உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / தொண்டர்கள் எழுப்பிய கோஷம்: விஜய் கடும் அதிருப்தி

தொண்டர்கள் எழுப்பிய கோஷம்: விஜய் கடும் அதிருப்தி

சென்னை : மாவட்ட செயலர்கள் பட்டியலை முழுமை செய்ய முடியாததால், த.வெ.க., தலைவர் விஜய் அதிருப்தி அடைந்துள்ளார்.கட்சிக்கு, 120 மாவட்ட செயலர்கள் நியமிக்கப்படுவர் என்று, விஜய் அறிவித்திருந்தார். அதன்படி, 95 மாவட்ட செயலர்கள் பட்டியல் படிப்படியாக ஏற்கனவே வெளியிடப்பட்டு விட்டன.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=d0b5oafo&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0நியமிக்கப்பட்ட மா.செ.,க்களை அழைத்து, சமீபத்தில், கட்சியின் 2ம் ஆண்டு துவக்க விழா நடத்தப்பட்டது. மீதமுள்ள மாவட்ட செயலர்களையும் நியமித்த பின், பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டத்தை நடத்த, விஜய் திட்டமிட்டுள்ளார். ஆனால், பதவிகளை பிடிப்பதில் கட்சியினர் மத்தியில் கடும் போட்டி நிலவுகிறது. இதனால், 25 மாவட்ட செயலர்களை நியமிப்பதில் இழுபறி நீடித்து வந்தது.இந்நிலையில், மாவட்ட செயலர்கள் பட்டியலை இறுதி செய்வதற்காக, சென்னை பனையூரில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்திற்கு, நேற்று விஜய் வந்தார்.அவரது வீட்டிற்கு வெளியே கார்கள், இருசக்கர வாகனங்களில் திரண்டிருந்த கட்சியினர், தங்களுக்கு வேண்டியவர்களை, மாவட்ட செயலர்களாக நியமிக்க வேண்டும் என கோஷம் போட்டனர். விஜய் காரை வழிமறித்து கடிதங்களை நீட்டினர். இதனால், கோபம் அடைந்த விஜய், அவர்களை சந்திக்காமல் போய் விட்டார். கட்சி அலுவலகத்திற்குள் சென்ற விஜயை, அங்கிருந்த புகைப்படக் கலைஞர்கள் படம் எடுத்தனர். அவர்களை ஓரமாக நிற்கும்படி கூறி, முறைத்துக் கொண்டே அலுவலகத்திற்குள் விஜய் சென்றார். இதன்பின், மாவட்ட நிர்வாகிகளுடன் நேர்காணல் நடத்தினர். அதன்படி, சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட, 19 மாவட்டங்களுக்கு செயலர் உள்ளிட்ட நிர்வாகிகள் நியமிக்கப்பட்டனர்.இதற்கான பட்டியல் வெளியிடப்பட்டது. எஞ்சியுள்ள, 6 மாவட்ட செயலர்களை நியமிப்பதில் இழுபறி நீடித்து வருகிறது. இதேபோன்று, படிப்படியாக பட்டியல் வெளியிட்டால், முழுமையாக மாவட்ட செயலர்களை நியமிப்பதற்குள், சட்டசபை தேர்தல் வந்து விடும் என, கட்சியின் சமூக வலைதளப் பக்கத்தில், பலரும் கிண்டல் பதிவுகளை வெளியிட்டு வருகின்றனர். இதற்கிடையே, பெண் தொண்டர் ஒருவர் தன் குழந்தைகளுக்கு உதவி கேட்டு, விஜய்யை சந்திக்க முயன்றார். அவருக்கு அனுமதி கிடைக்கவில்லை; இதனால், விஜய் செல்லும்போது, அவர் கோஷம் போட்டார். ஆதரவாளருக்கு ம.செ., பதவி கேட்டு கோஷம் போடுவது, உதவி கேட்க வந்து கிடைக்காததால் கோஷம் போடுவது உள்ளிட்ட கட்சியினர் செயல்பாடுகளால் விஜய் அதிருப்தியில் இருப்பதாக கட்சி நிர்வாகி ஒருவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

angbu ganesh
மார் 15, 2025 12:11

இதுக்குத்தான் அடலீஸ்ட் ஒரு 10 வரைக்கும் படிங்கண்ணா எங்க கேட்டானுங்க இந்த பாழா போன தவக்களை கட்சிக்காரனுங்க


Mr Krish Tamilnadu
மார் 14, 2025 23:23

அடுப்புல நிக்கிறவன், கடுப்புல இருக்க கூடாது னு சொன்ன - பகவதி. இப்படி கட்சி ஆரம்பித்து விட்டு, காண்டா மூஞ்சிய வச்சிக்கலாமா? ரசிகர்கள் ஒவ்வொரு வரும், பொஷசிவ் அதிகம் உள்ள பொண்டாட்டி மாதிரி, சமாளிக்கணும். ரசிப்பு மட்டும்- நா, டாடா காட்டி விட்டு, நீ உன் வேலையா பாரு, நான் என் வேலையா பார்க்கிறேன்னு போய் விடலாம். இது கட்சி, புரிதல் முக்கியம். உங்கள் மக்கள் பணி ஆவா வை, அவர்களின் கை கொண்டு செய்வது. தியானம் மூலம் ஆரோக்கியம். புன்சிரிப்பு மூலம் ஆதரவு. லாங் வே டூ கோ...


NBR
மார் 14, 2025 18:32

DOING POLITICS IN TAMILNADU IS NOT AN EASY ONE. HERE THE PUBLIC BELOW MIDDLE CLASS WILL VOTE AGAINST ONLY MONEY OR THINGS (CONSIDERATIONS). HERE THE PARTIES HAVE SOWN SEEDS LIKE THAT.


nv
மார் 14, 2025 13:55

இந்த கூத்தாடிகளுக்கு வாக்கு அளிப்பது, தற்கொலைக்கு சமம்!


vijai hindu
மார் 14, 2025 11:55

அப்படியாப்பட்ட ரஜினிகாந்த் இந்த கூட்டத்தை வச்சுக்கிட்டு சமாளிக்க முடியாது என்று அரசியல்ல வேணான்னுட்டு ஒதுங்கினார்


chinnamanibalan
மார் 14, 2025 10:43

கடந்த அரை நூற்றாண்டு காலமாக, ஓட்டுக்கு நோட்டு, குவார்ட்டர், கோழி பிரியாணி என, கட்சிகள் தங்களது கொள்ளையில் பங்கு கொடுத்துப் பழகிப் போன தமிழகத்தில், நடிகர் விஜய் நினைப்பது போல், புதிய கட்சியை துவக்கி களம் காண்பது அவ்வளவு எளிதான செயல் இல்லை. இதனை நடிகர் விஜய் விரைவில் உணருவார்.


Mecca Shivan
மார் 14, 2025 10:29

பின்ன திராவிட கொள்கை பாதி இருந்தால் பிரச்சனையும் இருக்கத்தானே செய்யும்


naranam
மார் 14, 2025 10:18

கடைசியில் மையம் கமல்ஹாசன் போல திமுக பாஜக அதிமுக போல ஏதாவது ஒரு பெரிய கட்சியில் சரணடைந்து விடுவார். அப்புறம் பிக் பாஸ் மூலம் கல்லா கட்டலாம்.


Rangarajan Cv
மார் 14, 2025 09:20

Freebies expectations are deep routed amongst indians, very apparent with our people ( in TN)


Bussy Bussy
மார் 14, 2025 08:58

இதுக்கெல்லாம் அப்செட் ஆகாதீங்க தொளபதி. ரெண்டு மூணு எலக்ஷன்ல தோத்தப்புறம் பாருங்க, அவங்களே செலவுக்கு பயந்து பயந்து ஓடிருவாங்க.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை