உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / கோவை தொகுதியை வைத்து கோடிகளில் நடக்கிறது பெட்டிங்: ரிசல்ட் தேதி நெருங்குவதால் எகிறுகிறது பரபரப்பு!

கோவை தொகுதியை வைத்து கோடிகளில் நடக்கிறது பெட்டிங்: ரிசல்ட் தேதி நெருங்குவதால் எகிறுகிறது பரபரப்பு!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கோவை தொகுதியில், யார் வெற்றி பெறுவார் என்பது குறித்து, பல கோடி ரூபாய் மதிப்பில் 'பெட்டிங்' நடப்பது தெரியவந்துள்ளது.ஏழு கட்ட லோக்சபா தேர்தலில், தமிழகத்தில் முதற்கட்டமாக கடந்த ஏப்.,29 அன்றே ஓட்டுப்பதிவு முடிந்துவிட்டது. இதனால், ஜூன் 4 வரை தேர்தல் முடிவை அறிய தமிழக மக்கள் காத்திருக்க வேண்டியுள்ளது.39 தொகுதிகளில், கோவை தொகுதியே அதிக எதிர்பார்ப்புக்குரிய தொகுதியாக மாறியுள்ளது. பா.ஜ., தலைவர் அண்ணாமலை இங்கு போட்டியிட்டிருப்பதே காரணம். அவருக்காக, பிரதமர் மோடி, தேர்தலுக்கு முன் ஒரே மாதத்துக்குள் மூன்று முறை கோவைக்கு வந்து சென்றது, இந்த எதிர்பார்ப்பை மேலும் எகிற வைத்தது.'இண்டியா' கூட்டணி சார்பிலும், காங்., மூத்த தலைவர் ராகுல், தமிழக முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு தலைவர்களும், கோவையில் பிரசாரம் மேற்கொண்டனர். பலமான ஓட்டு வங்கியைக் கொண்ட அ.தி.மு.க., தனியாக வேட்பாளரை நிறுத்தியது; கட்சியின் பொதுச் செயலாளர் பழனிசாமியும் இங்கு வந்து, தீவிரப் பிரசாரம் மேற்கொண்டார். இதனால், கடுமையான மும்முனைப் போட்டி நிலவியது.

திராவிடக்கட்சிகள் போராட்டம்

2021ல் நடந்த சட்டமன்றத் தேர்தலில், கோவை மாவட்டத்திலுள்ள 10 தொகுதிகளில், முழுமையாக தோற்று விட்ட தி.மு.க., இந்த முறை கோவையில் வெல்வதை, கவுரவப் பிரச்னையாக எடுத்துக் கொண்டது. அதனால், எப்பாடுபட்டாவது கோவை தொகுதியில் வெற்றி பெறுவதற்கு, மிகக் கடுமையான முயற்சிகளை எடுத்தது; ஓட்டு வங்கியைத் தக்க வைக்க, அ.தி.மு.க.,வும் போராடியது.தமிழகத்தின் எல்லா அரசியல் கட்சித் தலைவர்களையும் கிழித்தெடுக்கும் பா.ஜ., தலைவர் அண்ணாமலை, கோவை தொகுதியில் நின்றதால், அக்கட்சியினரும் அவரை வெற்றி பெற வைப்பதற்கு, மிகத் தீவிரமாக வேலை பார்த்தனர். அவர் வெற்றி பெற்று மத்திய அமைச்சராகிவிட்டால், கோவைக்குத் தேவையான பல்வேறு திட்டங்களும் நிறைவேற்றப்படும் என்றும் பிரசாரம் மேற்கொண்டனர்.

களைகட்டும் பந்தயம்

இதனால் தான், இந்தத் தொகுதியில் யாருக்கு வெற்றி கிடைக்கும் என்பதை, இப்போது வரை யாராலும் கணிக்க முடியாத நிலை உள்ளது. கோவை தொகுதியில் பா.ஜ., தலைவர் அண்ணாமலை போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்ட நாளில் துவங்கிய பரபரப்பு, நாளுக்கு நாள் அதிகமானது. இந்த பரபரப்பையும், எதிர்பார்ப்பையும் வைத்து, கோவையில் யார் வெற்றி பெறுவார் என்று பந்தயம் கட்டத் துவங்கினர். ஓட்டுப்பதிவு நடக்கும் நாள் வரையிலும், பல தரப்பிலும் 'பெட்டிங்' நடத்துவது அதிகமானது. அரசியல் ஆர்வமுள்ள பலரும், தங்கள் வசதிக்கேற்ப, ஆயிரத்திலிருந்து பல லட்சங்கள் வரை 'பெட்டிங்' கட்டி வைத்துள்ளனர். வசதி படைத்த சிலர், தங்களுடைய வாகனங்கள், இடங்கள் உள்ளிட்ட சொத்துக்களையும் வைத்து, 'பெட்டிங்' கட்டியிருப்பதாக தகவல் பரவியுள்ளது.ஓட்டு எண்ணிக்கைக்கு ஐந்து நாட்களே இருப்பதால், 'பெட்டிங்' கட்டியவர்கள் அனைவரும் பதற்றத்தில் தவிக்கின்றனர். எத்தனை ஆயிரம் பேருக்கு எத்தனை லட்சம் லாபம், நஷ்டம் என்பது ஜூன் 4 மதியத்துக்குள் தெரிந்துவிடும்!-நமது சிறப்பு நிருபர்-


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

Murugavel k
மே 30, 2024 20:25

உங்க கருத்துக்களை சொல்லுன்னா வடக்கன் தெக்கன்ன்னு ஏன்டா கதற்ரீங்க வடக்கன் இல்லைனா அவரை கூந்தல் வேலையும் இங்க நடக்காது


Azar Mufeen
மே 30, 2024 22:41

தமிழனை டுமிழன் என்று சொல்லும்போது வராத கோபம் வடக்கன்ஸ்களை சொல்லும்போது ஏன் வருகிறது மரியாதை அனைவருக்கும் மிக முக்கியம்


venugopal s
மே 30, 2024 16:54

ஏதாவது அதிசயம் நடந்து வெற்றி பெறும் என்ற நம்பிக்கையில் நொண்டிக் குதிரை மீது பணம் கட்டும் ஆட்களும் இருக்கின்றனர்!


JAYACHANDRAN RAMAKRISHNAN
மே 30, 2024 14:49

பெட்டிங் கட்டியவர்கள் "தண்ணீர் மேல் தாமரை இலை போல்" தவிக்கிறார்கள். ஓட்டுக்கு காசு வாங்கிய தமிழர்கள் டாஸ்மாக்கோடு சந்தோஷமாக உள்ளார்கள். பூக்களில் தாமரைக்கு என்றுமே சிறந்த மதிப்பும் மரியாதையும் உண்டு.


Azar Mufeen
மே 30, 2024 14:17

அய்யா வடக்கன்ஸ் எப்படி, மொத்தமா வேட்பாளரையே காசு கொடுத்து தேர்தலையே நடக்கவிடமாட்டார்கள். இனி தமிழனை குறை கூறாதீங்க


Jai
மே 30, 2024 13:12

rs.500 கொடுத்த கட்சி வெற்றி பெரும். rs.200 கொடுத்த கட்சி இரண்டாம் இடம். எதுவும் கொடுக்காத கட்சி முன்றாம் இடம். டுமிலன் வாங்கின காசுக்கு நன்றியுடன் இருப்பான்.


சிவா
மே 30, 2024 07:48

கஷ்டப்பட்டு சம்பாதித்த காசாயிருந்தால் இந்த "பெட்டிங்" விளையாடத் தோன்றுமா? உங்களிடம் தேவைக்கதிகமாக பொருள் இருந்தால் அதை அனாதை ஆசிரமங்களுக்கோ, ஏழை மாணவர்களின் படிப்புக்கோ, ஏழைகளின் பசியாற்றும் தொண்டு நிறுவனங்களுக்கோ அளித்தால் புண்ணியமாவது கிடைக்குமே !


shyamala
மே 30, 2024 09:42

April 19


மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை