உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / பீஹாரை விட குறைவாக கல்விக்கு நிதி ஒதுக்கீடு; தமிழக அரசு மீது அன்புமணி குற்றச்சாட்டு

பீஹாரை விட குறைவாக கல்விக்கு நிதி ஒதுக்கீடு; தமிழக அரசு மீது அன்புமணி குற்றச்சாட்டு

சென்னை : 'மிகவும் பின் தங்கிய மாநிலமான பீஹாரில், அம்மாநில அரசு கல்விக்கு ஒதுக்கும் நிதியை விட, தமிழக அரசு குறைவாக நிதி ஒதுக்கி உள்ளது' என, பா.ம.க., தலைவர் அன்புமணி குற்றம் சாட்டி உள்ளார்.

அவரது அறிக்கை:

மாநில அரசுகளால் நிர்வகிக்கப்படும் பள்ளிக் கல்வி, உயர் கல்வித் துறைகளுக்கு, மாநிலத்தின் மொத்த பட்ஜெட்டில், குறைந்தது 15 சதவீதம் ஒதுக்க வேண்டும். ஆனால் தமிழகம், 13.7 சதவீதம் மட்டுமே ஒதுக்கியுள்ளது. இந்தியாவிலேயே மிகவும் அதிக அளவாக, டில்லி அரசு, அதன் மொத்த பட்ஜெட் மதிப்பில், கல்விக்காக 24.2 சதவீதம் நிதி ஒதுக்கி உள்ளது. இந்தியாவின் பின்தங்கிய மாநிலமான பீஹார், 21.4 சதவீதம் ஒதுக்கி உள்ளது. சுகாதாரத் துறைக்கு நிதி ஒதுக்குவதில், தமிழகம் 26ம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. மருத்துவ துறையின் குறைந்தபட்ச தேவைகளை நிறைவேற்ற, மொத்த செலவில், குறைந்தது எட்டு சதவீதம் ஒதுக்க வேண்டும் என, 2017ம் ஆண்டின் தேசிய சுகாதார கொள்கையில், இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. டில்லி மாநில அரசு, இந்த இலக்கை கடந்து மருத்துவத்திற்காக, 13 சதவீதம் நிதி ஒதுக்கி உள்ளது. புதுச்சேரி அரசு, 9.5 சதவீதம் செலவழிக்கிறது. ஆனால், வளர்ந்த மாநிலமாக கூறிக் கொள்ளும் தமிழகம், சுகாதாரத்திற்கு வெறும் ஐந்து சதவீதம் மட்டுமே நிதி ஒதுக்குகிறது. முதன்மைத் துறையான வேளாண்மைக்கு, குறைந்தபட்சம், 6.3 சதவீத நிதி ஒதுக்க வேண்டும். ஆனால் தமிழகம், 6.1 சதவீதம் மட்டுமே நிதி ஒதுக்குகிறது. தெலுங்கானா 20.20, சத்தீஸ்கர், 15.90, பஞ்சாப், 10.10 சதவீதம் நிதி ஒதுக்கி உள்ளன. கடந்த அ.தி.மு.க., ஆட்சியில் ஒதுக்கப்பட்டதை விட, குறைவாக கல்வி மற்றும் சுகாதாரத்திற்கு, தி.மு.க., அரசு நிதி ஒதுக்கி உள்ளது. அடிப்படை கட்டமைப்பு வசதிகள் இல்லாமல், கல்வி, சுகாதாரத் துறைகள் சீரழிந்து வருவதற்கு, தி.மு.க., அரசு போதிய நிதி ஒதுக்காததே காரணம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

2024- - 2025ம் ஆண்டு பட்ஜெட்டில், மாநிலங்கள் கல்வி துறைக்கு ஒதுக்கிய நிதி ஒதுக்கீடு விபரம்:

எண் மாநிலம் நிதி ஒதுக்கீடு சதவீதத்தில் 1 டில்லி - 24.2 2 பீஹார் 21.4 3. அசாம் 19.0 4 மேகலாயா 18.5 5 சத்தீஸ்கர் 18.3 6 ராஜஸ்தான் 18.3 7 மகாராஷ்டிரா 18.2 8 ஹிமாச்சல் பிரதேசம் 16.7 9 உத்தரகாண்ட் 16.7 10 மேற்கு வங்கம் 16.6 11 புதுச்சேரி 15.5 12 மத்தியப்பிரதேசம் 15.4 13 குஜராத் 15.2 14 ஹரியானா 15.0 15 கேரளம் 14.8 16 உத்தரப்பிரதேசம் 14.7 17 ஜார்க்கண்ட் 14.5 18 ஒடிசா 14.2 19 மிசோராம் 13.7 20 கர்நாடகா 13.7 21 ஆந்திரா 13.7 22 தமிழகம் 13.5


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

அப்பாவி
ஆக 26, 2025 12:20

உனக்கு உங்க ஆளுங்களுக்கு இட ஒதுக்கீடு வேணும். அத்தோட நிறுத்திக்க.


venugopal s
ஆக 26, 2025 11:58

கல்வியில் பின்தங்கிய மாநிலங்கள் தான் அதிக நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். கல்வியில் முன்னேறிய மாநிலங்கள் அதிக நிதி ஒதுக்கீடு செய்யத் தேவையில்லை என்பது கூடப் புரியாத பிரகஸ்பதிகள் நாட்டில் நிறையவே உள்ளனர்! மேலும் பட்ஜெட்டில் கல்விக்கு நிதிஒதுக்கீடு சதவீதத்தை மட்டுமே பார்ப்பது சரியில்லை, ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதித்தொகை மற்றும் பட்ஜெட் அளவையும் பார்க்க வேண்டும்.


ஆரூர் ரங்
ஆக 26, 2025 14:56

அப்போ மத்திய அரசை கல்வி நிதி தரவில்லை ன்னு பொய்யான புகார் கூறுவதை நிறுத்துங்க. பிற்பட்ட மாநிலங்களுக்கு கூடுதல் நிதி செல்லட்டும்.


surya krishna
ஆக 26, 2025 09:13

எல்லாம் ஒரு விளம்பரம் தாண்ணே. இவர்கள் செய்வது விளம்பர அரசியலில் இருந்து எல்லாருக்கும் தெரியும். ஊழல்களில் ஊறிப்போன திருட்டு திராவிடம் அரசு.


Prem
ஆக 26, 2025 06:32

What about your opinion on your alliance BJP...who is not at allocating the fund for Taminadu's education? All parts of ur body got shut?


vivek
ஆக 26, 2025 07:39

why cant we use tasmac income to education


Mani . V
ஆக 26, 2025 05:38

கல்விக்கு குறைவாக நிதி ஒதுக்கினால் என்ன? டாஸ்மாக்குக்கு நிறைய நிதி ஒதுக்குகிறோமா இல்லையா? "படி" எங்களுக்குப் பிடிக்காது. "குடி" எங்களுக்குப் பிடிக்கும். கல்வி நிதியை நாங்கள் "ஒதுக்கி" விட்டோம் என்று தெரியுமா? தெரியாதா?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை