உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / தமிழகத்திலும் ராமருக்கு கோவில்!

தமிழகத்திலும் ராமருக்கு கோவில்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: அயோத்தி ராமர் கோவில் மக்களிடையே பெரும் பக்தி பரவசத்தை ஏற்படுத்தியுள்ளது. இதை பா.ஜ.,வினர் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி வருகின்றனர். தமிழகத்திலும் ராமரை பயன்படுத்த பா.ஜ., முடிவெடுத்து உள்ளதாம்.அயோத்தியை போலவே தமிழகத்திலும் புதிய ராமர் கோவிலைக் கட்ட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. தமிழகத்தில், சென்னைக்கு அருகே இதற்கான நிலம் வாங்க ஏற்பாடுகள் நடக்கிறதாம்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=36ml37xz&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0ராமர் கோவிலை நிர்வகிக்கும், அயோத்தி ராமர் கோவில் டிரஸ்ட், தென் மாநிலங்களில் கால் பதிக்க விரும்புகிறதாம். இந்த டிரஸ்ட் தான் தமிழகத்தில், 10 ஏக்கர் நிலம் வாங்கி ராமர் கோவிலை கட்டப் போகிறதாம்.'லோக்சபா தேர்தல் முடிந்த பின், இதற்கான வேலைகள் சூடுபிடிக்கும்; பிரதமர் மோடி தான் தமிழக ராமர் கோவிலுக்கு அடிக்கல் நாட்டுவார்' என்கின்றனர். தமிழகத்தில் 2026ல் சட்டசபை தேர்தல் நடைபெறும் போது, இந்த ராமர் கோவில் கும்பாபிஷேகத்தை நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











சமீபத்திய செய்தி