உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / புதிதாக தேர்வாகியுள்ள கோவை எம்.பி.,யிடம் மக்கள் எதிர்பார்ப்பு! இரு அரசுகளிடமும் பெற வேண்டியது ஏராளம்!

புதிதாக தேர்வாகியுள்ள கோவை எம்.பி.,யிடம் மக்கள் எதிர்பார்ப்பு! இரு அரசுகளிடமும் பெற வேண்டியது ஏராளம்!

கோவையில் 28 ஆண்டுகளுக்குப் பின்பு, தி.மு.க.,வுக்கு எம்.பி., கிடைத்துள்ளதால், மத்திய, மாநில அரசுகளுக்கு இடையே பாலமாக இருந்து திட்டங்களை நிறைவேற்ற வேண்டுமென்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.லோக்சபா தேர்தலில், கோவை தொகுதியில் போட்டியிட்ட அண்ணாமலை வெற்றி பெற்றால் மத்திய அமைச்சராவார்; அதனால் கோவைக்குப் பல திட்டங்கள் கிடைக்கு மென்று, கொங்கு மண்டலத்திலுள்ள தொழில் அமைப்பினர் பலரும் பெரும் எதிர்பார்ப்பில் இருந்தனர். அவருடைய வெற்றிக்காக நேரடியாகவும், மறைமுகமாகவும் பணியாற்றினர்.ஆனால் எதிர்பாராத விதமாக, அவர் தோல்வியடைந்துள்ளார்; மாநிலத்தில் ஆளும்கட்சியாகவுள்ள தி.மு.க., சார்பில் நிறுத்தப்பட்ட வேட்பாளர் ராஜ்குமார் வெற்றி பெற்று, கோவை எம்.பி.,யாக பொறுப்பேற்கவுள்ளார். இதன் மூலமாக, 28 ஆண்டுகளுக்குப் பின், தி.மு.க.,வுக்கு கோவை எம்.பி.,யாகும் வாய்ப்பு கிடைத்துள்ளது. இது ஒரு வகையில், கோவை மக்களுக்கு ஆறுதல் பரிசாகவுள்ளது.மத்தியில் ஆளும்கட்சியிடம் கேட்டுப் பெறும் நிலையில் கோவை எம்.பி., இல்லாவிட்டாலும், மாநில அரசிடம் கோவைக்கான தேவைகளை எடுத்துச் செல்ல ஒருவர் கிடைத்துள்ளதாக மக்கள் நினைக்கின்றனர். ஏனெனில் இப்போது கோவை மாவட்டத்தில் தி.மு.க.,வுக்கு ஒரு எம்.எல்.ஏ.,வும் இல்லாத நிலையில், வெளி மாவட்ட அமைச்சர்களே, இந்த மாவட்டத்துக்குப் பொறுப்பாளராக இருந்தனர்.அவ்வாறு நியமிக்கப்பட்ட முன்னாள் அமைச்சரும் சிறை சென்று விட்டதால், பொள்ளாச்சி எம்.பி., மட்டுமே, ஆளும்கட்சியின் பிரதிநிதியாக, அரசு அதிகாரிகள் கூட்டங்களில் பங்கேற்று வந்தார். இப்போது தி.மு.க.,வைச் சேர்ந்தவரே, கோவை எம்.பி.,யாகி விட்டதால், இந்த கூட்டங்களை இவர் வழி நடத்தும் வாய்ப்பு உருவாகியுள்ளது.கடந்த 1999-2004க்குப் பின்பு, கோவையில் ஆளும்கட்சி எம்.பி., யாரும் வெற்றி பெறவில்லை. இந்த 20 ஆண்டுகளில், தலா ஒரு முறை இந்திய கம்யூ., மற்றும் அ.தி.மு.க., இரு முறை மா.கம்யூ., ஆகிய கட்சிகளின் எம்.பி.,க்கள் பதவி வகித்துள்ளனர். இவர்கள் அனைவருமே எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் என்பதால், கோவைக்கு எந்தவொரு பெரிய திட்டமும் கிடைக்கவில்லை.தற்போது, தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள எம்.பி.,கோவையின் தேவைகளை உணர்ந்து, வளர்ச்சிக்காக குரல் கொடுக்க வேண்டும். இரண்டு அரசுகளுக்கும் இடையில் பாலமாக இருந்து, கோவைக்கு பல திட்டங்களைக் கொண்டு வரவும் முயற்சி எடுக்க வேண்டும்.உதாரணமாக, கோவை விமான நிலைய விரிவாக்கத்துக்கு தமிழக அரசு விதித்துள்ள நிபந்தனைகளை நீக்கவோ அல்லது மாற்றவோ முதல்வரிடம் பேச வேண்டும்; கோவை மெட்ரோ, கோவை சந்திப்பு, எல் அண்ட் டி பை பாஸ் விரிவாக்கம், கிழக்கு புறவழிச்சாலை, கோவை-கரூர் பசுமை வழிச்சாலை போன்ற திட்டங்கள் குறித்து லோக்சபாவில் பேசி, மத்திய அரசிடம் நிதியைப் பெற வேண்டும்.அத்துடன், கோவையில் தொழில் வளர்ச்சிக்குத் தேவையான கோரிக்கைகளையும், நகர வளர்ச்சிக்கு அவசியமான கட்டமைப்பு மற்றும் போக்குவரத்துத் திட்டங்களையும் விரைவாக நிறைவேற்ற முதல்வரிடம் பேச வேண்டும். இவற்றைச் செய்வது தான், லோக்சபா தேர்தல்களில் தொடர்ந்து தி.மு.க.,வை ஆதரிக்கும் கோவை மக்களுக்குச் செய்யும் குறைந்தபட்ச நன்றியாக இருக்கும்.

அண்ணாமலையிடம் எதிர்பார்ப்பு

கோவை தொகுதியில் போட்டி யிட்ட பா.ஜ., வேட்பாளர் அண்ணாமலை, 500 நாட்களில் 100 வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் என்று தேர்தல் அறிக்கை கொடுத்தார். இப்போது அவர் தோல்வியடைந்திருந்தாலும், மத்தியில் மீண்டும் பா.ஜ., தலைமையிலான ஆட்சி தான் தொடர்கிறது. அண்ணாமலை ராஜ்யசபா எம்.பி.,யாக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. அதனால், கோவைக்கு அறிவித்த வாக்குறுதிகளை அண்ணாமலை நிறைவேற்றுவார் என்று மக்கள் எதிர்பார்க்கின்றனர். கடந்த பத்தாண்டு களாக பா.ஜ., ஆட்சியில் இருந்தும் விமான நிலைய விரிவாக்கம், புறவழிச்சாலை மற்றும் பசுமை வழிச்சாலைத் திட்டங்கள் நிறைவேற்றப்படவில்லை என்று எதிர்க்கட்சியினர் குற்றம்சாட்டி வந்தனர். கோவையில் பா.ஜ., தோற்று விட்டதால், மீண்டும் இந்தத் திட்டங்கள் கிடப்பில் போடப்படுமோ என்ற அச்சம், மக்களிடம் எழுந்துள்ள நிலையில், அதைப்போக்கி, திட்டங் களைக் கொண்டு வர வேண்டிய பொறுப்பு, அண்ணாமலைக்கு உள்ளது. -நமது நிருபர்-


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 14 )

Neelamegam
ஜூன் 11, 2024 19:31

கோவை பாராளுமன்ற உறுப்பினர் பணம் கொடுக்காமல் வெற்றி பெற்று இருந்தால் தேவைகளை கேட்டு பெறலாம் பணமும் கொடுத்து சேவைகளும் தேவை என்றால் என்ன நியாயம் அண்ணாமலை யிடம் எதிர்பார்ப்பது என்ன நியாயம் அப்படியே அண்ணாமலை மத்திய அரசிடம் கேட்டு பெற்றால் யார் அப்பன் வீட்டு பணம் என்று கேட்டு அவமான படுத்தவா???


Bhaskaran
ஜூன் 11, 2024 10:56

அட போங்கப்பா


அண்ணாமலை ஜெயராமன்
ஜூன் 09, 2024 15:09

போன பத்து வருடம் திமுக MP க்கள் பாராளுமன்றத்தில் என்ன செய்தார்கள், அதையே தான் இவரும் செய்வார்


விஜய்
ஜூன் 07, 2024 20:09

அண்ணாமலைய ஜெயிக்க வச்சிருந்தா வேற லெவல்


Palay Venkat
ஜூன் 07, 2024 18:09

To take stock of Parliament Canteen


ஜனா
ஜூன் 07, 2024 16:05

போங்க... போங்க. இன்னும் அஞ்சு வருஷத்துக்கு நான் பிசி.


Jaganathan R
ஜூன் 07, 2024 15:23

ஒரு மண்ணும்நடக்காது


ஆரூர் ரங்
ஜூன் 07, 2024 11:36

பத்தாண்டுகளாக ஒரு லோக்சபா எம்பி கூட சரியாக செயல்படவில்லை.


maan
ஜூன் 07, 2024 09:33

தமிழக மக்கள் ஒன்றை முதலில் புரிந்து கொள்ள வேண்டும். கையில காசு, வாயில தோசை. இனி 5 வருஷம் குண்டு சட்டிக்குள்ளயே குதிரை ஓட்டிக்க வேண்டியதுதான் ? அண்ணாமலை எந்த திட்டத்தை கொண்டு வந்தாலும் திமுக ஸ்டிக்கர் ஒட்டும். பிஜேபி க்கு தேவையா?


N Sasikumar Yadhav
ஜூன் 07, 2024 08:46

திராவிட மாடல் எம்பித்தானே அவர்களுக்கு சுடச்சுட கேண்டினில் வடை சமோசா செய்தால் வாசனை பாராளுமன்றத்தில் மூக்கை துளைக்கும் உடனடியாக ஏதாவது சாக்குபோக்கு சொல்லி வெளிநடப்பு செய்து நேராக கேண்டினுக்கு போய் ஒரு கட்டுகட்டுவார்கள் மற்றபடி சொல்லிக்கொள்கிற மாதிரி ஒன்றும் நடக்காது ஓட்டெல்லாம் ஓசிக்கும் இலவசத்துக்கும் ஆசைப்பட்டு ஊழல்வாதிகளுக்கு போட்டுவிட்டு தங்களுடைய தொகுதிக்கு நல்லது நடக்குமென எப்படி எதிர்பார்க்க முடியும்


தமிழ்
ஜூன் 07, 2024 11:47

உன்னைமாதிரியே எல்லாரையும் நினைத்துக்கொண்டால் எப்படி.


மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ