உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / எஸ்.இ.டி.சி., பஸ் முன்பதிவு சுறுசுறுப்பு இல்லாதது ஏன்?

எஸ்.இ.டி.சி., பஸ் முன்பதிவு சுறுசுறுப்பு இல்லாதது ஏன்?

திருப்பூர்: அறிவிப்பு வெளியிடப்பட்டபோதும், குழு பயணங்களுக்கு அரசு விரைவுபோக்குவரத்து கழகமான எஸ்.இ.டி.சி., பஸ்களை பயணிகள் பயன்படுத்த முடிவதில்லை.பயணிகள் குழுவாக விழாக்களில் பங்கேற்கச் செல்வதற்கும், பிரசித்தி பெற்ற வழிபாட்டு தலங்களுக்கு பயணங்கள் மேற்கொள்ளவதற்கும் ஒப்பந்த அடிப்படையில், குறைந்த கட்டணத்தில் சொகுசு பஸ்களைப் பயன்படுத்தலாம் என்று எஸ்.இ.டி.சி., அறிவித்திருந்தது.ஆடி மாதம் துவங்கும் முன் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டும், மாநில அளவில் சொற்ப அளவிலேயே முன்பதிவாகி உள்ளது.விடுமுறை நாட்கள் மற்றும் விசேஷ நாட்களில் தான் பயணிகள் பஸ்களை எதிர்பார்க்கின்றனர். சென்னை, மதுரை, கோவை, திருநெல்வேலி, கன்னியாகுமரி தவிர்த்த பிற மாவட்டங்களில் குறைந்தளவு பஸ்களே உள்ளன.குழுவாக பயணிப்போர் எதிர்பார்க்கும் நாட்களில் பஸ்கள் இருப்பதில்லை. ஒரு மாதத்திற்கு முன் முன்பதிவு செய்ய வந்தாலும், பயண நாட்களுக்கு ஓரிரு நாட்களுக்கு முன் வருமாறு அதிகாரிகள் கூறுகின்றனர்.'மாவட்டத்துக்கு ஒரு பஸ் அல்லது கோட்டத்துக்கு ஒரு புதிய பஸ் என ஒப்பந்த பயணத்துக்கு ஏற்பாடு செய்ய வேண்டும். இந்த பஸ்சை சிறப்பு முன்பதிவுக்கு மட்டும் ஒதுக்கி விட்டால், முன்பதிவு எளிதாகும்' என்கின்றனர் பயணிகள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Tamilselvan Somasundram
ஆக 08, 2024 07:21

அரசு விரைவு போக்குவரத்து கழகம் மக்கள் நலனுக்காக அல்ல. தனியார் ஆம்னி பேருந்து முதலாளிகளை பயமுறுத்தி பணம் பறிக்கும் கருவி மட்டுமே. அதற்கு செலவாகும் மக்கள் வரிப்பணம் டோட்டல் வேஸ்ட்


ஆரூர் ரங்
ஆக 06, 2024 16:14

கூரை பறந்து போனால் என்ன செய்ய? குடை பிடிக்கணுமா?


RAAJ68
ஆக 06, 2024 14:21

இவங்க நூறு கண்டிஷன்கள் போடுவாங்க அதனால்தான் யாரும் விரும்புவதில்லை. பஸ் பழுதானால் குளிர்சாதனம் வேலை செய்யாவிட்டால் நிர்வாகம் பொறுப்பல்ல என்பார்கள். டயர் பஞ்சர் ஆகிவிட்டால் இவர்களிடம் மாற்று டயர் இருக்காது அப்படி இருந்தாலும் மாற்றுவதற்கு உபகரணங்கள் இருக்காது. 60 கிலோ மீட்டருக்கு மேல் பேருந்து வேகம் போகாது இப்படி எல்லாம் சொல்லுவார்கள்.


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை