உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / தவறான தகவலளித்த பி.டி.ஓ., சஸ்பெண்ட்; ரணத்தில் வேல் பாய்ச்சுவதாக உதய்க்கு எதிர்ப்பு

தவறான தகவலளித்த பி.டி.ஓ., சஸ்பெண்ட்; ரணத்தில் வேல் பாய்ச்சுவதாக உதய்க்கு எதிர்ப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சிவகங்கை: மதுரையில் வளர்ச்சிப் பணிகளை ஆய்வு செய்தபோது அமைச்சர் உதயநிதியால் எடுக்கப்பட்ட நடவடிக்கையை தொடர்ந்து, வருவாய்த் துறை அலுவலர்களுக்கு இடமாறுதல் உத்தரவு வழங்கியது, சிலரை சஸ்பெண்ட் செய்திருப்பதெல்லாம், 'ரணத்தில் வேலை பாய்ச்சியுள்ளது போல இருக்கிறது' என, தமிழ்நாடு வருவாய் அலுவலர்கள் சங்கத்தினர், உதயநிதிக்கு எதிராக கொந்தளித்துள்ளனர். இதற்கிடையில், அமைச்சர் உதயநிதி ஆய்வு கூட்டத்தில் தவறான தகவல் தந்ததாக திருப்புத்துார் பி.டி.ஓ., வி.சோமதாசை, கலெக்டர் ஆஷா அஜித் 'சஸ்பெண்ட்' செய்தார். சிவகங்கை மாவட்ட வளர்ச்சி பணிகள் குறித்த ஆய்வு கூட்டம், செப்., 10ல் கலெக்டர் ஆஷா அஜித் தலைமையில் நடந்தது.

அதிருப்தி

அமைச்சர் உதயநிதி, துறை வாரியாக 'முதல்வரின் முகவரி' திட்டத்தில் வந்த மனுக்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என அதிகாரிகளிடம் விசாரணை செய்தார்.அப்போது, திருப்புத்துாரில் முட்புதர்களை அகற்றாததால், விஷப் பூச்சிகள் வருவதாக அளித்த புகாரின்படி, எந்தவித நடவடிக்கையையும் திருப்புத்துார் ஊராட்சி ஒன்றிய பி.டி.ஓ., வி.சோமதாஸ் எடுக்கவில்லை.ஆனால், ஆய்வு கூட்டத்தில் அமைச்சர் கேட்டபோது, நடவடிக்கை எடுத்ததாக தவறான தகவல் கொடுத்துள்ளார்.ஆய்வு கூட்டத்திலேயே மனுதாரரின் மொபைல் போனுக்கு அழைத்து பேசிய உதயநிதி, எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிவித்ததும் அதிருப்தியானார்.இதையடுத்து, ஆய்வு கூட்டத்தில் தவறான தகவல் அளித்ததாக பி.டி.ஓ.,வை சஸ்பெண்ட் செய்து கலெக்டர் உத்தரவிட்டார்.செப்., 10ல் நடந்த ஆய்வு கூட்டத்தில் பொதுமக்கள் வழங்கிய மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கையின் உண்மை தன்மையை அறிய, அதிகாரிகள் செப்., 9ல் கல்லல் ஒன்றியத்தில் ஆய்வு செய்தனர்.அன்று காலை 9:30 மணிக்கு மேல், கல்லல் இந்திரா நகர் அங்கன்வாடி மைய பணியாளர் விஜயாள், உதவியாளர் மாலதி, கே.வைரவன்பட்டி அங்கன்வாடி மைய உதவியாளர் ரேணுகாதேவி ஆகியோர் காலதாமதமாக வந்ததாக, அமைச்சர் உதயநிதி நடத்திய ஆய்வு கூட்டத்தில் அறிக்கை அளித்தனர்.

பணியிட மாற்றம்

இதன் தொடர்ச்சியாக, கல்லல் இந்திரா நகர் அங்கன்வாடி மைய பணியாளர் விஜயாள், காந்திநகர் காலனிக்கும்; உதவியாளர் மாலதி ஆலங்குடிக்கும்; கே.வைரவன்பட்டி உதவியாளர் ரேணுகாதேவி, உடையநாதபுரத்திற்கும் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 14 )

B RAJARATHINAM
செப் 13, 2024 10:09

ஐயா அதிகாரிகளுக்கு லஞ்சம் வாங்கவே நேரமில்லை இதில் எப்படி அரசு பணி செய்வார்கள்.இதில் அரை சதவீதம் பேர் கிறிதுவர்களாக மாறியவராகள்.அவர்கள் மதமாற்றத்தில் ஈடுபடுவார்களா அல்லது வேலை பார்பார்களா.சம்பளமும் கிம்பளமும் கிடைக்கும்போது ஏன் வேலை செய்ய வேண்டும்


Perumalsamy
செப் 13, 2024 09:32

பலமுறை முதலமைச்சர் தனிப்பிரிவில் மனு கொடுத்தும் சொந்த இடத்திற்கு பட்டாவிற்கு நாயாக அலைகிறேன் ஒரு நடவடிக்கையும் இல்லை சிவகாசி தாலுகா ஆபீசில் சர்வேயர் பலமுறை போன வாரம் கூட அளந்து வரைபடம் போட்டு ஆன்லைனிலும் ஏத்தி விட சொன்னார் இன்னும் நடவடிக்கை இல்லை


PREMASEKHAR HARRIS SARASAMMA
செப் 12, 2024 22:51

போலி வாக்குறுதிகளை வாரி வழங்கி மக்களை வஞ்சித்து வாக்குகளை பெற்று பதவிக்கு வந்த பின் அவர்களை ஏமாற்றும் திருட்டு திராவிட மாடல் அரசுக்கு என்ன தண்டனை


NATARAJAN R
செப் 12, 2024 21:31

அரசு அதிகாரிகள் யாரும் ஒழுங்காக வேலை செய்யவில்லை. தமிழக முதல்வரின் தனி பிரிவுக்கு இவர்கள் அனுப்பும் தவறான/பொய்யான தகவல்கள் ஒரு உதாரணம். நான் கோவையில் மேற்கு மண்டலம் வார்டு எண் 44 ஒரு சாலை 8 வருடமாக போடாமல் பழுது அடைந்த நிலையில் உள்ளது.இதுவரை தமிழக முதல்வரின் தனி பிரிவுக்கு 26 மனு கடந்த ஒரு வருடமாக அனுப்பி வருகிறேன். கடந்த வருடம் நவம்பர் மாதம் முதல் புகார். உடனே கோரிக்கை ஏற்கப்பட்டது.விரைவில் சாலை போடப்படும் என்று பதில். ஒரு வருடமாகிறது. இன்று வரை சாலை போடவில்லை. ஒவ்வொரு புகாருக்கும வித விதமான பதில் வரும். விரைவில் சாலை போடப்படும். அடுத்த பதில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமுலில் உள்ளது. அடுத்த பதில் தேர்தல் முடிவுகள் வந்தவுடன் சாலை போடப்படும் அடுத்த பதில் அடுத்த நிதி ஆண்டில் நிதி ஒதுக்கீடு செய்ய அனுமதி பெற்று சாலை போடப்படும். அடுத்த பதில் சாலை சரி செய்யப்பட்டது. பொய் தகவல் இன்று வரை சாலை போடவில்லை. 4 வருடமாக ஏன் சாலை போடவில்லை என்ற கேள்விக்கு பதில் இல்லை. தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் விபரம் கேட்டேன் பதில் இல்லை எனவே தமிழக முதல்வரின் தனி பிரிவுக்கு தவறான தகவல் தரும் இவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது நியாயமான செயல்


Ramesh Sargam
செப் 12, 2024 20:51

பணியிடை மாற்றம் செய்ததாக செய்தி உள்ளது. அப்படி பணியிடை மாற்றம் செய்யப்பட்டவர்கள். புதிய பணியிடத்தில் நேர்மையாக பணியாற்றுவார்கள் என்பது என்ன நிச்சயம்? மாறாக, என்னய்யா நீ பணியிடை மாற்றம் செய்தாய், இனி எந்தப்பணியும் நான் செய்யமாட்டேன் என்று வீம்பு செய்தால் அவர்களை அமைச்சர் அல்லது கலெக்டர் என்ன செய்வதாக உத்தேசம்?


Narayanasamy
செப் 12, 2024 20:50

மிகச்சரியான நடவடிக்கை


Narayanasamy
செப் 12, 2024 20:48

நடவடிக்கை எடுத்ததில் தவறு ஏதுமில்லை. புகார் மீது நடவடிக்கை எடுக்கமாட்டார்கள்.ஆனால் எடுத்ததாக பொய் சொல்லலாமா.


Arachi
செப் 12, 2024 19:11

அரசு திட்டங்களை அடுத்தடுத்து இருக்கும் துறைசார்ந்த அலுவலர்கள் தான் நிறைவேற்ற வேண்டும். இதில் சுணக்கம் ஏற்பட்டால் திட்டங்களை குறிப்பிட்ட காலத்திற்குள் நிறைவேற்ற முடியாது. ஒதுக்கப்பட்ட நிதியும் வீணாகிவிடும் என்பதை அந்தந்த பொறுப்புள்ள அரசு அலுவலர்கள் உணரவேண்டும்.


Ramalingam Ayyanar
செப் 12, 2024 18:43

தவறான தகவலை பதிலாகச் சொன்னவருக்கு சஸ்பென்ட் ஆர்டர் சரி , ஆனால் தவறான வாக்குறுதியளித்து ஆட்சியைப்பிடித்தவர்களை என்ன செய்வது ?


ஆரூர் ரங்
செப் 12, 2024 15:02

அப்போ தவறான நிறைவேற்றமுடியாத முதல் கையெழுத்து வாக்குறுதியளித்ததற்கு என்ன தண்டனை?. நம்பி ஏமாந்து வாக்களித்தவர்கள் ஆளுக்கு ஒரு அடி?


pattikkaattaan
செப் 12, 2024 22:39

மத்திய அரசுக்கும் இது பொருந்துமா ஐயா?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை