உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / பா.ம.க.,வுக்கு 7+1: அ.தி.மு.க., கூட்டணியில் தொகுதி பங்கீடு

பா.ம.க.,வுக்கு 7+1: அ.தி.மு.க., கூட்டணியில் தொகுதி பங்கீடு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

அ.தி.மு.க., கூட்டணியில், பா.ம.க.,வுக்கு ஏழு தொகுதிகளும், ஒரு ராஜ்யசபா எம்.பி., பதவியும் வழங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.ஆளும் தி.மு.க., தரப்பில், ஏற்கனவே இருக்கும் கூட்டணி கட்சிகளுடன், தொகுதி பங்கீடு சம்பந்தமான பேச்சு முடிக்கப்பட்டு, தொகுதி ஒதுக்கீடு துவங்கி விட்டது. பிரதான எதிர்க்கட்சியான, அ.தி.மு.க., கூட்டணி இன்னமும் முழு வடிவம் பெறவில்லை. எந்தெந்த கட்சிகள் இடம்பெறப் போகின்றன என்ற கேள்வி நீடிக்கிறது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=s2v9y2ta&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0

சந்திப்பு

இந்நிலையில், முதல் கட்சியாக, பா.ம.க.,வை இழுக்கும் வேலையில் இறங்கிய அ.தி.மு.க., தரப்பு, அதன் நிறுவனர் ராமதாசை சந்தித்துப் பேச, முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்தை அனுப்பியது. திண்டிவனம் அருகில் தைலாபுரம் தோட்டத்தில் நடந்த சந்திப்புக்கு பின்னரும், கூட்டணி உறுதியாகவில்லை.அ.தி.மு.க., கூட்டணியில், தங்களுக்கு ஒன்பது தொகுதிகளும், ஒரு ராஜ்யசபா எம்.பி., சீட்டும் ஒதுக்கப்பட வேண்டும் என, பா.ம.க., கேட்டது.உடன்பாடு ஏற்படாததோடு, பா.ம.க., தரப்பில் வைக்கப்பட்ட சில நிபந்தனைகளும் ஏற்க முடியாத அளவில் இருந்தாக கூறப்படுகிறது; அதனால், பேச்சு இழுத்துக் கொண்டே போனது.இந்நிலையில், பா.ம.க.,வுக்கு ஏழு லோக்சபா தொகுதிகளும்; ஒரு ராஜ்யசபா சீட்டும் ஒதுக்க, அ.தி.மு.க., தரப்பில் ஒப்புக் கொண்டதாக அரசியல் வட்டாரங்களில் தகவல் கசிந்துள்ளது.இதுகுறித்து, அ.தி.மு.க., வட்டாரங்கள் கூறியதாவது: கடந் 2014ல் அ.தி.மு.க., தனியாகவும், பா.ஜ., தலைமையில் ஒரு கூட்டணியும் அமைந்தது. பா.ஜ., கூட்டணியில் பா.ம.க., இணைந்து தேர்தலை சந்தித்தது.அப்போது, அக்கூட்டணியில் பா.ம.க.,வுக்கு ஏழு தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. அவற்றில், தர்மபுரி தொகுதியில் போட்டியிட்ட பா.ம.க., தலைவர் அன்புமணி மட்டும் வெற்றி பெற்றார்.

தோல்வி

அடுத்து, 2019ல் நடந்த தேர்தலில், அ.தி.மு.க., கூட்டணியில் இணைந்து, பா.ம.க., ஏழு லோக்சபா தொகுதிகளில் போட்டியிட்டது. ஒரு ராஜ்யசபா சீட்டும் ஒதுக்கப்பட்டது. தர்மபுரி தொகுதியில் போட்டியிட்ட அன்புமணி உள்ளிட்ட அனைவரும் தோல்வி அடைந்தனர். ஆனாலும், ஏற்கனவே ஒப்புக் கொண்டபடி, பா.ம.க.,வுக்கு அ.தி.மு.க., சார்பில் ராஜ்யசபா எம்.பி., பதவி தரப்பட்டது; அன்புமணி ராஜ்யசபா எம்.பி.,யானார்.இந்நிலையில், வரும் லோக்சபா தேர்தலை, பா.ஜ., இல்லாமல் சந்திக்க முடிவு செய்த அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி, பா.ஜ.,வுடனான உறவை முறித்தார். தனி அணி அமைக்கும் முயற்சியில் வெற்றி பெற வேண்டுமானால், பா.ம.க.,வையும், தே.மு.தி.க.,வையும் கட்டாயம் கூட்டணியில் இணைத்தாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்.அதன் காரணமாக, பா.ம.க.,வுக்கு ஏழு லோக்சபா தொகுதிகளும், ஒரு ராஜ்யசபா சீட்டும் ஒதுக்க, அவர் முன்வந்திருப்பதாக தெரிகிறது. தே.மு.தி.க.,வுக்கு இரு தொகுதிகளும், ஒரு ராஜ்யசபா சீட்டும் ஒதுக்கவும் ஒப்புக் கொண்டிருப்பதாக தெரிகிறது. வாசன் தலைமையிலான த.மா.கா., வரும்பட்சத்தில், அக்கட்சிக்கும் இரு லோக்சபா தொகுதிகளை ஒதுக்க, பொதுச் செயலர் பழனிசாமி முடிவெடுத்துள்ளார்.அத்துடன், பாரி வேந்தரின் ஐக்கிய ஜனநாயக கட்சி, கிருஷ்ணசாமியின் புதிய தமிழகம், சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சி ஆகியவற்றுக்கு தலா ஒரு தொகுதியும் ஒதுக்க முடிவாகி உள்ளது.இவ்வாறு அக்கட்சி வட்டாரங்கள் கூறின.

- நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்