வாசகர்கள் கருத்துகள் ( 3 )
எந்தவித நிபந்தனையும் இன்றி அஇஅதிமுகவில் இனைய தயார் என்று அறிவியுங்கள்.அஇஅதிமுக தலைமை ஏற்று கொள்ளும்.
ஐயோ பாவம்
பழனிச்சாமியை முதல்வராக்காமல் ஸ்டாலினை முதல்வராக்கினால் பன்னீர் தொண்டர்கள் தாராளமாக ஏற்றுக் கொள்வார்கள் போல!
சென்னை: 'சட்டசபை தேர்தலில் என்ன நிலைப்பாடு எடுக்க உள்ளோம் என்ப தை, இன்று நடக்க உள்ள மாவட்டச் செயலர்கள் கூட்டத்தில் அறிவித்தே ஆக வேண்டும்' என்று, பன்னீர்செல்வத்துக்கு அவரது ஆதரவாளர்கள் நெருக்கடி கொடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அ.தி.மு.க.,வில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம், அ.தி.மு.க., தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு ஒன்றை நடத்தி வந்தார். இந்தக் குழுவை, அண்மையில், அண்ணா திராவிட முன்னேற்ற தொண்டர்கள் உரிமை மீட்புக் கழகம் என மாற்றினார். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=jeagnfhp&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0கடந்த லோக்சபா தேர்தலில், பா.ஜ., கூட்டணியில் இடம்பெற்ற பன்னீர்செல்வம், ராமநாதபுரம் தொகுதியில் பலாப்பழம் சின்னத்தில் களமிறங்கி தோல்வியை தழுவினார். அதன் பிறகும் பா.ஜ., கூட்டணியிலேயே நீடித்தார். பின், 2026 சட்டசபை தேர்தலை குறிவைத்து, அ.தி.மு.க.,வுடன் பா.ஜ., கூட்டணி அமைத்தது. அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி கொடுத்த நெருக்கடியால், பன்னீர்செல்வத்தை பா.ஜ., ஓரங்கட்டத் துவங்கியது. இதை உணர்ந்த அவர், கூட்டணியில் இருந்து வெளியேறினார் அதை தொடர்ந்து, த.வெ.க.,வுடன் கூட்டணி அமைத்து, சட்டசபை தேர்தலை சந்திப்போம் என, பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் உற்சாகமாக கூறினர். அதற்கு அவரும் சம்மதம் தெரிவித்த நிலையில், மீண்டும் அவரை தொடர்பு கொண்ட பா.ஜ., தலைமை அமைதி காக்கும்படி அறிவுறுத்தியது. கடந்த 3ம் தேதி டில்லிக்கு பறந்த பன்னீர்செல்வம், உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து, அ.தி.மு.க., ஒருங்கிணைப்பு குறித்து மீண்டும் பேசினார். ஆனால் அமித் ஷா, 'உங்களை கட்சியில் சேர்க்க பழனிசாமி மறுக்கிறார். அதனால், பா.ஜ., கூட்டணியில் இணைந்து, கொடுக்கும் 'சீட்'டை பெற்று போட்டியிடுங்கள்' என கூறியதாக தகவல் வெளியானது. ஆனால், அமித் ஷாவிடம் பேசியது குறித்த விபரத்தை, பன்னீர்செல்வம் தன் ஆதரவாளர்களிடம் வெளிப்படையாக தெரிவிக்கவில்லை. இந்த சூழ்நிலையில் தான், இன்று மாலை, சென்னை -வேப்பேரியில் அவரது கழகத்தின் மாவட்டச் செயலர்கள் கூட்டம் நடக்கிறது. இக்கூட்டத்தில், முக்கிய அறிவிப்பை வெளியிட உள்ளதாக ஏற்கனவே பன்னீர்செல்வம் அறிவித்திருந்தார். 'அ.தி.மு.க.,வில் இணைவதாக இருந்தால் இணைவோம்; பா.ஜ., கூட்டணியில் 'சீட்' பெற்று, போட்டியிடுவதென்றால் வேண்டாம். 'பழனிசாமி முதல்வராவதற்காக, நாம் ஏன் உழைக்க வேண்டும்? இணைய வாய்ப்பில்லை என்றால், த.வெ.க.,வுடன் கூட்டணி அமைத்து, தேர்தலை சந்திப்பதே நல்லது' என, பன்னீர்செல்வத்திடம் அவரது ஆதரவாளர்கள் உறுதிபட தெரிவித்து உள்ளனர். மேலும், தேர்தல் நெருங்கி வருவதால், அடுத்தகட்ட முடிவை, இன்றே அறிவித்தாக வேண்டும் எனவும் நெருக்கடி கொடுத்துள்ளனர். எனவே, இன்றைய மாவட்டச் செயலர்கள் கூட்டத்தில், பன்னீர்செல்வம் தன் தரப்பின் அடுத்தகட்ட நடவடிக்கையை வெளிப்படையாக அறிவிப்பாரா அல்லது பா.ஜ., டில்லி தலைமையின் உத்தரவை எதிர்நோக்கி காத்திருப்பாரா என்பது இன்று தெரிய வரும். ஒருவேளை, பா.ஜ., முடிவுக்காக காத்திருப்பதாக அறிவித்தால், பன்னீர்செல்வம் கூடவே இன்று வரை இருக்கும் ஒரு சில தலைவர்களும், மாற்றி முடிவெடுக்க வாய்ப்புள்ளதாகவும் அ.தி.மு., தொண்டர்கள் உரிமை மீட்புக் கழகத்தினர் கூறுகின்றனர்.
எந்தவித நிபந்தனையும் இன்றி அஇஅதிமுகவில் இனைய தயார் என்று அறிவியுங்கள்.அஇஅதிமுக தலைமை ஏற்று கொள்ளும்.
ஐயோ பாவம்
பழனிச்சாமியை முதல்வராக்காமல் ஸ்டாலினை முதல்வராக்கினால் பன்னீர் தொண்டர்கள் தாராளமாக ஏற்றுக் கொள்வார்கள் போல!