உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / புதரில் உருவாகும் ஒட்டுண்ணியால் ஸ்க்ரப் டைபஸ் காய்ச்சல் வரலாம்

புதரில் உருவாகும் ஒட்டுண்ணியால் ஸ்க்ரப் டைபஸ் காய்ச்சல் வரலாம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: புதர் மண்டிய பகுதிகளில், 'ஓரியன்டியா சுட்சுகாமுஷி' என்ற ஒட்டுண்ணியால், 'ஸ்க்ரப் டைபஸ்' காய்ச்சல் பாதிப்பு ஏற்படும் என, பொது சுகாதாரத்துறை எச்சரித்து உள்ளது.நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்தவர் கந்தசாமி, 57. காய்ச்சலால் பாதிக்கப்பட்ட இவர், சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

உயிரிழந்தார்

அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில், 'ஓரியன்டியா சுட்சுகாமுஷி' ஒட்டுண்ணி பூச்சி கடிப்பதால் ஏற்படும், 'ஸ்க்ரப் டைபஸ்' காய்ச்சல் பாதிப்பு கண்டறியப்பட்டது.அவருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், சமீபத்தில் உயிரிழந்தார். அவரது கிராமமான, நாமகிரிப்பேட்டை இந்திரா நகர் பகுதியில், 840 குடும்பங்களில் வசிப்போருக்கும், 'ஸ்க்ரப் டைபஸ்' காய்ச்சலால் பாதிப்பு இருக்கிறதா என, அம்மாவட்ட சுகாதார அதிகாரிகள் பரிசோதனை செய்து வருகின்றனர்.இந்நிலையில், வந்தவாசி, திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில், புதர் மண்டிய பகுதிகளுக்கு அருகில் வசிப்போர் மாதந்தோறும், 50 முதல் 100 பேர் வரை, 'ஸ்க்ரப் டைபஸ்' காய்ச்சலால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதை ஆரம்ப நிலையில் கண்டறிந்து, சிகிச்சை அளித்தால் குணப்படுத்த முடியும் என, பொது சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது.இதுகுறித்து, பொது சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறியதாவது:'ஸ்க்ரப் டைபஸ்' பாதிப்பு ஏற்பட்டால், பூச்சி கடித்த இடத்தில் சிவப்பு, சிவப்பாக சிறிய தடுப்புகள் ஏற்படும். தலைவலி, குளிர் காய்ச்சல் போன்ற அறிகுறிகள் இருக்கும். ஆரம்பத்தில் கண்டறியாமல் அலட்சியப்படுத்தினால், பூச்சி கடித்த இடத்தில் ரத்தக்கட்டு ஏற்பட்டு, உள்ளுறுப்புகள் செயலிழக்கும். இதன் வாயிலாக, கோமா, மரணம் உள்ளிட்ட தீவிர பிரச்னைகள் உருவாகும்.

மாதம் 100 பேர் பாதிப்பு

மலை பகுதிகள், புதர் மண்டிய இடங்களில், 'ஸ்க்ரப் டைபஸ்' ஒட்டுண்ணி பூச்சிகள் அதிகம் காணப்படுகின்றன. மாதந்தோறும், 50 முதல் 100 பேர் வரை பாதிக்கப்பட்டாலும், உடனடி சிகிச்சையில் குணமடைந்து விடுகின்றனர். அறிகுறிகளை அலட்சியப்படுத்தும் ஓரிருவர் உயிரிழக்கும் நிலை ஏற்படுகிறது.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

R.MURALIKRISHNAN
ஜூலை 16, 2024 14:14

உதறல் அவசியம்.


RAMAKRISHNAN NATESAN
ஜூலை 16, 2024 13:23

திமுகவை விட ஆபத்தானது உலகில் வேறு ஏதாவது உண்டா ????


Iniyan
ஜூலை 16, 2024 03:19

இது என்ன புதுசு புதுசா பீதிய கிளப்பறாங்க


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை