உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / பா.ஜ., தலைமை ஆலோசனை!: டில்லி உஷ்ஷ்ஷ்

பா.ஜ., தலைமை ஆலோசனை!: டில்லி உஷ்ஷ்ஷ்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: தமிழகத்தில் பா.ஜ., காலுான்றும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை. தமிழகத்திற்கென தனி கவனம் செலுத்தி, பிரதமர் மோடி உட்பட பா.ஜ.,வின் சீனியர் தலைவர்கள் பல முறை தமிழகம் வந்து பிரசாரம் செய்தனர். அப்படியிருந்தும் ஏன் இப்படி? இது குறித்து, 6ம் தேதி டில்லியில் ஒரு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.பா.ஜ.,வின் தேசிய தலைவர் ஜே.பி. நட்டா தலைமையில் கூட்டம் நடைபெற்றது; இதில், சீனியர் ஆர்.எஸ்.எஸ்., தலைவர்களும் பங்கேற்றனர். அதில், 'தமிழகத்தில் எந்த இடங்களில் பா.ஜ.,விற்கு அதிக ஓட்டுகள் கிடைத்தது, எங்கு பின்னடைவு ஏற்பட்டது' என்பது குறித்தும் விவாதிக்கப்பட்டது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=0d44r3c8&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0தேர்தல் சமயத்தில் பா.ஜ.,வில் நடந்த பண பட்டுவாடா மோசடி, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலைக்கு எதிரான புகார்கள் என, பல விஷயங்கள் இந்த கூட்டத்தில் அலசப்பட்டதாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Saran balaji
ஜூன் 10, 2024 10:28

OPS, தினகரன் போன்றோரை சேர்க்காமல் அதிமுக உடன் கூட்டணி வைத்திருந்தால் பிஜேபி ஜெயித்திருக்கும் மற்றும் அண்ணாமலையின் தான்தோன்றிதனமான நடவடிக்கை சரியில்லை


பேசும் தமிழன்
ஜூன் 09, 2024 09:14

கட்சிக்கு ஆதரவு இருந்தால் மட்டும் போதாது.. ஒவ்வொரு ஊரிலும் பிஜெபி கொடி கம்பம் இருக்க வேண்டும்.. கிளை அமைக்க வேண்டும். அப்போது தான் தேர்தல் சமயங்களில் ஆதரவு தரும் மக்களை ஓட்டாக மாற்ற முடியும்.. இதை தமிழக பிஜெபி கட்சி முதலில் செய்ய வேண்டும்.


மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ