உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / ஊசலாடும் மாநில அரசுகள்!

ஊசலாடும் மாநில அரசுகள்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

லோக்சபா தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற்று வருகிறது. ஜூன் 4ல் ஓட்டு எண்ணிக்கை; அன்று மதியமே யார் மத்தியில் ஆட்சி அமைக்கின்றனர் என்பது தெரிந்துவிடும். இதுவரை, வெளியான கருத்து கணிப்புகள் அனைத்துமே, மோடி மூன்றாவது முறையாக பிரதமர் ஆவார் என தெரிவித்துள்ளன.'பா.ஜ., மீண்டும் ஆட்சி அமைத்தால் இரண்டு மாநில அரசுகள் கவிழ வாய்ப்புள்ளது' என, பா.ஜ., வட்டாரங்களில் பேசப்படுகிறது. ஹிமாச்சல பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சி நடைபெறுகிறது; ஆனால், உள்குத்து அதிகம். சமீபத்தில் நடந்த ராஜ்ய சபா தேர்தலில், காங்., - எம்.எல்.ஏ.,க்கள் பா.ஜ.,விற்கு ஓட்டளிக்க, காங்., வேட்பாளர் தோற்றார். இந்த ஆறு எம்.எல்.ஏ.,க்கள் பதவி நீக்கம் செய்யப்பட்டனர்; இவர்கள் தற்போது பா.ஜ.,வில் சேர்ந்து விட்டனர்.தவிர, ஹிமாச்சல பிரதேச காங்., தலைவர் பிரதிபா சிங்கிற்கும், முதல்வர் சுக்வீந்தர் சிங் சுகுவிற்கும் ஏற்கனவே மோதல். இதற்கிடையே, சில காங்., தலைவர்கள் பா.ஜ.,வில் இணைந்து விட்டனர். எப்போது கவிழும் என, ஊசலாடிக் கொண்டிருக்கிறது காங்., ஆட்சி.அடுத்து, பஞ்சாபில் ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சி நடக்கிறது. இங்கும் முதல்வர் பகவந்த் சிங் மானுக்கும், கட்சி தலைவர்களுக்கும் இடையே நல்ல உறவில்லை; இங்கும் சில தலைவர்கள் பா.ஜ., பக்கம் ஓடிவிட்டனர். பா.ஜ., மீண்டும் ஆட்சிக்கு வந்தால், இந்த இரண்டு மாநில அரசுகளுக்கும் பெரும் பிரச்னை வரும் என்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

Jysenn
ஏப் 21, 2024 17:01

What about the Kanja state?


sultan
ஏப் 21, 2024 13:03

இதிலென்ன பெருமை


raja
ஏப் 21, 2024 09:37

திருட்டு மாடல் போதை கடத்தல் மாடல் என்று இங்கிருக்கும் அரசை கலைக்க வேண்டும் என்று தமிழன் ஆவலாய் இருக்கிறான் செய்வாரா மோடி


முருகன்
ஏப் 21, 2024 20:51

உங்கள் தனிப்பட்ட ஆசை மக்கள் ஆசை இல்லை


Sathyan
ஏப் 21, 2024 08:43

In TN, we have a situation where state government is evading GST to central government, provides a conducive environment for sale of products like Kanja, Meth, LSD, etc, Further, for the attrocity happened in vengai vayal, culprits are either not identified or being protected The fact that people belonging to Vengai Vayal and Paranthur areas boycotting election convey a loud and clear message about the trust worthiness of the state government TR Balu ly confessed about destroying temples and ARaja called Hindus ... How long we should tolerate this government?


மணியன்
ஏப் 21, 2024 07:57

தமிழகத்தில் உள்ள நிலைமை,வரம்புமீறிய ஊழல்,அரசு இயந்திரம் திராவிடமயம்,கஞ்சா,டாஸ்மாக்,ஊழியர்களின் உச்சகட்ட ஆணவம்,கழுத்தை நெரிக்கும் மின்கட்டணம்,அனைத்து வரிகள் உயர்வு.இதற்க்கெல்லாம் தீர்வு ஜனாதிபதி ஆட்சி.ஜூன் 4ல் மூன்றாவது முறை ஆட்சிக்கு வந்தவுடன் தமிழகத்தை அரசியல் சட்டத்தில் உள்ள அதிகாரத்தை பயன்படுத்தி மத்திய அரசு ஆட்சியை அமல்படுத்த படுத்தி காப்பாற்ற வேண்டும்.


J.V. Iyer
ஏப் 21, 2024 07:09

பிள்ளையாருக்கு உடைத்த தேங்காய்போல சிதறும் காங்கிரஸ், INDI கும்பல்கள் இவர்களுக்குள் என்ன கொள்கை பற்றா என்ன?


INanthagopal Nanthagopal
ஏப் 21, 2024 09:10

சட்டமன்ற உறுப்பினர்களை திருடி ஆட்சி அமைக்கும் அதிகார வெறி பிடித்தவர்கள் இருக்கும் வரை நாட்டுக்கு விமோசனம் இல்லை ஊழல் வாதிகளை சுத்தம் ஆக்கும் வாஷிங் மெசின் கட்சி ஒழிய வேண்டும்


மேலும் செய்திகள்







புதிய வீடியோ