உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / ஊழல் குற்றச்சாட்டுகளால் வீழ்ந்த அரவிந்த் கெஜ்ரிவால்

ஊழல் குற்றச்சாட்டுகளால் வீழ்ந்த அரவிந்த் கெஜ்ரிவால்

நாட்டின் தலைநகரான டில்லியில், இம்மாதம், 5ம் தேதி நடந்த சட்டசபை தேர்தலில், அங்கு ஆட்சியில் இருந்த, முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சியை தோற்கடித்து, பா.ஜ., ஆட்சியை பிடித்துள்ளது. கடந்த ஆண்டு நடைபெற்ற லோக்சபா தேர்தலில், பா.ஜ.,வுக்கு எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி கிடைக்கவில்லை.ஆனாலும், அதன்பின் நடந்த ஹரியானா மற்றும் மஹாராஷ்டிரா மாநிலங்களின் சட்டசபை தேர்தல்களில், பா.ஜ., அமோக வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. அதன் தொடர்ச்சியாக, தற்போது டில்லியையும் கைப்பற்றியுள்ளது. இதன் வாயிலாக, 26 ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ந்த போராட்டம் முடிவுக்கு வந்துள்ளது.கடந்த 2015 மற்றும் 2020 சட்டசபை தேர்தல்களில், பா.ஜ., - காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளை வீழ்த்தி, பெரிய அளவில் வெற்றிக்கொடி நாட்டிய ஆம் ஆத்மி கட்சி, இம்முறை தோல்வியை தழுவியதற்கு, அக்கட்சியின் மேல்மட்ட தலைவர்கள் மீது சுமத்தப்பட்ட ஊழல் குற்றச்சாட்டுகளும், அரசு மீதான அதிருப்தியுமே முக்கிய காரணமாகும்.காந்தியவாதி அன்னா ஹசாரே துவக்கிய ஊழலுக்கு எதிரான இயக்கம் வாயிலாக அறியப்பட்டவர் தான், அரவிந்த் கெஜ்ரிவால். அதன்பிறகே, ஆம் ஆத்மி கட்சியை துவக்கி, டில்லி சட்டசபை தேர்தல்களில் வெற்றி பெற்றார். அப்படிப்பட்ட கெஜ்ரிவாலே ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளானது, அவரின் கட்சிக்கு பெரிய பின்னடைவாக அமைந்துவிட்டது.கெஜ்ரிவால் மற்றும் அவரது கட்சியின் மூத்த தலைவர்கள் மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் உண்மையா, பொய்யா என்பது, இதுவரை நிரூபிக்கப்படவில்லை. இருந்தாலும், ஆம் ஆத்மி கட்சி மீது மிகுந்த நம்பிக்கை வைத்திருந்த டில்லிவாசிகளில் ஒரு பிரிவினர், கட்சி மாறி ஓட்டுப் போடுவதற்கு, ஊழல் குற்றச்சாட்டு ஒரு வாய்ப்பாக அமைந்து விட்டது.

காங்கிரசுடன் கைகோர்க்க மறுப்பு

இதனால் தான், ஆம் ஆத்மி மற்றும் பா.ஜ., கட்சிகள் பெற்றுள்ள ஓட்டுகளுக்கு இடையேயான வித்தியாசம் வெறும், 2 சதவீதமே என்றாலும், முன்னர் பெற்றதை விட, 10 சதவீத ஓட்டுகளை ஆம் ஆத்மி இழப்பதற்கு, ஊழல் குற்றச்சாட்டு ஒரு கருவியாக அமைந்து விட்டது.அதுமட்டுமின்றி, தேசிய அளவில் காங்., தலைமையிலான, 'இண்டி' கூட்டணியில் இடம் பெற்றுள்ள ஆம் ஆத்மி கட்சி, டில்லி தேர்தலில் காங்கிரசுடன் கைகோர்க்க மறுத்து, தனித்து களமிறங்கியது. அக்கட்சியின் தோல்விக்கு மற்றொரு காரணமாகும்.கடந்த ஆண்டு நடந்த லோக்சபா தேர்தலில், பெரும்பான்மை பெறாமல் பின்னடைவை சந்தித்ததால், இம்முறை பா.ஜ., கட்சி சுதாரித்தது. அதனால் தான், ஆம் ஆத்மி கட்சிக்கு போட்டியாக, டில்லி வாக்காளர்களை கவர, பல கவர்ச்சி திட்டங்களை தேர்தல் நேரத்தில் அறிவித்தது. அதுவும் ஆம் ஆத்மிக்கு பாதகமாக அமைந்தது.மேலும், ஆம் ஆத்மியின், 10 ஆண்டு கால ஆட்சியில், சுகாதாரம் மற்றும் கல்வியில், பல சாதனைகளை கெஜ்ரிவால் நிகழ்த்தி இருந்தாலும், குடிநீர் விநியோகம், குப்பை கழிவுகளை அகற்றுதல், யமுனையை சுத்தம் செய்தல் போன்ற விஷயங்களில் அவரது அரசு தோல்வியையே சந்தித்தது. இதுவும், தேர்தல் வெற்றிக்கு பாதகத்தை ஏற்படுத்தியது.

வருமான வரி விலக்கு வரம்பு

இதுதவிர, மத்திய பட்ஜெட்டில் சமீபத்தில் அறிவிக்கப்பட்ட வருமான வரி விலக்கு வரம்பு உயர்வு உள்ளிட்ட சலுகைகளும், டில்லி வாக்காளர்களில் பெரும்பான்மையாக உள்ள நடுத்தர வாக்காளர்களை கவர்ந்திருக்கலாம். அத்துடன், ஏற்கனவே ஆட்சியில் இருக்கும் போது பல பிரச்னைகளை சந்தித்த ஆம் ஆத்மி கட்சியின் தலைவர்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தாலும், பல பிரச்னைகளை எதிர்கொள்ளலாம். நிம்மதியாக அவர்களால் செயல்பட முடியாது என்பதை உணர்ந்து, பா.ஜ.,வுக்கு, டில்லி வாக்காளர்கள் ஆதரவு அளித்திருக்கலாம் என்றும் நம்பப்படுகிறது.மொத்தத்தில், டில்லி சட்டசபை தேர்தல் முடிவுகள், அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சிக்கு பெரும் நெருக்கடியை தரலாம். அதுமட்டுமின்றி, பஞ்சாபில் உள்ள அக்கட்சியின் ஆட்சிக்கும் பிரச்னைகள் உருவாகலாம். அதை அவர் சமாளித்து, அடுத்த தேர்தலில் வெற்றி பெற முயற்சிப்பாரா என்பதே, தற்போது எழுந்துள்ள கேள்வி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 22 )

venugopal s
பிப் 17, 2025 20:26

ஆதாரமற்ற பொய்க் குற்றச்சாட்டுகள் சுமத்தி மக்களையும் நம்ப வைத்து ஏமாற்றி வெற்றி பெறுவதில் பாஜகவினர் வல்லவர்கள்! அதைத்தான் செய்துள்ளனர்.


xyzabc
பிப் 18, 2025 02:35

வேணு, திராவிட மாடல் கட்சிக்கு இதில் phd இருக்கு


V.Mohan
பிப் 17, 2025 15:38

லஞ்சம் எப்படி வாங்கினாலும் லஞ்சம் தான். கெஜ்ரிவால் சாராய வியாபாரத்தின் அடிப்படையை மாற்றி விற்பனையாளருக்கு கிடைக்கும் குறைந்த கமிஷன் பர்சன்டேஜ் ஐ அரசுக்கு வரிவருவாயாகவும், அதிக பர்சன்டேஜ் கிடைத்த அரசின் வரி வருவாயை தனது கட்சி வேட்பாளர் கமிஷனாகவும் தோசை திருப்பிய மாதிரி செஞ்சது உலகமகா ஏமாற்று வேலை. இதை விட பெரிய இடி அவர் தலையில் விழனும். மகா மட்ட மனிதன்


xyzabc
பிப் 17, 2025 13:55

ஆனால் தி மு க வினர் வெற்றி நடை போட்டு கொண்டு இருக்கிறார்கள். பெரிய ஊழல் படை ஊர்வலமா சுத்துது. இதெல்லாம் மச்சம் செய்யும் வேலை. பணம் தின்னும் முதலைகள்.


S.V.Srinivasan
பிப் 17, 2025 13:46

காங்கிரஸுடன் கெஜ்ரிவால் கை கோத்திருந்தால் ஆம் ஆத்மி கட்சிக்கு கிடைத்த 22 தொகுதியும் பிஜேபி க்கு போயிருக்கும். அந்த விஷயத்தில் கெஜ்ரிவாலை பாராட்ட வேண்டும்.


Srinivasan Krishnamoorthy
பிப் 17, 2025 15:13

This assumption is incorrect. This did not have impact in MP elections. AAP lost all MP constituencies. May be AAP could have got some more seats. AAP cannot work with congress, see what is going to happen in punjab, aap will fall, it may be gain to congress


magan
பிப் 17, 2025 13:41

அப்படி பார்த்தால் நம் ஊரில் ஊழலை தவிர எதுவுமே செய்யாமல் 60வருடங்களா ஆட்சி செய்றங்களே அத எங்கேபோய் சொல்றது


மோகனசுந்தரம் லண்டன்
பிப் 17, 2025 13:00

இவ்வளவு நாட்களாக தினமலர் தலையங்கத்தை படிக்க முடியாமல் இருந்தது. இப்பொழுது முதற்பக்கத்தில் கொடுப்பதால் ஆர்வமுடன் படிக்க முடிகிறது நன்றி வாழ்த்துக்கள்.


Ramesh Sargam
பிப் 17, 2025 12:06

கெஜ்ரிவால் நிலை கூடிய சீக்கிரம் தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கும் நேரும்.


அப்பாவி
பிப் 17, 2025 11:51

ஆதாரமில்லாமல் ஊழல் குற்றம் சாட்டப்பட்டு ஜெயிலுக்கு அனுப்பி பா.ஜ ஜெயிச்சிருக்கு. இனிமே இந்த கேசை பெருசா எடுத்துக்க மாட்டாங்க. அப்பிடியே குட்டையை குழப்பி யமுனை ஆற்றில் கலந்துருவாங்க.


krishna
பிப் 17, 2025 18:08

MURASOLI THUDAITHA MOOLAYODU THIRIUM 200 ROOVAA KEVALAM APPAVI JAILIL AADHARAM ILLAMAL MAADHA KANAKKIL VAIKKA MUDIYUMA.UNNAI POND4A KEVALANGAL INDHIAVIN SAABA KEDU.


Premanathan Sambandam
பிப் 17, 2025 11:30

தவறான கருத்து இந்திய மக்கள் ஊழலை ஒரு தவறாகவே நினைப்பதில்லை அவர்களும் ஊழல் செய்து முன்னேறதான் ஆசைப் படுகிறார்கள் ஆனால் வாய்ப்பும் கிடைப்பதில்லை வழியும் தெரியாது எனவே திறமையான ஊழல் செய்பவர்களை ஆட்சியில் அமர்த்துகிறார்கள்


kantharvan
பிப் 17, 2025 11:03

ஏற்கனவே ஆட்சியில் இருக்கும் போது பல பிரச்னைகளை சந்தித்த ஆம் ஆத்மி கட்சியின் தலைவர்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தாலும், பல பிரச்னைகளை எதிர்கொள்ளலாம். நிம்மதியாக அவர்களால் செயல்பட முடியாது என்பதை உணர்ந்து, பா.ஜ.,வுக்கு, டில்லி வாக்காளர்கள் ஆதரவு அளித்திருக்கிறார்கள் ??இதுதான் உண்மை??? உரைகல் ஐயா?? இப்படி நிம்மதியாக செய்லபட விடாத உத்தமர்கள் யார் என்றும் சொல்லி இருக்கலாம் ?? இப்போது தமிழ் நாட்டிலும் கல்விக்கு கூட நிதி கொடுக்க முடியாது என்று ஆணவத்தோடு நடந்து கொள்கிறார்கள் மக்கள் அனைத்தையும் பார்த்து கொண்டுதான் இருக்கிறார்கள் ??


ஆரூர் ரங்
பிப் 17, 2025 11:41

நிம்மதியா என்ஜாய் பண்ணத்தானே அந்த ஏழைப் பங்காள கெஜரிவால் 100 கோடியில் சொகுசு அரண்மனை கட்டிக் கொண்டார்? காங்கிரசை ஒழிக்க ஆப் கட்சியை துவக்கி அதே காங்கிரசுடன் INDI கூட்டணியை அமைத்தார். யாரை ஏமாற்ற கூட்டணி?


N Sasikumar Yadhav
பிப் 17, 2025 12:01

அய்யா கோபாலபுர கொத்தடிமையாரே கல்விக்கு கொடுத்த நிதிக்கு கணக்கு காட்டுங்கள் . சும்மா நிதி தரவில்ல்யென உதார் விடாதீர்கள் அரசு பள்ளி மாணாக்கர்களுக்கு அரசு பள்ளியில் டிஜிட்டல் முறையில் கல்வி கற்று கொடுக்க வேண்டும் என கடந்த வருடம் 1000 கோடிக்கு மேல் மத்திய அரசிடம் நிதி வாங்கிய தமிழக மாநில அரசு. (டிஜிட்டல் என்றால் கரும்பலகை எழுதுகோல் இன்றி கணினி வழியாக பாடம் திரையில் தெரியும் படி கற்றுக் கொடுக்கும் கல்வி) பள்ளிக்கல்வித்துறையில் டிஜிட்டல் முறையில் கல்வி கற்பதாக மாணவர்களது பெயரில் அரசு பள்ளி மாணாக்கார்களை அடமானம் வைத்து நிதி வாங்கிய மாநில அரசு அதற்கு திதி கொடுத்தது தான் மிச்சம். சும்மா ஒன்னு, ரெண்டு இல்லைங்க... 1000 கோடிங்க... மும்மொழி கல்வி முறையை அமல்படுத்துவதில் உங்களுக்கு எங்கே இருக்கிறது சிக்கல். அரசியல் வியாதிகள் மற்றும் அரசு அதிகாரிகளது குழந்தைகள் எத்தனையோ மொழிகள் கற்கும் பகட்டான பள்ளிகளில் படிக்கிறார்கள். இங்கே இருக்கும் சாமானிய ஏழை வீட்டாரது குடும்பத்து மாணாக்கர்கள் மும்மொழிக் கல்வியை கற்பதில் உங்களுக்கு என்னங்க விக்கல். நிதி வேண்டும் நிதி வேண்டும் என்பார்கள் இங்கே. ஆனால் அங்கே கொடுத்த நிதிக்கு கணக்கு கேட்டால் தலை தெறிக்க ஓடிவிடுவார்கள். பூனையை புலியாக்குவோம். யானையை பூனையாக்குவோம் என உதார் விட்டு நிதி கேட்பார்கள். ஆனால் இங்கே கல்வியில் எந்த முன்னேற்றமும் இல்லை. இருந்தாலும் நிதி கிடைக்கல, நிதி வேண்டும். நிதி பத்தாது, கொடுத்த நிதி எங்கே?


புதிய வீடியோ