உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / நில வழிகாட்டி மதிப்பு 70% வரை உயர்கிறது; பத்திரப்பதிவு கட்டணம் கடுமையாக எகிறும்

நில வழிகாட்டி மதிப்பு 70% வரை உயர்கிறது; பத்திரப்பதிவு கட்டணம் கடுமையாக எகிறும்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: தமிழகத்தில் நிலங்களுக்கான வழிகாட்டி மதிப்புகளை, 70 சதவீதம் வரை உயர்த்தும் பணியை பதிவுத்துறை முடுக்கி விட்டுள்ளது.தமிழகத்தில் நிலங்களுக்கான வழிகாட்டி மதிப்புகள், 2012ல் சீரமைக்கப்பட்டன. இதில் வகைபாடு ரீதியாக பல்வேறு குளறுபடிகள் காணப்பட்டதால், பத்திரப்பதிவு பணிகள் முடங்கின. இதையடுத்து, 2012ல் நிர்ணயிக்கப்பட்ட வழிகாட்டி மதிப்புகளில், ஒட்டுமொத்தமாக, 33 சதவீதத்தை குறைத்து, 2017ல் அரசு உத்தரவிட்டது.இந்நிலையில், 2017ல் பிறப்பித்த உத்தரவை விடுத்து, 2012ல் இருந்த வழிகாட்டி மதிப்புகளை அமல்படுத்த போவதாக பதிவுத்துறை, 2023ல் அறிவித்தது. இந்த உத்தரவை எதிர்த்து, பல்வேறு தரப்பினரும் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், பதிவுத்துறை, 2023ல் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்தது. இதனால், 2017 நிலவரப்படியான வழிகாட்டி மதிப்புகளை, கடைப்பிடிக்க வேண்டிய கட்டாய சூழல் பதிவுத்துறைக்கு ஏற்பட்டுள்ளது.ஒரு சில சார் - பதிவாளர்கள் மீதான, நீதிமன்ற அவமதிப்பு வழக்குகள் பதிவுத்துறைக்கு நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளன. இது தொடர்பான வழக்கு ஜூன் மாதம் முதல் வாரத்தில் விசாரணைக்கு வரவுள்ள நிலையில், பதிவுத்துறை சில முக்கிய முடிவுளை எடுத்துள்ளது.

இதுகுறித்து, சார் - பதிவாளர்கள் கூறியதாவது:

உயர் நீதிமன்ற நெருக்கடியால், நில வழிகாட்டி மதிப்புகளை தற்காலிக ஏற்பாடாக மாற்றி அமைக்க அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். இதற்காக கிராம வாரியாக தெருக்களின் விபரம் திரட்டப்பட்டு, அதற்கான மதிப்பு நிர்ணயிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.இவ்வாறு நிர்ணயிக்கப்படும் மதிப்பு விபரங்களுக்கு, கலெக்டர் தலைமையிலான மாவட்ட மதிப்பு நிர்ணய குழுவின் ஒப்புதல் பெற நடவடிக்கை எடுத்து வருகிறோம். மே 15க்குள் மாவட்ட குழு ஒப்புதல் பெற கெடு விதிக்கப்பட்டுள்ளது.அதன்பின், இம்மாத இறுதியில், மாநில அளவிலான மையக்குழுவிடம் ஒப்புதல் பெற திட்டமிடப்பட்டுள்ளது. இதையடுத்து, உயர் நீதிமன்ற உத்தரவுப்படி, 2012ம் ஆண்டு மதிப்புகளை அமல்படுத்தும் உத்தரவு, இம்மாத இறுதியில் திரும்ப பெறப்படும்.அதை தொடர்ந்து, 2017ல் குறைக்கப்பட்ட வழிகாட்டி மதிப்புகளை சமீபத்திய மாற்றங்களுடன் அமல்படுத்த பதிவுத்துறை திட்டமிட்டுள்ளது. இதனால், தற்போதைய நிலவரத்தில் இருந்து, 70 சதவீதத்துக்கு மேல் புதிய வழிகாட்டி மதிப்புகள் விரைவில் அமல்படுத்தப்பட உள்ளன.தேர்தல் நடத்தை விதிகள் முடிவுக்கு வரும் முன், இந்த பணிகளை முடிக்க உயரதிகாரிகள் அழுத்தம் கொடுத்து வருகின்றனர்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

ஆரூர் ரங்
மே 11, 2024 16:40

பல சொத்துக்கள் அவசரமாக பணத் தேவைக்காக மார்க்கெட்டை விட மிகவும் குறைந்த விலையில் விற்கப்படுகின்றன. ஆனால் வாங்கியவர் வழிகாட்டி மதிப்பினடிப்படையில் பதிவுக் கட்டணம் செலுத்த வேண்டிய கட்டாயம். இந்த நஷ்டத்தையும் பாவப்பட்ட விற்பவர் தலையில் கட்டி விடுகிறார்கள். தீர்வென்ன?


முருகன்
மே 11, 2024 15:18

அரசாங்கத்தை ஏமாற்றும் வேலை நடக்கும் வரை இப்படி நடந்து கொண்டே இருக்கும்


G Palanivel
மே 11, 2024 08:16

% கருப்பாக தான் வாங்குகிறார்கள் இது நேரடியாக நான் பார்த்தது


rama adhavan
மே 11, 2024 04:53

உயர்த்தட்டும் கருப்புப் பணம் குறையும் தற்போது மார்க்கெட் விலை அதிகம் வழிகாட்டி மதிப்பு சந்தை விலையில் பாதி தான் எனவே வழிகாட்டி மதிப்பில் சிறிது உயர்த்தி பதிவு செய்து விட்டு மீதியை கருப்பாக தருகின்றனர் அதை ஒழிக்க வேண்டும் நிலம் விற்பவர் உரிய மூலதன லாப வரியை மறைக்காமல் கட்ட வேண்டும்


மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை