உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / சுதந்திரமாக பணிபுரிய முடியவில்லை... மனக்குமுறலை கொட்டித் தீர்க்கும் போலீஸ்

சுதந்திரமாக பணிபுரிய முடியவில்லை... மனக்குமுறலை கொட்டித் தீர்க்கும் போலீஸ்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் குற்ற நடவடிக்கையில் ஈடுபடுபவர்களுக்கு அரசியல் பிரமுகர்கள் பக்கபலமாக இருப்பதால் சுதந்திரமாக பணிபுரிய முடியவில்லை என போலீசார் புலம்பி தவிக்கின்றனர்.கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளச்சாராய விற்பனை மட்டுமின்றி, கஞ்சா புழக்கம், ஏரி வண்டல் மண் மற்றும் ஆற்று மணல் கடத்தல், 24 மணி நேரமும் மது விற்பனை போன்ற பல்வேறு குற்ற சம்பவங்கள் தொடர்ந்து நடக்கிறது. பெரும்பாலும், அரசியல் பிரமுகர்களின் பின்புலமாக இருப்பவர்கள் இது போன்ற குற்றசெயல்களில் ஈடுபடுகின்றனர்.போலீசார், குற்ற செயலில் ஈடுபடும் நபர்களைக் கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்க காவல் நிலையம் அழைத்துச் செல்கின்றனர். ஆனால், ஆளுங்கட்சியைச் சேர்ந்த அரசியல் பிரமுகர்கள், தங்களது அதிகாரத்தை பயன்படுத்தி, வழக்கு கூட பதியவிடாமல் குற்ற செயலில் ஈடுபடும் நபரை விடுவிக்க செய்கின்றனர்.இதில், தங்களது பேச்சை கேட்க மறுக்கும் போலீசார் உள்ளிட்ட அரசு அலுவலர்களை மிரட்டுதல், பணியிட மாற்றம் செய்தல் போன்ற பழிவாங்கும் நடவடிக்கையை அரசியல் பிரமுகர்கள் மேற்கொள்கின்றனர். இதனால், சுதந்திரமாக பணிபுரிய முடியாமல், வேறுவழியின்றி அரசியல்வாதிகளின் கட்டளைக்கு கீழ்பணிந்து நடக்க வேண்டிய நிர்பந்தம் காவலர்களுக்கு உள்ளது. இது மட்டுமின்றி அனைத்து அரசு அலுவலகத்திலும் அரசியல்வாதிகளின் தலையீடு இருக்கிறது.அவ்வாறு இருக்க அசம்பாவித நிகழ்வு ஏற்படும் போது, அரசு அதிகாரிகள் மட்டும் தண்டிக்கப்படுவது நியாயமற்ற செயல். எனவே, தமிழக அரசு உரிய விசாரணை மேற்கொண்டு, குற்ற சம்பவத்தில் ஈடுபடும் நபர்களுக்கு துணையாக உள்ள அரசியல்வாதிகள் மீதும் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுத்தால் மட்டுமே குற்றசம்பவங்கள் தடுக்கப்படும் என போலீசார் புலம்பி தவிக்கின்றனர்.-நமது நிருபர்-


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

Rajan Gandhi
ஜூன் 27, 2024 06:58

ஏற்கனவே பாஜக ஆட்சியில் இருக்குற மாநிலங்களில் எல்லாம் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது.. மணிப்பூரில் பாஜக ஆட்சிதான் நடக்கிறது. ஆனால் அந்த மணிப்பூரில் 2 ஆண்டுகளாக நடக்கும் கலவரத்தை பாஜக வால் கட்டுப்படுத்தக் கூட முடியவில்லை. இதுல தமிழ்நாட்டுக்கு பாஜக ஆட்சி வேண்டுமா? ஏன் தமிழ் நாடு அமைதியாக இருக்கிறது பிடிக்கலையா? இதுவும் சாதி மத கலவரங்களால் சுடுகாடு ஆக வேண்டுமா???


saravanan
ஜூன் 26, 2024 20:52

காவல் துறை என்ற ஈரல் முழுவதுமாகவே கெட்டு போவதற்கு முன்னமே அரசு சுதாரித்து கொள்ள வேண்டும் பாம்பென்றால் சீற வேண்டும் என்று ஒரு முறை காவல் துறை அதிகாரிகள் மாநாட்டில் பேசினார் திரு. மு. கருணாநிதி. ஆனால் அதுவெல்லாம் எந்த அளவு சாத்தியபட வாய்ப்பிருக்கிறது. அரசியல்வாதிகள் தலையீடு இல்லாமல் குற்ற செயல்கள் நடந்து விடுமா என்ன? பாஜக ஆட்சிக்கு வந்தால் மட்டுமே இது போன்ற சமூக விரோத செயல்கள் மாறும்.


SVK SIMHAN
ஜூன் 26, 2024 20:28

அப்பன் வண்டவாளம் அறிந்தே சுப்பனை தண்டவாளம் ஏற்றியது. போதாதென சூப்பனுக்கும் வாழ்க கோஷமிட்டு பண மற்றும் டாஸ்மாக் மற்றும் கஞ்சா போதையில் மக்களை மாக்களாக்கிய பிறகு தமிழ்நாடு சுடுகாடே ?????????????


Kumar
ஜூன் 26, 2024 14:36

Hi hii hiii


rama adhavan
ஜூன் 26, 2024 00:55

போலீஸ் சங்கம் தான் வைக்கக் கூடாது. சரி, ஆனால் ஓய்வு பெற்ற காவலர்கள் வைக்கலாமே. அவர்கள் ஏன் பணியில் இருந்த போது கண்ட இதுபோன்ற துன்பங்களுக்கு தீர்வு காணவும், பணியில் உள்ள போலீஸ்ளை காக்கவும் ஏன் நீதிமன்றம் செல்லக் கூடாது? பத்திரிகையில் புலம்பி என்ன பயன்?


Sureshkumar
ஜூன் 25, 2024 15:38

திமுக எம் எல் ஏ க்கள் எங்களுக்கும் சாராய வியாபாரிகளுக்கும் சம்பந்தம் இல்லை என்று தானாக வந்து சொன்னார்கள், ஆனால் நடப்பது என்னோவோ திமுகவுக்கும் குற்றச்செயல் கும்பலுக்கும் தொடர்பு உள்ளது வெட்ட வெளிச்சம் ஆகிவிட்டது. இந்த பொழப்புக்கு .


Sureshkumar
ஜூன் 25, 2024 15:38

திமுக எம் எல் ஏ க்கள் எங்களுக்கும் சாராய வியாபாரிகளுக்கும் சம்பந்தம் இல்லை என்று தானாக வந்து சொன்னார்கள், ஆனால் நடப்பது என்னோவோ திமுகவுக்கும் குற்றச்செயல் கும்பலுக்கும் தொடர்பு உள்ளது வெட்ட வெளிச்சம் ஆகிவிட்டது. இந்த பொழப்புக்கு .


SUBRAMANIAN P
ஜூன் 25, 2024 14:21

இந்த போலீஸ் துறை விஷயத்தில் மோடிதான் நடவடிக்கை எடுக்கவேண்டும். பிரதமர் உட்பட எந்த அரசியல்வாதிகளின் தலையீடும் செல்லாத ஒரு துறையாக இதை மாற்ற சட்டம் இயற்றவேண்டும். ஜனாதிபதியின் கட்டுப்பாட்டில் உள்ள ஒரு ராணுவ ஓய்வு பெற்ற தலைவரிடம் ஒப்படைக்கவேண்டும். அப்புறம் எல்லா சமூக விரோதிகளும் வாலை சுருட்டிக்கொள்ளும்.


அங்கப்பன்
ஜூன் 25, 2024 11:52

உண்மைதான். போலுசைத் தன் கடமையை செய்ய விடாமல் தடுக்கும் தத்தி அமைச்சர்கள். நேத்திக்கி குடித்து விட்டு நடுரிட்டில்.புரண்டு சிக்கன் வேணும்னு அடம் பிடித்த ஒரு திருட்டு திராவிடனை ஒண்ணும் பப்ண முடியாமல் போலுஸ் தவித்ததை டி.வி ல காட்டினாங்க. கேவலமா இருந்திச்சு. போலுஸ் வேலை பாக்கறதுக்கு பதில் கூலி வேலை.பாக்கலாம்.


subramanian
ஜூன் 25, 2024 11:10

இந்த காளியாத்தா, மாரியாத்தா, சுடலை மாட, முனியாண்டி சாமி எல்லாம் இவனுங்களுக்கு இரத்த பலி வாங்கணும்.


மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி