உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / அண்ணாமலை தலைவர்; நயினார் ஒருங்கிணைப்பாளர்: பா.ஜ., மேலிடம் புது முடிவு

அண்ணாமலை தலைவர்; நயினார் ஒருங்கிணைப்பாளர்: பா.ஜ., மேலிடம் புது முடிவு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

தமிழக பா.ஜ., தலைவராக, அண்ணாமலை நீடிக்க வைக்கவும், கூட்டணி பேச்சு நடத்த, தே.ஜ., கூட்டணிக்கு தமிழக ஒருங்கிணைப்பாளராக நயினார் நாகேந்திரனை நியமிப்பது குறித்தும், டில்லி பா.ஜ., மேலிடம் ஆலோசித்துள்ள தகவல் வெளியாகி உள்ளது.

தமிழக பா.ஜ., மூத்த நிர்வாகிகள் கூறியதாவது:

பா.ஜ., தேசிய செயற்குழுக் கூட்டம், வரும் 18ம் தேதி முதல் 20ம் தேதி வரை பெங்களூருவில் நடக்கவுள்ளது. அதில் பா.ஜ., தேசிய தலைவர் தேர்வும் நடக்கவுள்ளது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=wxywc7dq&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0புதிய தலைவராக முன்னாள் மத்திய அமைச்சரும், என்.டி.ராமராவ் மகளுமான புரந்தேஸ்வரி, மத்திய அமைச்சர்கள் தர்மேந்திர பிரதான், பிரகலாத் ஜோஷி, மனோகர்லால், பூபேந்தர் யாதவ், கிஷன் ரெட்டி போன்றவர்களின் பெயர் பரிசீலனையில் உள்ளது. தேசிய தலைவர் தேர்ந்தெடுக்கப்பட்ட பின், மத்திய அமைச்சர்களில் சிலர், கட்சி பணிகளுக்கும், கட்சி பணிகளில் இருப்பவர்கள் சிலர் மத்திய அமைச்சர் பதவிக்கும் மாற்றம் செய்யப்படுகின்றனர்.தமிகத்தில், 2026ம் ஆண்டின் சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க.,வை கூட்டணியில் சேர்க்கும் முயற்சியில், மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷா ஈடுபட்டுள்ளார். சமீபத்தில், டில்லியில் உள்ள தன் வீட்டிற்கு, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமியை அழைத்து பேசினார். அண்ணாமலையை தலைவர் பதவியில் இருந்து நீக்குவதற்கு, அ.தி.மு.க., தரப்பில் பா.ஜ., மேலிட தலைவர்களிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து, தலைவர் பதவியில் இருந்து அண்ணாமலை விலக இருப்பதாக தகவல் வெளியானது. இப்படி தகவல் வெளியானதை ஏற்காத, பா.ஜ., தொண்டர்கள், எதிர்ப்பு தெரிவித்தனர்.'அண்ணாமலை தலைவராக தொடர்ந்தால் தான், தமிழகத்தில் பா.ஜ.,வுக்கு எதிர்காலம்; அதனால், அவரை மாற்ற கூடாது' என, பா.ஜ., வினர் மின்னஞ்சல் வாயிலாக உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம் வலிறுத்தி வருகின்றனர். தொண்டர்களின் கருத்துக்கு மதிப்பு அளிக்கும் வகையில், 'அண்ணாமலை தலைவராக தொடருவார்; அவரால், கூட்டணியில் பாதிப்பு இருக்காது. உங்கள் கட்சி சார்பில் ஒருவரை மத்திய அமைச்சராக்குகிறோம்; அந்த எம்.பி., சார்ந்திருக்கும் இனத்தின் ஓட்டுக்கள், சேலத்தில் உங்களின் வெற்றிக்கு உதவும்' என, பா.ஜ,, மேலிடம், பழனிசாமி தரப்பிடம் பேசியுள்ளது. அதற்கு எவ்வித பதிலும் சொல்லாமல் பழனிசாமி, தமிழகம் திரும்பி விட்ட நிலையில், எப்படியும் கூட்டணிக்கு அ.தி.மு.க., சம்மதிக்கும் என அமித் ஷா காத்திருக்கிறார். ஒருவேளை, அதற்கு சம்மதிக்காமல் முரண்டு பிடித்து வேறு பக்கம் அ.தி.மு.க.,வை பழனிசாமி செலுத்தும் பட்சத்தில், பழனிசாமிக்கு பதிலாக செங்கோட்டையனைக் கொண்டு அ.தி.மு.க.,வை வழி நடத்த வைக்கும் யோசனைக்கு பா.ஜ., தரப்பு வந்திருக்கிறது. இதையடுத்தே, சமீபத்தில் டில்லி சென்ற முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்தார். அமித் ஷாவையும் ரகசியமாக சந்தித்து, தமிழகம் திரும்பியதாக கூறப்படுகிறது.செங்கோட்டையன் தலைமையிலான அ.தி.மு.க.,வுடன் பா.ஜ., கூட்டணி வைத்துக் கொள்ளவும் பா.ஜ.,விடம் வலுவான திட்டம் இருப்பதாகவும் அக்கட்சியினர் கூறுகின்றனர். இதனால், பா.ஜ.,வின் தேசிய தலைவர் தேர்வுக்கு முன்னதாக. தமிழக பா.ஜ., தலைவராக அண்ணாமலையையே நீட்டிக்க வைக்கலாம் என்ற முடிவுக்கு அமித் ஷா வந்திருப்பதாக கூறப்படுகிறது. அதனால், அண்ணாமலைக்கு அடுத்த நிலையில் கட்சியில் இருக்கும் மூத்த தலைவர் நயினார் நாகேந்திரனை, மத்திய அமைச்சர் ஆக்குவது அல்லது தேர்தல் கூட்டணி பேச்சு நடத்த தே.ஜ., கூட்டணிக்கு தமிழக ஒருங்கிணைப்பாளராக நியமிக்கலாம் என பா.ஜ., டில்லி மேலிடம் ஆலோசித்துள்ளது. பிரதமர் மோடி தமிழகம் வருகைக்கு பின், அண்ணாமலையும் டில்லி செல்ல உள்ளார். அங்கு அமித் ஷாவை சந்தித்து பேசுகிறார். பின், 9ம்தேதி மாநில தலைவர் நீட்டிப்பு குறித்தும், ஒருங்கிணைப்பாளர் பதவிக்கான அறிவிப்பும் வெளிவருவதற்குரிய வாய்ப்பு உள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர். -நமது நிருபர்-


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 32 )

SATHIK BASHA
ஏப் 11, 2025 23:43

உருட்டு நல்லா உருட்டு


மதிவதனன்
ஏப் 07, 2025 21:08

சரி DMK வெற்றி அண்ணாமலை இருந்தா தான் ரொம்ப ராசி அவரே தொடரட்டும் என்று ஸ்டாலின் அறிக்கை


R K Raman
ஏப் 08, 2025 11:45

பெயரில் மட்டுமே உள்ளது


கொங்கு தமிழன் பிரசாந்த்
ஏப் 07, 2025 17:51

மோடி மேடையில நயினார் அமரவைததுல தெரிஞ்சிடுசி. நடிப்பு நாடகம் வேண்டாம்


Yaro Oruvan
ஏப் 07, 2025 18:42

உனக்கென்ன அதப்பத்தி ... அது அரசு விழா .. அவர் எம் ல் ஏ .. அண்ணாமலை மீது உன் கும்பலுக்கு இருக்கும் பயம்.. அது சும்மா அதுருதுல்ல


மூர்க்கன்
ஏப் 08, 2025 15:15

nnamalai atleast until 2026. For fabulous victory and entertainment.


Rajasekar Jayaraman
ஏப் 07, 2025 12:45

நைனார் கட்சிக்கு தேவை இல்லை தாய் கட்சி பாசம் உள்ளவனால் பாஜக வை நேசிக்க முடியாது என்றைக்கும் அவன் ஐந்தாம் படை தான்.


Velu
ஏப் 10, 2025 07:51

சூப்பர் பணம் விலை போறவங்கள வச்சி ஒன்னும் பண்ண முடியாது ராமசீனிவாசன் சரியான தேர்வாக இருக்கும்


நக்கீரன் (நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே)
ஏப் 07, 2025 11:46

ரயில் பெட்டியில் கள்ளப்பணம் கொண்டு வந்ததாக நயினார் மீது ஏற்கனவே குற்றசாட்டு உள்ளது. அவர் ஒன்றும் கறைபடியாத கரமல்ல. இப்படி ஊழல்வாதிகளை வைத்துக்கொண்டு ஊழலற்ற ஆட்சி பற்றி பிஜேபி பேசுவதை நினைத்தால் சிரிப்பாக உள்ளது. தமிழகத்தில் திருட்டு முன்னேற்ற கழகம் திமுகமட்டும் ஊழல் கட்சியல்ல. அனைத்து திருட்டு முன்னேற்ற கழகமும் அதிமுக ஊழல் கட்சிதான்.


ponssasi
ஏப் 07, 2025 10:35

அண்ணாமலை அவர்கள் தமிழக தலைவராக நீடிக்கவேண்டும். கட்சிக்கு அப்பாற்பட்டு பொதுஜன மற்றும் அனைத்துக்கட்சி உறுப்பினர்களின் பொதுவான எதிர்பார்ப்பும் இதுதான். ஐயா GK மூப்பனார், வாசன், நல்லகண்ணு போன்றோர் வரிசையில் சற்று வித்தியாசமாக அண்ணாமலை வருகிறார்.


R K Raman
ஏப் 08, 2025 11:45

மூப்பனார்?


Mohamed Malick
ஏப் 10, 2025 09:46

உங்கள் அறிவை கண்டு வியக்கிறேன்


Mario
ஏப் 07, 2025 09:09

கடைசி நேரத்தில்.. மேடைக்கு அழைக்கப்பட்ட நயினார்.. கீழே அமர வைக்கப்பட்ட அண்ணாமலை


pmsamy
ஏப் 07, 2025 06:37

விலங்கிடும்


vinoth kumar
ஏப் 07, 2025 00:46

தி மு க வை கதற விட்டவர்களில் அண்ணாமலை முதல் இடத்தில இருக்கிறார். பழனிச்சாமியால் தனியாக தி மு க வை வெற்றி கொள்ள முடியாது . பி ஜே பி யுடன் கூட்டணி வைத்தால் வாய்ப்பு உள்ளது .


Haja Kuthubdeen
ஏப் 06, 2025 18:11

அனைத்துமே ஊக செய்திகள்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை