உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / 5 மாதங்களில் 20 யானைகள் பலி: காரணங்களை ஆராய்கிறது வனத்துறை

5 மாதங்களில் 20 யானைகள் பலி: காரணங்களை ஆராய்கிறது வனத்துறை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: தமிழகத்தில், ஜனவரி முதல் மே வரையிலான ஐந்து மாதங்களில், 20 யானைகள் இறந்துள்ளதாக, வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில், காட்டு யானைகளின் எண்ணிக்கை படிப்படியாக உயர்ந்து வருகிறது. ஒவ்வொரு பகுதியிலும் உள்ள யானைகள் எண்ணிக்கை குறித்த கணக்கெடுப்பு, வனத்துறையால் மேற்கொள்ளப்படுகிறது. கடந்த ஆண்டு, தமிழகம் உள்ளிட்ட நான்கு மாநிலங்களில் ஒருங்கிணைந்த முறையில், யானைகள் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில், 2,961 யானைகள் இருப்பது உறுதியானது. வனப்பகுதிகளில் இருக்கும் யானைகள் உணவு உள்ளிட்ட தேவைகளுக்காக, நீண்ட தொலைவு செல்வது வழக்கம். இவ்வாறு அது செல்லும் வழியில் ஏற்படும் பல்வேறு பிரச்னைகளால், யானைகள் இறப்பு ஏற்படுவதாகக் கூறப்படுகிறது. நடப்பு ஆண்டுக்கான யானைகள் கணக்கெடுப்பு பணி, கடந்த மாதம் நடத்தப்பட்டது. இதில், திரட்டப்பட்ட தகவல்களை தொகுக்கும் பணி நடந்து வருகிறது. இதுகுறித்து, வனத்துறை உயரதிகாரி ஒருவர் கூறியதாவது: தமிழகத்தில் யானைகள் இறப்பு குறித்த விபரங்களை உடனுக்குடன் திரட்டி, காரணம் குறித்த ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதன் அடிப்படையில், நடப்பு ஆண்டில், ஜனவரி முதல் மே மாதம் வரையிலான காலகட்டத்தில், 20 யானைகள் இறந்துள்ளன. இவை அனைத்தும் இயற்கையான முறையில் நிகழ்ந்த இறப்பு என, பதிவு செய்யப்பட்டு உள்ளது. இதில், ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் மட்டும், 6 யானைகள் இறந்துள்ளன. முதுமலை, ஆனைமலை புலிகள் காப்பகங்கள் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில், தலா, 5 யானைகள் இறந்துள்ளன. இந்த இறப்புகளுக்கான காரணங்களை தொடர்ந்து விசாரித்து வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.நம்பகத்தன்மை கேள்விக்குறிவனப்பகுதிகளில் யானைகள் இறப்பு தொடர்பாக வனத்துறை கூறும் காரணங்களை ஓரளவுக்கு ஏற்கலாம். ஆனால், வனத்துக்கு வெளியில் உள்ள பகுதிகளில் மின்சாரம் தாக்கியும், மனிதர்களின் தாக்குதலில் நிகழும் யானைகள் இறப்பையும், இயற்கையான முறையிலான இறப்பு என்று வனத்துறை அதிகாரிகள் ஆவணப்படுத்துகின்றனர். இது விஷயத்தில், வழக்கு பதிந்து சட்ட நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் மத்தியில் காணப்படும் தயக்கமே இதற்கு காரணம். - வன உயிரின ஆர்வலர்கள்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

வினாயகம்
ஜூன் 10, 2024 10:29

ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் காரணங்களை இதுமாதிரி ஆராய்ஞ்சு வெட்டி வேலை செய்வதுதான் முதல்.காரணம்.


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை