உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / தி.மு.க.,வில் புதியவர்களுக்கு வாய்ப்பு அளிக்க உதயநிதி தயார்! விரைவில் 117 மா.செ.,க்கள் நியமனம்

தி.மு.க.,வில் புதியவர்களுக்கு வாய்ப்பு அளிக்க உதயநிதி தயார்! விரைவில் 117 மா.செ.,க்கள் நியமனம்

தி.மு.க., மாவட்ட செயலர்களின் அதிகாரத்தை குறைக்கும் வகையில் சில முடிவுகளை, அமைச்சரும், கட்சியின் இளைஞர் அணி செயலருமான உதயநிதி எடுக்க உள்ளதாக, அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.தமிழகத்தில் லோக்சபா தேர்தல் முடிந்தபின், அமைச்சர் உதயநிதி குடும்பத்துடன் லண்டனில் ஓய்வெடுத்து வருகிறார். லோக்சபா தேர்தல் முடிவுகள் ஜூன் 4ல் வெளியான பின், தி.மு.க.,வில் நிர்வாக ரீதியாக அதிரடி மாற்றங்கள் இருக்கும் என, தி.மு.க., வட்டாரத்தில் கூறப்படுகிறது.இதுகுறித்து, அக்கட்சியின் முக்கிய நிர்வாகி ஒருவர் கூறியதாவது: தி.மு.க.,வில் அமைப்பு ரீதியாக, 72 மாவட்டங்கள் உள்ளன. அமைச்சர்களில் பலர், மாவட்ட செயலர்களாகவும் உள்ளனர். ஒவ்வொரு மாவட்ட செயலரும், 5 முதல் 6 சட்டசபை தொகுதிகளை கைவசம் வைத்துள்ளனர்.

குற்றச்சாட்டு

அவர்களால் மாவட்டம் முழுதும் சென்று, கட்சி பணிகளை முழுமையாக செய்ய முடியவில்லை. அதே நேரத்தில், மற்றவர்களால் கட்சியில் முக்கிய பொறுப்புகளை பெற முடியாமல் உள்ளது என்ற குற்றச்சாட்டும் நீண்டகாலமாக உள்ளது. இதையடுத்தே, மாவட்ட அளவில் கட்சி நிர்வாகத்தில் மாற்றம் வேண்டும் என, பலரும் தொடர்ந்து குரல் எழுப்பி வருகின்றனர்.காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட செயலர் தா.மோ.அன்பரசனின் எல்லைக்குள், செங்கல்பட்டு மாவட்டமும் வருகிறது. ஆனால், செங்கல்பட்டு தனி மாவட்டமாகி விட்டது. ஆனாலும், இன்னும் புதிய மாவட்ட செயலர் நியமிக்கப்படவில்லை.செங்கல்பட்டில் கட்சி கூட்டம் நடக்கும் போது, காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட செயலர் என்று தான் பேசுகின்றனர். இது நிர்வாக ரீதியில் தவறான ஒன்றாக பார்க்கப்படுகிறது.சென்னை வடக்கு கிழக்கு மா.செ., மாதவரம் சுதர்சனம். ஆனால், அவரது மாவட்ட எல்லைக்குள் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள சில சட்டசபை தொகுதிகள் வருகின்றன. இதுபோன்ற நிர்வாகக் குளறுபடிகள், சில மா.செ.,க்களின் அடாவடி செயல்பாடு குறித்து, லோக்சபா தேர்தல் பிரசாரத்துக்காக சென்ற உதயநிதியிடம் கட்சியினர் புகார் கூறினர்.ஒரு மாவட்ட செயலரின் நிர்வாக எல்லைக்குள் நான்கைந்து சட்டசபை தொகுதிகள் வருவதால், அவர்களால் 'பூத் கமிட்டி' பணிகளை கூட முழுமையாக முடுக்கி விட முடியவில்லை. இதனால், பல மாவட்டங்களிலும் கட்சி வளர்ச்சி முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது என்றும் குற்றச்சாட்டு தெரிவித்தனர்.

யோசனை

இதை சரி செய்ய, இரு சட்டசபை தொகுதிகளுக்கு ஒரு மா.செ., நியமிக்க வேண்டும். அப்படி செய்தால், கட்சி கட்டமைப்பு வலுப்பெறும், புதியவர்களுக்கும் மா.செ., வாய்ப்பு கிடைக்கும் என்று யோசனை கூறப்பட்டுள்ளது. இது குறித்து முதல்வர் ஸ்டாலினிடம் உதயநிதி பேசியுள்ளார். அவரும் இந்த விஷயத்தில், தேர்தல் முடிவுகளுக்குப் பின், உரிய நடவடிக்கை எடுக்கலாம் என பச்சைக்கொடி காட்டியுள்ளார். தமிழகத்தில், 234 சட்டசபை தொகுதிகள் உள்ளன.இரண்டு தொகுதிகளுக்கு ஒருவர் என, 117 மா.செ.,க்களை நியமிக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்த நியமனத்தில், இளைஞர் அணியை சேர்ந்த பலருக்கு வாய்ப்பளிக்க உதயநிதி முடிவு செய்துள்ளார். மேலும், தி.மு.க.,வில் மூன்று தலைமுறைகளாக கோலோச்சும் சீனியர்கள் பலரை கழற்றி விடவும் திட்டமிட்டுள்ளார்.ஏற்கனவே, இதுபோல நடவடிக்கை எடுக்க ஸ்டாலின் முயன்றபோது, கட்சியின் சீனியர்கள் பலர் அதற்கு முட்டுக்கட்டை போட்டு விட்டனர். ஆனால், கட்சிக்குள் இந்த மாற்றத்தை கொண்டு வரும் முடிவில் உதயநிதி உறுதியாக உள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.- நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 14 )

Ravi Kulasekaran
மே 11, 2024 19:24

கட்சி என்ன உங்க அப்பன் வீட்டு சொத்தா முதல்வர் துணை முதல்வர் அமைச்சர்கள் முக்கிய பொறுப்புகள் உங்க அப்பன் நீ உங்க அத்தை மாமா மச்சான் மிச்சம் மீதி உங்க ஜாதிக்காயின் எத்தனை தாழ்த்தப்பட்ட பழங்குடியின படியால் இன் மக்களுக்கு பதவி கிடைத்தது உள்ளது மாவட்ட செயலாளர் என்ன உயர் பதவியா காலம் மாறி விட்டது இளவரசர் ஆகும் என்னும் ஆண்டு தேர்தலுக்கு முன் அல்லது பின் சட்டம் ஒழுங்கு பிரச்சினை பதவி பறிப்பு அல்லது ஆட்சி முடக்கம் நடக்க வாய்ப்பு இருக்கா? ஆளுநர் அவசர ஆலோசனை தகவல் கஞ்சா போதைப்பொருள் அதிகம் காவல் துறை அத்துமீறி பொய் வழக்குகள் நிலமை மோசமாக வாய்ப்பு


Balasubramanian
மே 10, 2024 21:16

இதில் ஏதோ உள் குத்து இருக்கிறது! தந்தை வாக்குகள் குறைந்தால் மாவட்ட செயலாளர்கள் பதவி இழக்க நேரிடும் என்றார்! மகன் புதியவர்களை நியமிக்க போகிறேன் என்கிறார்! ஜூன் 4 ஆம் தேதி சஸ்பென்ஸ் உடைத்து விடும்


Suriyanarayanan
மே 10, 2024 13:22

ஒரு சட்டமன்ற தொகுதிக்கு ஒரு தலை என்று தலைகள் தேவை மக்கள் தொகை அதிகரிப்பு காரணமாக மாற்றம் தேவை தலைகள் வேளை அந்த அந்த தொகுதி மக்களின் குறைகளை கட்சியின் மேல் மட்டத்தில் தினமும் அனுப்பவேண்டும் தலைகளின் வேலை கட்சியின் தலையான களப்பணி ஆக இருக்க வேண்டும்


Ramar P P
மே 10, 2024 12:58

சீனியர்கள் மேல் கை வைத்து பாருங்கள்அப்போது தெரியும்


சுந்தரம் விஸ்வநாதன்
மே 10, 2024 10:51

எனுங்க ஒரு தொகுதிக்கு ஒரு மாவாட்டற செயலாளர் நியமனம் செஞ்சா என்ன கொறஞ்சா போயிடும்?


sundaresan
மே 10, 2024 10:51

அப்பா கொடைக்கானல்.பையன் குடும்பம் லண்டன்.பேஷ் பேஷ்.நல்ல திராவிட மாடல்.எங்கும் தமிழ்.எதிலும் தமிழ்.ஆனால் ஓய்வு மட்டும் வெளிநாட்டில்.அருமை.அருமை.


angbu ganesh
மே 10, 2024 09:42

மொதலுல உன்னையும் உங்க அப்பாவையும் தான் தூக்கணும், அப்போதான் நாடு உருப்படும்


Aksamy Dmk
மே 10, 2024 09:27

கழகத்தில் இரண்டு சட்டமன்ற தொகுதிக்கு ஒரு மாவட்ட செயலளார் நியமனம் செய்வது வரவேற்கதக்கது ஆனால் மாவட்ட செயலாளரின் விருப்பு வெறுப்புக்குகினங்க பொறுப்பாளர் நியமனம் செய்வது சரியல்ல


kulandai kannan
மே 10, 2024 08:42

லண்டன் கும்மாளம் முடிந்ததா?


ராமகிருஷ்ணன்
மே 10, 2024 06:35

பழைய பெருச்சாளிகள் சும்மாவா இருப்பார்கள். இனி கட்சிக்குள் கலகங்கள் களைகட்டும். எப்படியோ ஒழிஞ்சி போங்கடா.


மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ