உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / இ.பி.எஸ்., அளித்த விருந்தை புறக்கணித்த 4 எம்.எல்.ஏ.,க்கள்

இ.பி.எஸ்., அளித்த விருந்தை புறக்கணித்த 4 எம்.எல்.ஏ.,க்கள்

சென்னை : அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி அளித்த விருந்தை, முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் உள்ளிட்ட, அக்கட்சியின் நான்கு எம்.எல்.ஏ.,க்கள் புறக்கணித்தனர்.கடந்த மார்ச் 14ல் துவங்கிய, தமிழக சட்டசபை பட்ஜெட் கூட்டத் தொடர், ஏப்.29ல் நிறைவு பெறுகிறது. அதையொட்டி அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்களுக்கு, அக்கட்சியின் பொதுச்செயலர் பழனிசாமி, அவரது இல்லத்தில், நேற்று முன்தினம் இரவு விருந்தளித்தார்.அ.தி.மு.க.,வுக்கு 66 எம்.எல்.ஏ.,க்கள் உள்ளனர். அவர்களில், முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் உள்ளிட்ட அவரது ஆதரவாளர்கள் நான்கு எம்.எல்.ஏ.,க்கள் தவிர, மற்றவர்களுக்கு விருந்தில் பங்கேற்க, பழனிசாமி அழைப்பு விடுத்திருந்தார். ஆனால், சமீப காலமாக பழனிசாமியுடன் முரண்பட்டு வரும் செங்கோட்டையன், அவரது ஆதரவாளரான, பவானிசாகர் தொகுதி எம்.எல்.ஏ., பண்ணாரி, முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் ஆதரவாளர்களான வானுார் தொகுதி எம்.எல்.ஏ., சக்கரபாணி, திண்டிவனம் தொகுதி எம்.எல்.ஏ., அர்ஜுனன் ஆகியோர் பங்கேற்கவில்லை. அமைச்சர் பொன்முடியை கண்டித்து, விழுப்புரத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டதால், விருந்தில் பங்கேற்க முடியவில்லை என, விழுப்புரம் மாவட்ட எம்.எல்.ஏ.,க்கள் தெரிவித்தனர். பழனிசாமி தன்னை கண்டுகொள்ளவில்லை என்ற வருத்தத்தில், செங்கோட்டையன் இருப்பதாகக் கூறப்படுகிறது.விருந்தில் பங்கேற்ற எம்.எல்.ஏ.,க்கள் சிலரிடம் பேசியபோது, 'விருந்தின்போது அனைவரிடமும் பழனிசாமி சகஜமாகப் பேசினார். பா.ஜ., கூட்டணி ஏன் அமைக்கப்பட்டது; எப்படி அமைக்கப்பட்டது என்பது குறித்தெல்லாம் விளக்கமாகப் பேசினார். அமித் ஷா சந்திப்பின் போது பேசப்பட்ட தகவல்களையும் சொன்னார். விரைவில், அ.தி.மு.க., கூட்டணியில் மேலும் சில கட்சிகள் இணையும் என்ற தகவலையும் சொன்னார். கூடவே, தி.மு.க.,வுக்கு எதிராக வலுவான கூட்டணி அ.தி.மு.க., தலைமையில் அமையும் என்பதால், 2026ல் அ.தி.மு.க., ஆட்சி அமையப் போவது உறுதி. எனவே, சட்டசபை தேர்தல் பணிகளை இப்போதே, உற்சாகமாக துவங்க வேண்டும். தேர்தலுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் அ.தி.மு.க., தலைமை செய்யும்' என தெரிவித்ததாக அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

RRR
ஏப் 25, 2025 14:48

செங்கோட்டையனுக்கு இருக்கும் தில்லு கூட இப்போது இருக்கும் பாஜக தலைமைக்கு இல்லை...


Ramaswamy Sundaram
ஏப் 25, 2025 13:56

இந்த கூட்டணி நிச்சயம் வெல்லும்...


m.arunachalam
ஏப் 25, 2025 11:43

இ பி எஸ் உடன் பயணிப்பது நலம் பயக்கும்.


m.arunachalam
ஏப் 25, 2025 11:40

சரியாக விசாரணை செய்த பின் தேர்தலில் ஒதுக்கிவிடுங்கள் .


எம். ஆர்
ஏப் 25, 2025 10:40

நாடு இருக்கும் நிலையில் இந்த எழவெடுத்த செல்லாக்காசு பல கொத்தடிமைகள் செல்லாக்காசுக்கு விருந்து கொடுக்கறான் இவனெல்லாம் நாட்டை ஆண்டால் எப்படி இருக்கும்??


vbs manian
ஏப் 25, 2025 08:43

ரோம் பற்றியெரியும் பொழுது நீரோ மன்னன் பிடில் வாசித்தானாம்.


अप्पावी
ஏப் 25, 2025 07:54

போனதடவையே நல்ல லெக் பீசா பறிமாறலையாம்.


பிரேம்ஜி
ஏப் 25, 2025 06:49

நல்ல விஷயம்! மானஸ்தர்கள்! பாராட்டுக்கள்!