உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / கவர்னர் புகாரால் 17,810 பள்ளிகளில் ஆய்வு

கவர்னர் புகாரால் 17,810 பள்ளிகளில் ஆய்வு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: தமிழகத்தில், அரசு பள்ளி மாணவர்களின் கல்வித்தரம் மிகவும் குறைந்து விட்டதாக, கவர்னர் ரவி குற்றம் சாட்டி வரும் நிலையில், தமிழக பள்ளி கல்வித்துறை அதிகாரிகள், ஒரு மாதத்தில், 17,810 பள்ளிகளை ஆய்வு செய்துள்ளனர்.'தமிழகத்தில் கல்வியை மேம்படுத்தும் வகையில், கிராமங்களிலும் பள்ளிகளை அமைத்தவர் முன்னாள் முதல்வர் காமராஜர். ஆனால், அந்த பள்ளிகளில் தற்போது படிக்கும் மாணவர்களின் கல்வித்தரம் மிகவும் குறைந்து விட்டது. 8 - 9ம் வகுப்பு படிக்கும் மாணவர்களில் பலருக்கு, 3ம் வகுப்பு பாட புத்தகத்தை கூட வாசிக்க தெரியவில்லை' என, தமிழக கவர்னர் ரவி புகார் தெரிவித்தார். அவரது பேச்சுக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். அதேவேளை, தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் மகேஷ், துறை அதிகாரிகளுடன், கடந்த மாதம் ஆலோசனை நடத்தினார். அதில், ஒவ்வொரு பள்ளியையும் ஆய்வு செய்து, கல்வித்தரம் குறைய காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அவரும் தென் மாவட்டங்களில் ஆய்வு செய்து, பள்ளிக்கு சரியாக வராத ஆசிரியர்கள், பணியாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.இந்நிலையில், பள்ளி கல்வித்துறை அதிகாரிகள், ஒரு மாதத்தில் மட்டும், 17,810 தொடக்க பள்ளிகள் மற்றும் நடுநிலை பள்ளிகளில் ஆய்வு செய்ததாக பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது. இந்த ஆய்வில், வட்டார கல்வி அலுவலர்களும், மாவட்ட கல்வி அலுவலர்களும் பங்கேற்று, மாணவர்களின் கல்வித்தரம் குறித்தும், ஆசிரியர்களின் கற்பித்தல் தரம் குறித்தும் ஆய்வு செய்துள்ளனர். இந்த ஆய்வின் போது தான், திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி பம்மதுகுளம் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில், மாணவர்களின் எண்ணிக்கையில் குளறுபடி செய்து, கூடுதலாக எட்டு ஆசிரியர்கள் பணியாற்றி, பல லட்சம் ரூபாய் அரசுக்கு நிதியிழப்பை ஏற்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டது. அதற்கு காரணமான பள்ளி தலைமை ஆசிரியர், வட்டார கல்வி அலுவலர் மீது நடவடிக்கை பாய்ந்துள்ளது.இதுகுறித்து கல்வியாளர்கள் கூறியதாவது: பள்ளி கல்வித்துறை நடத்திய ஆய்விலேயே முறைகேடுகள் நடந்தது உறுதியாகி உள்ளது. இதன் வாயிலாக, கவர்னரின் குற்றச்சாட்டு நிரூபணமாகி உள்ளது. அரசு பள்ளிகளின் வளர்ச்சி மற்றும் ஆசிரியர்கள் ஊதியத்துக்காக, பல கோடி ரூபாய் செலவிடப்படும் நிலையில், இனியும் இந்த நிலை நீடிக்காத வகையில், பள்ளி கல்வித்துறை விழிப்புடன் செயல்பட்டு, அரசு பள்ளி மாணவர்களை காப்பாற்ற வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

NATARAJAN R
செப் 17, 2024 20:45

தமிழக ஆளுநரின் கருத்து 100% உண்மை. அரசு பள்ளிகளில், மாணவ மாணவியரின் கல்வித் தரம் மிக மிக மோசமாக இருக்கிறது. 5ம் வகுப்பு மாணவனுக்கு, 2ம் வகுப்பு பாட புத்தகத்தை படிக்கத் தெரியவில்லை. உயிர் எழுத்து, மெய் எழுத்து, உயிர்மெய் எழுத்து, ஆங்கில எழுத்துக்கள், திருக்குறள், என எதையும் வரிசைப்படி சொல்ல தெரியவில்லை. வாய்ப்பாடு சொல்லத் தெரியவில்லை. காரணம் தமிழக அரசு. எல்லா மாணவர்களும் தேர்ச்சி. ஒரு வருடத்தில், ஒரு மாணவ/மாணவி, ஒரே ஒரு நாள் பள்ளிக்கு வந்திருந்தாலும், அந்த வருடம், அந்த மாணவ/ மாணவி, பள்ளியில் அனைத்து பாடங்களிலும் தேர்ச்சி. இப்படி தேர்வே இல்லாமல், தேர்ச்சி பெறுகின்ற மாணவ/மாணவிகள், கண்டிப்பாக நம்மை பெயிலாக்க மாட்டார்கள் என்று புரிந்த பின் , எப்படி படித்து தேர்வு எழுதுவான்? எந்த மாணவ/மாணவியும் ஆசிரியர்களுக்கு பயப்படுவதில்லை. மாணவனை கண்டிக்கும் உரிமை ஆசிரியர்களுக்கு இல்லை. ஆனால், ஆசிரியர்களை மாணவர்கள் எவ்வளவு கேவலமாக வேண்டுமானாலும் பேசலாம். கழிவறையில் படம் வரையலாம். அசிங்கமாக திட்டலாம். ஆசிரியர் எதுவும் சொல்லக்கூடாது. ஆசிரியர் மாணவனை கண்டிக்கும் நோக்கத்தோடு, அவனை நல்வழிப்படுத்தும் நோக்கத்தோடு, அடித்தால், உடனே கைது. அதே மாணவன், ஆசிரியரை அடித்தால் அவனுக்கு அறிவுரை கவுன்சிலிங். மாணவர்கள் வருகின்ற வழி எல்லாம் மதுக்கடைகள், போதைப் பொருள் என அனைத்தும் கிடைக்கிறது. எனவே அவன் கவனம், படிப்பை மறந்து வேறு வழியில் செல்கிறது. பையில் புத்தகத்தை எடுத்து வர வேண்டிய மாணவர்கள் அரிவாள் எனும் ஆயுதத்தை எடுத்து வருகிறார்கள். பேருந்துகளில், சர்வ சாதாரணமாக, மாணவ மாணவியர்கள், மது குடித்துவிட்டு, ஆட்டம் போட்டு, கொண்டு பயணிக்கிறார்கள். ஒரு வகுப்பில் 50 மாணவர்கள் படித்தால், கண்டிப்பாக அதில் 5 மாணவர்கள் ரவுடிகளாக இருப்பார்கள். அதற்கு காரணம் அவர்கள் வளர்ந்த சூழ்நிலை. அவர்களை உடனடியாக கண்டித்து, ஒரே ஒரு வாய்ப்பு கொடுத்து, அவர்கள் திருந்தவில்லை என்றால், அடுத்த நிமிடம், அவர்களை பள்ளியிலிருந்து நீக்கி, நடவடிக்கை எடுத்தால், ஆசிரியர்களை அவமதிக்கும் போது, கைது செய்து, நடவடிக்கை எடுத்தால், மற்ற மாணவர்களுக்கு பயம் இருக்கும். இந்த 5 மாணவர்களை, ஈவு இரக்கமின்றி, பள்ளியில் இருந்து வெளியே அனுப்பினால் மற்ற 45 மாணவர்கள், நல்ல முறையில் படித்து, ஒழுக்கமாக வளர்ந்து, தேர்வு பெறும் போது, தமிழ்நாட்டின் தேர்ச்சி விகிதம் 90 சதவீதமாக மாறும். ஆனால் இவர்கள் எல்லோரையும் பள்ளியில் சேர்ப்பதிலேயே குறியாக இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் படிக்க வேண்டும் என்பது இவர்களுக்கு அக்கறை இல்லை. தமிழ்நாடு கல்வித்துறையில் அதல பாதாளத்திற்கு சென்று கொண்டிருக்கிறது. ஒரு தலைமுறை அதுவும் இளைய தலைமுறை, மது மற்றும் போதை வஸ்துக்கள் என இவற்றுக்கு அடிமையாகி ஒழுக்கம் இல்லாமல் அலைந்து வருகிறது. எனவே ஆளுநர் சொன்னது முற்றிலும் உண்மை. அரசு செய்ய வேண்டியது. எந்த பள்ளிக்கு அருகிலும், சுமார் 10 கிலோ மீட்டர் வரை டாஸ்மாக் கடை இருக்க கூடாது. பெட்டிக்கடை வைத்து போதை பொருள் விற்றால் உடனடியாக கைது. ஒரு வாரத்தில் விசாரணை. உடனே தண்டனை. அதற்கு பிறகு அவர் கடையை திறக்க அனுமதி இல்லை. ஒரு ஏரியாவில், மாணவர்கள் இருக்கின்ற பகுதியில், போதை பொருள் விற்றால், உடனடியாக, அந்த இடத்திற்கு அருகில் உள்ள காவல் நிலைய அதிகாரி, பணியிட நீக்கம் செய்யப்படுவார் என்று அறிவிக்க வேண்டும். ஆசிரியர்களுக்கு மாணவர்களை கண்டிக்கும் அதிகாரம் கண்டிப்பாக இருக்க வேண்டும். ஆல் பாஸ் என்ற அபத்தத்தை அரசு பள்ளியில் இருந்து உடனே நீ வைக்க வேண்டும்.


Gajageswari
செப் 17, 2024 15:04

பருவ தேர்வு வருட தேர்வு கண்டிப்பாக நடத்தப்பட வேண்டும்


Raghavan Vedantam
செப் 17, 2024 06:30

அது எவ்வாறு? முப்பது நாட்களில் 17000 பள்ளிகள்? ஒரு நாளைக்கு கிட்டத்தட்ட 600 பள்ளிகள் ஆய்வு. இதிலும் தில்லாலங்கடி இல்லையே


mohanamurugan
செப் 17, 2024 06:04

நீண்ட காலமாகவே ஒவ்வொரு நிலை கல்வி அலுவலரும் ஒரு மாதத்தில் குறிப்பிட்ட எண்ணிக்கையில் பள்ளிகளைப் பார்வையிட்டு கல்வி தரத்தை மேம்படுத்தி வருகின்றனர். அவர்களுடைய கடமையே அதுதான். எல்லா துறைகளிலும் உள்ளது போல கல்வித்துறையிலும் சாதனைகளும் உள்ளன சவால்களும் உள்ளன. சவால்களை ஆராய்ந்து சாதனைகள் ஆக்கும் தொடர்முயற்சி நடைபெற்று வருகிறது.


mohanamurugan
செப் 17, 2024 06:04

நீண்ட காலமாகவே ஒவ்வொரு நிலை கல்வி அலுவலரும் ஒரு மாதத்தில் குறிப்பிட்ட எண்ணிக்கையில் பள்ளிகளைப் பார்வையிட்டு கல்வி தரத்தை மேம்படுத்தி வருகின்றனர். அவர்களுடைய கடமையே அதுதான். எல்லா துறைகளிலும் உள்ளது போல கல்வித்துறையிலும் சாதனைகளும் உள்ளன சவால்களும் உள்ளன. சவால்களை ஆராய்ந்து சாதனைகள் ஆக்கும் தொடர்முயற்சி நடைபெற்று வருகிறது.


Hari
செப் 16, 2024 16:41

Venugopal.... Come to school urgently


Krishna
செப் 16, 2024 13:45

ஆம், உண்மை. CBSE பள்ளிகளிலும் அப்படியே


...
செப் 16, 2024 11:00

ஆளுநர் கூறுவது முற்றிலும் உண்மை.அனைத்துதுறை அதிகாரிகளிடமும் வேலை வாங்குகிறீர்கள் கல்விகற்பித்தலை மட்டும் அரசால் சரி செய்ய இயலவில்லை.ஏன்???.ஆசிரியர்கள் போராட்டம் நடத்தி விடுவார்கள் என பயமா????


sundaran manogaran
செப் 16, 2024 07:42

கல்வி தரம் குறித்து தரவுகள் தலைமையாசிரியர்களால் தான் வழங்கப்படுகிறது.அதன் உண்மை தன்மை என்னவென்று சாமானியர் களாலும் புரிந்து கொள்ள முடிகிறது.எனவே இதை வைத்துக் கொண்டு கல்வித் தரம் உயர்ந்துள்ளது என்று கூறுவது அபத்தம். ஆசிரியர்கள் இல்லாமல் தரம் எப்படி உயரும் என்ற அடிப்படை கூட அரசுக்கு புரியாதா. மக்களை ஏமாற்றும் வித்தை இனி எடுபடாது. ஆளுனர் கூறுவதில் உண்மை இருக்கிறது.