம். 2028ல் குத்தகை முடிகிறது. 2024ல் வி.ஆர்.எஸ்., நோட்டீஸ் அறிவித்துள்ளனர். திகைத்து போய், கண்ணீர் விட்டு அழுது கொண்டிருக்கிறோம். எங்களது ஒரே குரல் மாஞ்சோலை தேயிலை தோட்டத்தை, மாநில தேயிலை தோட்ட கழகம் எடுத்து நடத்த வேண்டும் என்பது தான். 'தேயிலை தோட்டத்தை அரசு எடுத்து நடத்த போகிறோம்' என முதல்வர் விரைவில் குரல் கொடுப்பார் என்ற நம்பிக்கையில் உள்ளோம்.இவ்வாறு அவர் பேசியுள்ளார்- நமது சிறப்பு நிருபர் -.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Ravichandran S
ஜூன் 05, 2024 06:20

அரசு நடத்தட்டும். இதில் என்ன தவறு இருக்கிறது தொழிலாளர்கள் அரசு ஊழியர் ஆகிவிடுவார்கள் அனைத்து சலுகைகளும் கிடைக்கும். தொண்டர்களும் சங்கம் அமைத்து போராடலாம். திமுகவின் கொள்கை தனியாருக்கு கொடுக்க கூடாது சரிதானே


அங்குசாமி
ஜூன் 04, 2024 07:49

என்னது, அரசு ஏற்று நடத்தணுமா? உள்ளதையும் கொள்ளையடிச்சிட்டு போயிடுவாங்களே பரவாயில்லையா?


மேலும் செய்திகள்











சமீபத்திய செய்தி