உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / ஜெய்ராம் ரமேஷ் மீது கோபம்!: டில்லி உஷ்ஷ்ஷ்

ஜெய்ராம் ரமேஷ் மீது கோபம்!: டில்லி உஷ்ஷ்ஷ்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: காங்கிரசின் சீனியர் தலைவர் ஜெய்ராம் ரமேஷ். சோனியா, ராகுலுக்கு மிகவும் நெருக்கம். சமூக வலைதளங்களில் பா.ஜ.,வையும், பிரதமரையும் தொடர்ந்து கடுமையாக விமர்சித்தபடியே இருப்பார்.தேர்தல் முடிவுகள் வெளியாவதற்கு முன்பாக, 'வெளியேறும் பிரதமர் மோடி' என, 'எக்ஸ்' வலைதளத்தில் குறிப்பிட்டார். ஆனால், தற்போது மீண்டும் மோடி மூன்றாம் முறையாக பிரதமர் பதவியேற்க உள்ளார். எனவே, தன் நிலையை மாற்றி, 'கேர் டேக்கர் பிரதமர்' என 'எக்ஸ்' வலைதளத்தில் குறிப்பிட்டுள்ளார் ஜெய்ராம்.இத்துடன் நிற்காமல் 'சந்திரபாபு நாயுடு, நிதீஷ் தான் தேசிய ஜனநாயக கூட்டணியை காப்பாற்றுகின்றனர்' என, கிண்டலாக சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார் ஜெய்ராம்.இது, அமித் ஷா உட்பட பல சீனியர் பா.ஜ., தலைவர்களுக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. கடைசியாக நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் சில அமைச்சர்கள் இது குறித்து பேசியுள்ளனர். 'எதைப் பற்றியும் கவலைப்படாமல் நம் வேலையைத் தொடர்வோம்' என கூறினாராம் மோடி. அப்போது, 'லோக்சபாவில் யார் எதிர்க்கட்சி தலைவராக வருவார்?' என, சிலர் கேட்டனராம்.உடனே உள்துறை அமைச்சர் அமித் ஷா, 'வேறு யார், 'கடா கட் கட்' தான்' என கூற, ஒரே சிரிப்பு தானாம். அமித் ஷா அப்படி குறிப்பிட்டது ராகுலை தான்.தேர்தல் பிரசாரத்தின் போது, 'காங்., கூட்டணி ஆட்சி அமைத்தால், பெண்கள் அனைவருக்கும் 1 லட்சம் ரூபாய் வழங்குவோம்' என்றார் ராகுல். அதாவது, 'கடா கட் கட்' என கூறியவர் ராகுல். இதை தான் கிண்டல் செய்துள்ளார் அமித் ஷா.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

என்றும் இந்தியன்
ஜூன் 09, 2024 21:32

ஒரு நாளில் முஸ்லீம் நேரு காங்கிரஸ் ஜெய்ராம் ரமேஷின் உளறல்கள் மோடியின் பாசாங்குகளை தமிழ் வாக்காளர்கள் நிராகரித்துள்ளதாக காங்கிரஸ் தெரிவித்துள்ளது. - ஜெய்ராம் ரமேஷ் சந்திரபாபு நாயுடு, நிதிஷ் குமார் ஆதரவு இல்லாமல் மோடி 3-வது முறையாக பிரதமராகி இருக்க முடியாது என காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் விமர்சித்துள்ளார். பிரதமர் ஆக மோடி பதவியேற்கும் விழாவிற்கு பங்கேற்க இதுவரை அழைப்பு வரவில்லை என காங்கிரஸ் கட்சி பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கூறியுள்ளார்.


konanki
ஜூன் 09, 2024 21:30

10 ஓட்டு சொந்தமாக வாங்க முடியுமா ஜெயராம் ரமேஷாலா?


venugopal s
ஜூன் 09, 2024 21:17

2006 முதல் 2011 வரை தமிழகத்தில் திமுக தனி மெஜாரிட்டி இல்லாமல் கூட்டணி அரசு அமைத்த போது ஜெயலலிதா அவர்கள் ஐந்து வருடங்களும் மைனாரிட்டி திமுக ஆட்சி என்று தான் குறிப்பிட்டார்.


பேசும் தமிழன்
ஜூன் 09, 2024 19:28

காந்தியின் கனவை நனவாக்க பாடுபடும்....அது தாங்க காங்கிரஸ் கட்சியை கலைக்க வேண்டும் என்பது .....இத்தாலி பப்பு அவர்களுக்கு தக்க உறுதுணையாக இருக்கிறார் ....ஜல்லிக்கட்டு தடை செய்த இந்த ரமேஷ்.....இவர்கள் எல்லாம் சேர்ந்து காங்கிரஸ் கட்சியை அழித்து விட்டு தான் மறுவேலை பார்ப்பார்கள்.


ஆரூர் ரங்
ஜூன் 09, 2024 15:50

ஜெயராம் தமிழர் என்பதை அறிந்து வெட்கப்படுகிறேன்.


RAMAKRISHNAN NATESAN
ஜூன் 09, 2024 10:03

ஜெய்ராம் ரமேஷ் போன்றவர்கள் காங்கிரசுக்கு பால் ஊற்றுவார்கள் ............


பேசும் தமிழன்
ஜூன் 09, 2024 20:13

பால் மட்டுமல்ல.... கொஞ்சம் பால்டாயில் சேர்த்து ஊட்டதுவார் .....அப்போது தானே கான் கிராஸ் கட்சி அழிந்து .....காந்தியின் கனவு நிறைவேறும் .


ராமகிருஷ்ணன்
ஜூன் 09, 2024 08:38

நீங்க காங்கிரஸில் உள்ள வை கோ வா அல்லது சீமாண்டி யா.


R SRINIVASAN
ஜூன் 09, 2024 06:36

முதலில் GST என்றால் என்ன என்பது தமிழ் நாட்டில் யாருக்கும் தெரியவில்லை. சீமான் அவர்கள் முயன்றால் கீழ் மட்டத்தில் உள்ளவர்களுக்கு இதை புரிய வைக்கலாம்


Bharathi
ஜூன் 09, 2024 07:50

காமெடி பண்ணாதீங்க சார். சீமானுக்கு ஹை டெசிபல்ல தமிழ் தமிழ்னு கூவத்தான் தெரியும்.


R Dhasarathan
ஜூன் 09, 2024 09:02

நேற்று ஒரு கிராம் தங்கம் வாங்கினேன் எனக்கு எங்களது ஜிஎஸ்டி நம்பர் போட்டு வேண்டும் என்று கேட்டேன், சண்டைக்கு வந்து விட்டார்கள். எப்படி எல்லாம் ஏமாற்றுபவர்கள் வரி கட்டாமல்...


Sck
ஜூன் 09, 2024 10:25

அதற்கு GSTஐ பற்றி முதலில் சீமானுக்கு புரிதல் வேண்டும். அது இந்த ஜென்மத்தில் வராது.


மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ