உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / பணம் பதுக்கல் விவகாரம்: தமிழக பா.ஜ.,வில் பூதாகரம்; தனி குழு அமைத்து விசாரிக்கப்படும்?

பணம் பதுக்கல் விவகாரம்: தமிழக பா.ஜ.,வில் பூதாகரம்; தனி குழு அமைத்து விசாரிக்கப்படும்?

சென்னை: லோக்சபா தேர்தல் செலவுக்கு கட்சி மேலிடம் வழங்கிய பணத்தை, தமிழக பா.ஜ.,வில் பல நிர்வாகிகள் பதுக்கி விட்டதாக தொடர்ந்து புகார்கள் எழுகின்றன. இந்த விவகாரம் குறித்து கட்சி மேலிடம் தனி குழு அமைத்து விசாரிக்குமா என்ற எதிர்பார்ப்பு தொண்டர்களிடம் எழுந்துள்ளது.தமிழகத்தில் ஏப்.19ல் லோக்சபா தேர்தல் நடந்தது. பா.ஜ., தலைமையிலான கூட்டணியில் அக்கட்சி 19 தொகுதிகளில் நேரடியாக போட்டியிட்டது. தேர்தல் பணியில் ஈடுபட்ட பூத் ஏஜன்ட்கள் ஐந்து பூத்களுக்கு பொறுப்பாளரான சக்தி கேந்திரா நிர்வாகிகள், மண்டல தலைவர்கள், மாவட்ட நிர்வாகிகளை கவனிக்க கட்சி மேலிடம் சார்பில் தேர்தல் செலவு தொகை வழங்கப்பட்டது.அதன்படி ஒரு தொகுதிக்கு 15 கோடி ரூபாய் வரை தேர்தல் செலவுக்கு பணம் வழங்கப்பட்டது. இந்தப் பணத்தில் ஒரு பூத்திற்கு 50,000 ரூபாய் வரையும்; மண்டல நிர்வாகிகளுக்கு தலா 20,000 ரூபாய்; மாவட்ட நிர்வாகிகளுக்கு தலா 30,000 ரூபாயும் வழங்கப்பட்டது.வேட்பாளர்கள், தொகுதி பொறுப்பாளர்கள் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பணம் வழங்கும் பணியில் ஈடுபட்டனர். பல தொகுதிகளில் கட்சி மேலிடம் வழங்கிய பணத்தை முழுதுமாக கட்சியினருக்கு வழங்காமல் நிர்வாகிகள் பதுக்கி விட்டதாக புகார்கள் எழுந்துள்ளன. அதேபோல தேனி, ராமநாதபுரம் போன்ற தொகுதிகளில் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் தரப்பில் தரப்பட்ட பணத்தையும் பா.ஜ., நிர்வாகிகள் பதுக்கி விட்டதாக புகார் கூறப்பட்டுள்ளது.பணம் பதுக்கிய விவகாரம் தொடர்பாக, பல தொகுதிகளில் பா.ஜ., நிர்வாகிகள் இடையே மோதலும் ஏற்பட்டு வருகிறது. இதுகுறித்து மத்திய சென்னை, மதுரை தொகுதிகளில் இருந்து மேலிடத்திற்கு புகார் அனுப்பி வருகின்றனர். தொகுதிகளில் பணம் பதுக்கியவர்களின் பெயர்கள் போஸ்டர்களாக ஒட்டப்பட்டும் வருகின்றன.இதுகுறித்து பா.ஜ., வட்டாரங்கள் கூறியதாவது: தேர்தல் செலவுக்கு வழங்கிய பணம் முறையாக கட்சியினருக்கு செலவிடப்பட்டதா என்பதை மேலிடம் ஆய்வு செய்ய வேண்டும். பணம் பதுக்கிய விவகாரத்தில் மாநில நிர்வாகிகளின் பெயர்களும் இடம் பெறுகின்றன. எனவே இந்த விவகாரம் குறித்து விசாரிக்க பிற மாநில தலைவர்கள் அடங்கிய குழுவை நியமிக்க வேண்டும்.அவர்கள் வாயிலாக ஒவ்வொரு தொகுதியிலும் பணியாற்றிய தொண்டர்களுக்கு எவ்வளவு தொகை வழங்கப்பட்டது என்பது குறித்து விசாரிக்க வேண்டும். அப்போது கட்சி மேலிடத்திற்கு தேர்தல் செலவு குறித்த உண்மை விபரம் தெரியவரும். பணம் பதுக்கியவர்கள் யாராக இருந்தாலும், கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த வட்டாரங்கள் கூறின.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 18 )

N.Arumugam
மே 04, 2024 09:34

திராவிட கட்சிகளில் இந்த முறை பணம் பதுக்கல் பற்றிய பெரிய குற்றச்சாட்டுகள் இல்லை, முன்னாள் இந்நாள் மாண்புமிகுக்கள் அவர்களது பர்ஸை திறக்கவில்லை என்ற புகார்கள் தான் பெருமளவில் அங்கு பேசப்படுகிறது இங்கு தான் காவல் நிலையம் செல்லு மளவு தகராறு தேர்தலில் தகராறு செய்ய அனைத்து கட்சிகளிலும் இருந்தும் ரெளடிகளை இறக்குமதி செய்தனர் இப்போது அவர்களாலேயே தகராறு இந்த ரெளடிகளை வழியனுப்பிய கட்சிகள் ஹாயாக இருக்கின்றன


Sck
மே 03, 2024 20:49

திமுகவில் இருந்தும், அதிமுகவில் இருந்தும், மந்தை மந்தையாக ஆடுகளை கட்சிக்குள் சேர்த்தால் இப்படிதான் கட்சிக்குள் இல்லாத புதுப் புது பழக்கங்கள் உள்ளே லரும். பாஜகவும் திருட்டு திராவிடியா கட்சிகள் போல் மாறும்.


SUBRAMANI
மே 03, 2024 20:12

தொகுதிக்கு ₹ கோடி செலவு தேர்தல் கமிஷன் இதை தன்னிச்சையாக விசாரிக்குமா?


N PALANISAMY
மே 03, 2024 20:01

உலகத்திலேயே யோக்கியமான கட்சி இந்த பாரதி ராஜா கட்சி நம்புங்க


Rajathi Rajan
மே 03, 2024 18:52

பாரதத்தின் தீய,,,, ஜாக்கி கட்சின் மாடல் வளர்ப்பு


ராம்கி
மே 03, 2024 18:23

இதுப்போன்றவர்களின் செயல்களால் கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை அவர்களின் இரவு பகல் பாராது அயராது உழைத்த உழைப்பின் பலன் விழலுக்கு இறைத்த நீராகவிட்டதா? களைகல் களையப்படுவது கட்சியின் வளர்ச்சிக்கு நல்லது


Mahendran Puru
மே 03, 2024 21:38

அந்த அ மலையே நண்பர்கள் தயவில் மாதம் எட்டு லட்சம் நிதியுதவி பெற்று அயராது உழைக்க கட்சியினர் இப்படி செய்யலாமா


venkatakrishna
மே 03, 2024 15:36

ஆரம்பமே திராவிட கட்சிகளை மிஞ்சிவிடும் போல உள்ளதே


Sck
மே 03, 2024 20:51

கடந்த 5 ஆண்டுகளில் பாஜகவில் இணைந்து நாசம் பண்ணுவது யாருன்னு நினைக்கிறீங்க.


venugopal s
மே 03, 2024 14:58

தமிழக அரசியல்வாதிகள் எந்தக் கட்சியைச் சேர்ந்தவராக இருந்தாலும் நேர்மை என்றால் வீசை என்ன விலை என்று கேட்பார்கள்!


MADHAVAN
மே 03, 2024 12:23

ஓட்டுக்கு ஒரு ரூபா தரமாட்டேன் னு சொன்னவரு, பணத்தை அப்படியே மேலிடத்துக்கு அனுப்பி வச்சுட்டாரு,


ஆரூர் ரங்
மே 03, 2024 10:21

அதிமுக அனுப்பிய பணத்தை உள்ளூர் ஆட்கள் சட்டசபைத் தேர்தலுக்கு பயன்படுத்த ஒதுக்கி விட்டார்களாம். தி.மு.க விநியோகம் சோஸலிச விநியோகம். தொண்டர் முதல் வாக்காளர்கள் வரை எல்லோருக்கும் பலன் .


மேலும் செய்திகள்











புதிய வீடியோ