உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / நீக்கப்படாத பசலி எனும் சொல்: பூசாரிகள் சங்கம் குற்றச்சாட்டு

நீக்கப்படாத பசலி எனும் சொல்: பூசாரிகள் சங்கம் குற்றச்சாட்டு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்தும், 'பசலி' என்ற சொல் நீக்கப்படவில்லை என, கோவில் பூசாரிகள் சங்கம் குற்றம்சாட்டி உள்ளது. இதுகுறித்து அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.இதுகுறித்து, கோவில் பூசாரிகள் சங்க மாநில தலைவர் வாசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:தமிழக கோவில்கள் மற்றும் வருவாய்த்துறை ஆவணங்களில், 'பசலி'' என்ற அந்நியச் சொல் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதற்கு மாற்றாக, உரிய தமிழ் சொற்களை பயன்படுத்த வேண்டும் என, பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்து வருகிறோம்.அதற்கு மாற்றாக, 'நிலவரி ஆண்டு' என்ற தமிழ் சொல்லை பயன்படுத்த வேண்டும் என, தொடர்ந்து பலமுறை நேரடியாகவும் கடிதம் வாயிலாகவும், கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது.'நிலவரி ஆண்டு' என்ற சொல்லை பயன்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து வருவாய்த்துறை மற்றும் தமிழ் வளர்ச்சித் துறை விளக்கம் அளிக்க வேண்டும்.தொடர்ந்து, பத்து ஆண்டுகளாக வலியுறுத்தப்பட்டு வரும், 'நிலவரி ஆண்டு' என்ற சொல்லை பயன்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக பட்ஜெட் கூட்டத்தொடரில் இது குறித்து விவாதித்து நிலவரி ஆண்டு என்ற பெயரை பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.-தமிழக அரசும், இவ்விஷயத்தில் தலையிட்டு, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.- நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

திராவிட மாடல்
ஜூன் 27, 2024 15:29

பசலி என்ற வார்த்தையை இந்த நாட்டை கொள்ளை அடிக்க வந்த அக்பர் ஏற்படுத்தினார். நாங்களும் கொள்ளை அடிக்கிறோம் அதனால் நாங்களும் தொடருவோம்...


தமிழ்வேள்
ஜூன் 27, 2024 10:39

இருந்துட்டு போவுது விடுங்க பூசாரி ..நீங்க மாற்ற சொல்லி, அவங்க மாற்றி, இதுதான் சாக்கு ன்று இன்னும் இரண்டு சொத்துக்களை ஆட்டையை போட்டு முழுங்குவார்கள்..தலைவலி உங்களுக்குத்தான் ..தேவையா? கருணாநிதி கும்பலுக்கு எடுத்துக்கொடுக்கும் வேலையை தவறிக்கூட செய்யாதீர்கள் ..


ஆரூர் ரங்
ஜூன் 27, 2024 09:29

பூசாரி என்பது கூட பூஜாரி எனும் சமஸ்கிருத வார்த்தையின் திரிபுதானே? தூய தமிழ் என்று எதுவுமில்லை. ஒவ்வொரு காலகட்டத்திலும் மாற்றங்கள் நிகழ்ந்துகின்றன.


மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி