உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / பத்திரப்பதிவு துறையில் 20 வகையாக முத்திரைத்தாள் கட்டணம் அதிரடி உயர்வு

பத்திரப்பதிவு துறையில் 20 வகையாக முத்திரைத்தாள் கட்டணம் அதிரடி உயர்வு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பத்திரப்பதிவு துறையில் 20 வகையான பதிவுகளுக்கான, முத்திரைத்தாள் கட்டணம் அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளது.தமிழகத்தில் வீடு, நிலம் வாங்கும்போது, வீடு கட்டுமான ஒப்பந்தம், குத்தகை பத்திரம், கிரயம், தானம் மற்றும் செட்டில்மென்ட் என பல்வேறு கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.தமிழக அரசின் பத்திரப்பதிவு துறை நிலம், வீடு விற்பனை தவிர பல்வேறு இனங்களுக்கான ஆவணங்களையும் பதிவு செய்கிறது. இதற்கான முத்திரைத்தாள் கட்டணம், பதிவுக் கட்டணம் பொதுமக்களிடம் இருந்து வசூலிக்கப்படுகிறது.வீடு, நிலம் வாங்கும்போது, வீடு கட்டுமான ஒப்பந்தம், குத்தகை பத்திரம், கிரயம், தானம் மற்றும் செட்டில்மென்ட் ஆகியவற்றை பதிவு செய்ய மக்கள் பணம் செலுத்தி முத்திரைத்தாள் வாங்க வேண்டும்.முத்திரைத்தாள் கட்டணம் மூலமாக அரசு கருவூலத்துக்குத் தேவையான வரி கிடைக்கும். அதில் குறிப்பிட்ட சில இனங்களுக்கான முத்திரைத்தாள் கட்டணம் கடந்த 2001ம் ஆண்டுக்குப் பின் முதல்முறையாக உயர்த்தப்பட்டுள்ளது.இதுவரை குறைந்தபட்ச கட்டணம் ரூ.20 என இருந்த நிலையில், அந்த கட்டணம் தற்போது ரூ.100, 200, 500 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. உறுதிமொழி ஆவணத்திற்கு ரூ.20 என இருந்த முத்திரைத்தாள் கட்டணம் ரூ.200 வரை அதிகரித்துள்ளது.முன்னதாக கடந்த ஆண்டு வெளியிட்ட அறிவிப்பின்படி, செட்டில்மென்ட் பத்திரங்களுக்கான பதிவுக் கட்டணம் ரூ.10 ஆயிரம், முத்திரைத் தீர்வை கட்டணம் ரூ. 40 ஆயிரம், பொது அதிகார ஆவணங்களுக்கான கட்டணம் ரூ.10 ஆயிரம் என உயர்த்தி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது.ஆவணங்களுக்கு அதிகபட்ச பதிவுக் கட்டணம் ரூ. 4 ஆயிரம் என்பது ரூ.10 ஆயிரம் எனவும், அதிகபட்ச முத்திரை தீர்வை ரூ.25 ஆயிரம் என்பது ரூ.40 ஆயிரம் எனவும், தனி மனை பதிவுக்கான கட்டணம் ரூ.200 என்பது ரூ.1000 எனவும், குடும்ப உறுப்பினர்கள் அல்லாத பொது அதிகார ஆவணங்களுக்கு பதிவுக் கட்டணம் ரூ.10 ஆயிரம் என்பதை, சொத்தின் சந்தை மதிப்புக்கு ஒரு சதவிகிதம் எனவும் மாற்றியமைத்து, தமிழக அரசு கடந்த ஆண்டு அறிவித்தது.கடந்த ஆண்டு பத்திரப்பதிவு துறையில் பெரிய அளவிலான ஒப்பந்தங்கள், பத்திரப்பதிவுகளுக்கு முத்திரைத்தாள் கட்டணம் உயர்த்தப்பட்டது.தற்போது லீஸ், ரத்து ஆவணம், பவர் பத்திரம் உள்ளிட்ட சிறிய அளவிலான பண மதிப்புடைய முத்திரைத்தாள் ஆவணங்களுக்கும், கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.இனி, 20 ரூபாய்க்கு பத்திரம் வாங்க முடியாது. அந்த பத்திரம் இனி 200 ரூபாய் ஆக உயர்ந்துள்ளது. இதேபோல், பல்வேறு இனங்களுக்கு முத்திரைத்தாள் கட்டணங்கள் தற்போது உயர்ந்துள்ளது. -நமது சிறப்பு நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

Mohan Loganathan
நவ 02, 2024 04:32

மக்கள் மீது விதிக்கப்படும் வரி எந்த வகையானாலும் சுமையாக இருக்க கூடாது அரசு தன் ஊதாரி சிலவுக்களுக்காக வரி பத்திரம் துகையோ பல மடங்கு அதிகரிப்பது எதேச்சாதிகார நடவடிக்கை என்பதில் சந்தேகமில்லை


Sambath
நவ 01, 2024 21:54

பத்திர பதிவுத்துறை ஒரு பொன் முட்டையிடும் வாத்து. எந்த பொறுப்பும் கிடையாது. நம் சொத்துக்களை, பத்திரங்களை பிறர் ஆக்கிரமித்தாலும் ஒன்றும் செய்யாது. வக்பு வாரியம் உட்பட பல பிரச்சினைகளிலும் தலையிடாது. டாஸ்மாக், பத்திரப்பதிவுத்துறை இரண்டும் அரசு கஜானாவை நிரப்புகின்றன


Yoganandan S
நவ 01, 2024 21:15

பல இலவசங்களை மக்களுக்கு கொடுப்பது நிறுத்தினாலே போதும் . இதனால் அரசு அனைத்து மக்களையும் வரிகள்மூலம் உயர்த்தி கொடுமைபடுத்துவதை நிறுத்தினால் நன்று‌


Mohan Loganathan
நவ 01, 2024 18:26

ரூபாய் 20 பத்திரத்தில் எழுதிய ஆவணத்தை ரூ200 பத்திரத்தில் எழுத வேண்டும் என்பது நியாமற்றது 100%அதிகமாக்குவது உசிதம் அல்ல.. பத்திரம் அச்சிட அதிகம் சிலவு என்று சொல்வது ஏற்புடையதல்ல பத்திரம் பதில் அட்டிசீவ் ஸ்டாம்ப் நல்ல தீர்வாகும் அல்லது இ ஸ்டாம்பு..


N Sasikumar Yadhav
நவ 01, 2024 16:41

திமுக களவானிங்களுக்கு விடியலோ விடியல்


Dharmavaan
நவ 01, 2024 09:54

கையாலாகாத திருட்டு அரசுக்கு ஒட்டு போடும் மூடர்கள் இருக்கும் வரை இது தீராது


SANKAR
நவ 01, 2024 12:14

after 2001 how much your earnings increased and how much your property value of any increased?


pattikkaattaan
நவ 01, 2024 09:34

தினமும் உபயாேகப் படுத்தும் பெட்ராேல் டீசல் இவ்வளவு விலை அதிகமாக உள்ளது. வாழ்க்கையில் ஒரு முறை அல்லது இருமுறை செய்யும் பத்திர பதிவுக்கு கட்டணம் உயர்த்திவிட்டார்களாம். நல்லா இருக்கு உங்க நியாயம்


N Sasikumar Yadhav
நவ 01, 2024 16:44

திராவிட மாடலால் ஆட்டய போடுவதில் பங்கு வாங்கும் உங்களுக்கு இந்த மாதிரியான விலையேற்றம் சாதாரணம்


karthik
நவ 01, 2024 08:59

அய்யோக்கிய அரசியல் வியாதிகள் கையில் நாட்டை குடுத்து தமிழ் மக்களே தன் தலையில் மண்ணை போட்டுக்கொண்டார்கள் ... வருஷம் 12 ஆயிரம் கோடி இலவசம் என்று ஓட்டுக்காக குடுக்கும் நாதாரிகள் .. கஷ்டப்பட்டு பணம் சேர்த்து சொத்து வாங்கும் மக்கள் தலையில் மிளகாய் அரைக்கிறார்கள் . அழிந்துபோவார்கள்


lana
நவ 01, 2024 08:10

எந்த கொம்பனும் குறை சொல்ல முடியாத அளவுக்கு இந்த ஆட்சி தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.


Nandakumar Naidu.
நவ 01, 2024 07:26

கேடு கெட்ட விளங்காத விடியல் ஆட்சி நிரந்தரமாக மண்ணோடு மண்ணாக அழிந்து போக வேண்டும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை