உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / உடல் உறுப்புகள் எடுத்துச்செல்ல 125 கி.மீ., வேகத்தில் பறக்கும் ட்ரோன்

உடல் உறுப்புகள் எடுத்துச்செல்ல 125 கி.மீ., வேகத்தில் பறக்கும் ட்ரோன்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: தானம் செய்யப்பட்ட உடல் உறுப்புகளை, மணிக்கு 125 கி.மீ., வேகத்தில் எடுத்துச் செல்லும் திறன் பெற்ற, சிறிய வகை ஆளில்லா விமானம், 'ட்ரோன்' முதலீட்டாளர் மாநாட்டில் இடம் பெற்றது.தஞ்சாவூரை சேர்ந்த 'யாளி ஏரோஸ்பேஸ்' நிறுவனம், இந்த வகை ட்ரோன்களை வடிவமைத்துள்ளது. அந்நிறுவனத்தை நடத்தி வரும் தினேஷ், 32 கூறியதாவது:சென்னை அண்ணா பல்கலையில் பொறியியல் படித்து, ஜெர்மனியில், 10 ஆண்டுகளாக பணியாற்றினேன். அந்த நாட்டில், தானம் செய்யப்படும் உடல் உறுப்புகளை எடுத்துச் செல்ல, ட்ரோன் வசதி அதிகம். இந்த தொழில்நுட்ப வசதியை நம் நாட்டில் கொண்டு வர திட்டமிட்டு, புதிய ட்ரோனை உருவாக்கி உள்ளோம். ஒரே நேரத்தில், 7 கிலோ உடல் உறுப்புகளை, மணிக்கு 125 கி.மீ., வேகத்தில் கொண்டு செல்ல முடியும். சென்னையில் இருந்து கன்னியாகுமரிக்கு மூன்றரை மணி நேரத்தில் உடல் உறுப்புகளை கொண்டு செல்ல முடியும்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

Godyes
ஜன 09, 2024 23:53

ட்ரோன் மூலம் இப்படி அதிகமாக பெய்யும் அடை மழையை கட்டுப்படுத்த முடியாதா


ஆரூர் ரங்
ஜன 09, 2024 13:06

சிலிண்டர் வகையறா சிறுபான்மையினர் தானம் கொடுத்தா அதற்கு தனி டிரோன் ஒதுக்கீடு அவசியமே???? .ஆனா தானம் கொடுப்பாங்களா?


Ramesh Sargam
ஜன 09, 2024 09:26

அந்த ட்ரோன் பறக்கும்போது, அதை திமுகவினர் தடுத்து நிறுத்தி, அதில் உள்ள உறுப்புக்களை ஆட்டை போட்டு விடுவார்கள்.


Kalyanaraman
ஜன 09, 2024 07:49

பாராட்டுக்கள். ஆனால் தமிழகத்தில் இருந்தால் யாளி ஏரோஸ்பேஸ் நிறுவனத்தை யாராவது மிரட்டி வாங்கிடுவாங்க ஜாக்கிரதை.


JayaSeeli
ஜன 09, 2024 10:34

சரியாக சொன்னீர்கள். பிணம் தின்னும் கழுகுகள் .......


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை