மேலும் செய்திகள்
பழனிசாமிக்கு பதிலடி தரும் வகையில் கோவையில் த.வெ.க., மண்டல மாநாடு
23 hour(s) ago | 9
புதிய கட்சி துவங்க திட்டம்; பன்னீர்செல்வம் டில்லி பயணம்
03-Dec-2025 | 14
தே.மு.தி.க.,வை இழுக்கும் பா.ஜ., முயற்சி வெற்றி?
03-Dec-2025 | 10
மதுரை: தமிழக காங்.,ல் புதிய மாவட்ட தலைவர் பதவிகளுக்கு அகில இந்திய பொறுப்புக் குழுவிடம் ஏராளமானோர் விண்ணப்பம் அளித்ததால் பதவி பறிபோய்விடுமோ என 'சிட்டிங்' மாவட்ட தலைவர்கள் அதிர்ச்சியில் உள்ளனர். சட்டசபை தேர்தல் நெருங்கும் நேரத்தில் இது பெரும் குழப்பத்தை ஏற்படுத்தும் என அவர்கள் எச்சரித்துள்ளனர். தமிழக காங்.,ல் புதிய மாவட்ட தலைவர்களை தேர்வு செய்ய அகில இந்திய தலைமை சார்பில் வேறு மாநிலங்களை சேர்ந்த காங்., பொறுப்பாளர்கள் குழு நியமிக்கப்பட்டனர். மொத்தமுள்ள 77 மாவட்டங்களில் தலைவர்கள் செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்ய வட்ட, மாவட்ட நிர்வாகிகளிடம் 'சிட்டிங்' தலைவர்கள் செயல்பாடுகள் குறித்து கருத்துக்கேட்புக் கூட்டங்களை டிச.,2 முதல் 4 வரை நடத்தினர். புதிய மாவட்ட தலைவர் பதவிக்கு விருப்ப மனுக்களும் அளிக்க அக்குழு கேட்டுக்கொண்டது. பெண்கள் ஆர்வம்
இதன்படி ஒவ்வொரு மாவட்டத்திலும் 25 முதல் 50 பேர் வரை புதிய தலைவர் பதவி கேட்டு விண்ணப்பித்துள்ளனர். அவர்களை பொறுப்பு குழு நேர்காணல் செய்து குழு, பொது, மகிளா காங்., சிறுபான்மையினர், எஸ்.சி., எஸ்.டி., பிரிவு, இளைஞர் பிரதிநிதி என 6 பேர் கொண்ட பட்டியல் தயாரித்து அகில இந்திய தலைமைக்கு அனுப்பும் பணி நடக்கிறது. இதையடுத்து புதிய மாவட்ட தலைவர்கள் அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது. இதற்கிடையே 'சிட்டிங்' மாவட்ட தலைவர்களுக்கு எதிராக ஏராளமானோர் விண்ணப்பம் அளித்துள்ளது அவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து காங்., மூத்த நிர்வாகிகள் கூறியதாவது: இக்குழு கோவையில் நேர்காணல் நடத்தி 3 மாவட்ட தலைவர்களை நியமித்துள்ளது. 9 மாவட்டங்களில் தற்போது தலைவர் பதவி காலியாக உள்ளது. மீதுமுள்ள மாவட்டங்களுக்கு நேர்காணல் நடத்தி தலா 6 பேர் கொண்ட தேர்வு பட்டியல் தயாரித்து வருகிறது. மாவட்ட தலைவர் பதவியில் இருக்கும்போதே புதிய தலைவருக்கான தேர்வு நடவடிக்கையால் கட்சிக்குள் பெரும் குழப்பமான சூழல் ஏற்பட்டுள்ளது. புதிய தலைவர் பதவி கேட்டு விண்ணப்பம் அளித்த பலர் சமீபத்தில் கட்சியில் சேர்ந்தவர்களாகவும், உறுப்பினர் அட்டையே இல்லாத பலரும் உள்ளனர். புதிதாக தேர்வு செய்யப்படும் தலைவர்கள் மூலம் தான் இனி மாநில தலைவரை தேர்வு செய்ய முடியும் என்ற நடைமுறையை கொண்டுவரும் எண்ணத்தில் அகில இந்திய தலைமை உள்ளது. எனவே புதிய தலைவர்களை தேர்வு செய்வதில் தலைமை கூடுதல் கவனத்துடன் செயல்பட வேண்டும் என்றனர்.
23 hour(s) ago | 9
03-Dec-2025 | 14
03-Dec-2025 | 10