உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / நன்றி தெரிவிக்கும் மாநாடு: முதல்வர் ஸ்டாலின் முடிவு

நன்றி தெரிவிக்கும் மாநாடு: முதல்வர் ஸ்டாலின் முடிவு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

லோக்சபா தேர்தல் முடிவுக்கு பின், வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் மாநாட்டை திருச்சியில் நடத்துவது தொடர்பாக, தி.மு.க., மூத்த நிர்வாகிகளிடம் முதல்வர் ஸ்டாலின் நேற்று ஆலோசனை நடத்தினார்.சென்னை அறிவலாயத்தில், முதல்வர் தலைமையில், தி.மு.க., மூத்த நிர்வாகிகள், அமைச்சர்கள் சிலர் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நேற்று நடந்தது. அதில் பேசப்பட்ட விஷயங்கள் குறித்து, நிர்வாகி ஒருவர் கூறியதாவது:ஓட்டு எண்ணிக்கையின் போது, விழிப்புடன் செயல்பட வேண்டும் என்று, மாவட்டச்செயலர்கள், ஒன்றிய, நகர நிர்வாகிகளை அறிவுறுத்த முடிவு செய்யப்பட்டது. தேர்தல் முடிவுகள் வெளியான பின், தி.மு.க.,வின் வெற்றியை கொண்டாடும் வகையில், வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் மாநாட்டை திருச்சியில் நடத்த திட்டமிடப்பட்டது.அடுத்த மாதம் 3ம் தேதி கருணாநிதியின் நுாற்றாண்டு நிறைவு விழாவை ஒட்டி, கட்சி தலைமை அறிவித்த நிகழ்ச்சிகளை சிறப்பாக நடத்தமாறு, மாவட்டச்செயலர்களுக்கு அறிவுறுத்த முடிவு செய்யப்பட்டது.ஜூன் 1ல் டில்லியில், 'இண்டியா' கூட்டணி கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் நடக்கவுள்ளது. அதில் பங்கேற்க முதல்வர் ஸ்டாலின், அன்று காலை 7:00 மணிக்கு டில்லி செல்கிறார். டில்லி விமான நிலையத்தில், அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்க ஏற்பாடு செய்ய அறிவுத்தப்பட்டு உள்ளது. டில்லியில் உள்ள அறிவாலயத்தில், கருணாநிதி நுாற்றாண்டு நிறைவு விழா புகைப்படக் கண்காட்சியை சிறப்பாக அமைப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.தொடர்ச்சியாக நடக்கும் இந்த நிகழ்வுகளுக்குப் பின், கட்சி கட்டமைப்பில் பல மாறுதல்களை ஏற்படுத்தவும் ஆலோசிக்கப்பட்டது. இவ்வாறு அவர் கூறினார்.- நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 14 )

Rajamani
மே 31, 2024 09:00

தமிழர்கள் விழிக்கும் நாள் எப்போதோ.


sankaranarayanan
மே 30, 2024 02:06

எல்லா ஏற்பாடுகளும் செய்யட்டும் பரவாயில்லை யாரும் தடுக்கவில்லை ஆனால் ஜூன் நான்காம் தேதிக்குப்பிறகு எல்லாமே கப்சிப்பென்றாகிவிடும் யாருமே எதுவுமே பேசமாட்டார்கள் இவர்கள் ஒவ்வொரூவரையும் தேடிப்பிடிக்கவேண்டும் சிலர் எங்கு இருக்கிறோம் என்றே சொல்லாமல் பதுங்கிவிடுவார்கள் ராம ராம ராம


ஆரூர் ரங்
மே 29, 2024 22:04

மாமன்னன் பன்றி தெரிவிக்கும் கூட்டம் நடத்துவார்.


M Ramachandran
மே 29, 2024 20:49

நன்றி தெரிவிப்பது இருக்கட்டும் கோர்ட்டு உஙகள் அதிகாரிகள் 50 பேருக்கு நீதிமன்ற சம்மன் வந்துள்ளதாமே அதைய போய் கவனியுங்கள். அப்புறம் மோடி தியானம் செய்வதை தடுக்கலாம்.முக்கியமான எவ்வளவோ தமிழ் நாட்டில் வேலை இருக்கு பிரதமரின் காலை சுரண்ட வேண்டாம்


N Sasikumar Yadhav
மே 29, 2024 19:24

நன்றி தெரிவிக்கும் மாநாடு திகாரில் நடக்க வாய்ப்பிருக்கிறது


M Ramachandran
மே 29, 2024 17:13

ஓஹோ 4 ம் தேதி மோடி பிரதமர் ஆவதற்கு டில்லி சென்று எதற்கும் இருக்கட்டும் என்று நன்றி தெரிவிக்க போகிறீர்கள்


M Ramachandran
மே 29, 2024 17:10

வாயில் கூளாங்கர்களை போட்டு மென்று கொண்டு பேச போகிறீர்களா?


GNANAM
மே 29, 2024 16:49

அடுத்த வாரம் இந்நேரம் அ.ராஜா தொலைத்தொடர்பு மந்திரி பாலு தரைவழி போக்குவரத்து மந்திரி கனிமொழி ரயில்வே மந்திரி தயாநிதி மாறன் கப்பல் மற்றும் விமான போக்குவரத்து மந்திரி ஞாபகம் இருக்கட்டும்.


Senthil K
மே 29, 2024 22:37

ஆமாம்.. ஆமாம்... அடுத்த வாரம்.. கனிமொழி.. அ.ராசா.. திகார் சிறையில்... பாலு.. தயாநிதி மாறன்... எந்த சிறையில் என்று தெரியல.. அனேகமாக.. ஜார்கண்ட் ல இருக்கும்....


raja
மே 30, 2024 08:35

.....


hari
மே 29, 2024 16:40

எடுக்கவேண்டாம்......


Kumar
மே 29, 2024 15:02

யாருப்பா அது, சூப்பர் சூப்பர்.


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை