உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / முந்தும் பிரதமர் திணறும் முதல்வர் மருந்தகங்கள் மருந்து சப்ளையின்றி முடங்குகிறதா?

முந்தும் பிரதமர் திணறும் முதல்வர் மருந்தகங்கள் மருந்து சப்ளையின்றி முடங்குகிறதா?

மதுரை: மத்திய அரசின் 'பிரதமர்' பெயரிலான மருந்தகங்களை முன்மாதிரியாக கொண்டு தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்த 'முதல்வர் மருந்தகங்கள்' போதிய மருந்துகள் சப்ளையின்றி முடங்குவதாக புகார் எழுந்துள்ளது.நாடு முழுவதும் மக்களுக்கு மலிவு விலையில் மருந்துகள் கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் பிரதம மந்திரி மக்கள் மருந்தகம் (பி.எம்.பி.ஜே.பி.,) 2008ல் துவங்கப்பட்டது. 2014 வரை நாடு முழுவதும் மொத்தம் 80 மருந்தகம் மட்டும் துவங்கப்பட்ட நிலையில், 2015ல் பிரதமர் மோடி இத்திட்டத்திற்கு 'பிரதான் மந்திரி ஜன் ஒளஷதி யோஜனா' என பெயரிட்டு புத்துயிர் கொடுத்தார்.தமிழகத்தில் கோவையில் முதல் முதலில் இம்மருந்தகம் துவங்கி தற்போது 1195 மருந்தகங்கள் செயல்படுகின்றன. 35 சதவீதம் கடைகள் பெண்களால் நடத்தப்படுவது குறிப்பிடத்தக்கது. 2500க்கும் மேற்பட்ட மருந்துகள் கிடைக்கின்றன. தமிழகத்தில் நாள் ஒன்றுக்கு இந்த மருந்தகங்களில் ரூ.25 கோடி வரை மருந்து விற்பனை நடக்கிறது. ஒரு மருந்தகத்தில் நாள் ஒன்றுக்கு குறைந்தது 50 பேர் பயனடைந்து வருகின்றனர்.

முதல்வர் மருந்தகம்

மத்திய அரசு பாணியில், தமிழக அரசு சார்பிலும் பிப்.24ல் மலிவு விலையில் மருந்துகள் விற்பனை செய்யப்படும் என 1000 இடங்களில் முதல்வர் மருந்தகத்தை ஸ்டாலின் திறந்தார். இவை கூட்டுறவுத் துறை சார்பில் திறக்கப்பட்டன. அதேநேரம் இங்கு முழு அளவில் மருந்துகள் சப்ளை இல்லை என்ற சர்ச்சை எழுந்துள்ளது.பத்து மருந்துகளில் இரண்டு மட்டுமே கிடைக்கின்றன. பிற வகை மருந்துகளுக்கு தனியார் மருந்தகங்களை நாட வேண்டியுள்ளதாக மக்கள் புலம்புகின்றனர். பல இடங்களில் ஒரு கிலோ மீட்டருக்குள் அடுத்தடுத்த முதல்வர் மருந்தகம் செயல்படுவதால் விற்பனை ரீதியாகவும் பாதிப்பு ஏற்படுவதாக மருந்தக உரிமையாளர்கள் புலம்புகின்றனர்.அவர்கள் கூறியதாவது: பிரதமர் மருந்தகங்கள் மருந்தியல் அமைச்சகத்தால் துவங்கப்பட்டுள்ளது. மருந்து கொள்முதல், வினியோகம், சந்தைப்படுத்துதல் போன்றவற்றை ஒருங்கிணைந்த இந்திய மருந்து பொதுத் துறை நிறுவனங்களின் பணியகம் (பி.பி.பி.ஐ.,) மேற்கொள்கிறது. இதுபோன்ற கட்டமைப்பு தமிழகத்தில் இல்லை. அவசர கோலத்தில் முதல்வர் மருந்தகம் திறக்கப்பட்டுள்ளது. கொள்முதல் செய்யுமிடத்தில் மருந்துகளை கையாளும் பார்மசிஸ்ட்டுகளும் இல்லை. பிரதமர் மருந்தகங்களில் தேவை கருதி 20 சதவீதம் வரை வெளியே கொள்முதல் செய்து விற்பனை செய்ய வசதி உள்ளது. முதல்வர் மருந்தகத்தில் அதுபோல் வாங்கி விற்க தடை உள்ளது. மாவட்ட கிடங்குகளில் 3 மாதங்களுக்கு தேவையான மருந்துகள் இருப்பு வைக்கப்படும் என அறிவித்தும் தேவையான மருந்துகள் இல்லை.முதல்வர் மருந்தகம் நடத்துவோர் சார்பில் மதுரையில் 2 நாட்களுக்கு முன் நடந்த ஆய்வுக் கூட்டத்தில், பிப்.24 முதல் மார்ச் 15 வரை நடந்த அதிகபட்ச விற்பனையே (டாப் சேல் கடை) ரூ.30 ஆயிரம்தான் என தெரிய வந்துள்ளது. 25 சதவீதம் தள்ளுபடி உள்ளதால் மக்கள் பயன்பெறும் இம்மருந்தகங்களில் தேவையான மருந்து கிடைக்கும் வகையில் தமிழக அரசு கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 19 )

Sivagiri
மார் 17, 2025 20:21

அவரவர் திறமை தகுதிக்கேற்ற , வேலைகளைதான் பார்க்க முடியும் , . . . எதோ , அங்கங்க சாராயக்கடையை ஜரூரா நடத்துங்கப்பா , கஞ்சா புகையிலை , அடிதடி , கட்டப்பஞ்சாயத்து , அதான் உங்களுக்கு வரும் ,


nb
மார் 17, 2025 19:22

அடுத்தவனை பாத்து ஸ்டிக்கர் மட்டும் ஒட்டிகிட்டா இப்படி தான்


INDIAN Kumar
மார் 17, 2025 15:38

ஆட்சி முடிவுறும் தருவாயில் ஒரே விளம்பரம் தான், அப்பா என்று முதல்வராய் சொல்லி கொள்ள வேண்டியதுதான் .


INDIAN Kumar
மார் 17, 2025 15:36

விளம்பரங்கள் வெற்றியை தராது விடியல் ஆட்சிக்கு.


sankar
மார் 17, 2025 14:06

ஏற்கெனவே அம்மா மருந்தகங்கள் சிறப்பாக செயல்பட்டனவே - அந்த நுணுக்கம் இவர்களிடம் மிஸ்ஸிங்


Ramesh Sargam
மார் 17, 2025 12:24

டாஸ்மாக் மருந்தகங்களை, முதல்வர் மருந்தகம் என்று பெயர் மாற்றலாமா..?


தமிழ்வேள்
மார் 17, 2025 12:06

இந்த முதல்வர் கடைகளில் உதயா பவுடர், செ பா சரக்கு விற்பதாக இருந்தால் , விடியாத அரசு அனைத்து உதவிகளையும் போர்க்கால அடிப்படையில் செய்யும் ....


அரவழகன்
மார் 17, 2025 11:35

முதல்வர் மருந்தகம் தேவை இல்லாத ...


TMM
மார் 17, 2025 11:33

இது ஒன்றும்புதியது அல்ல.இந்த விடியா திராவிடமாடல் அரசு எதையும் ஒழுங்காக செய்யாது. எல்லாம் வெத்து விளம்பரம் மட்டுமே.


Velan Iyengaar, Sydney
மார் 17, 2025 11:05

புலியை பார்த்து பூனை சூடு போட்டு கொண்டதாம் ...


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை