உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / எம்.ஜி.ஆர்., ஓட்டுகளை குறிவைக்கும் பா.ஜ.,: அண்ணாமலை அறிக்கைக்கு பின்னணி என்ன?

எம்.ஜி.ஆர்., ஓட்டுகளை குறிவைக்கும் பா.ஜ.,: அண்ணாமலை அறிக்கைக்கு பின்னணி என்ன?

சென்னை : அ.தி.மு.க.,வில் உள்ள எம்.ஜி.ஆர்., விசுவாசிகளின் ஆதரவை பெறும் நோக்கில், அவரை புகழ்ந்து மூன்று பக்க அறிக்கை வெளியிட்டுள்ளார், தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை.

இதுகுறித்து, பா.ஜ., வட்டாரங்கள் கூறியதாவது:

பா.ஜ., ஆதரவாளர்களாக இருந்தாலும், அ.தி.மு.க., பொதுச்செயலராக, ஜெயலலிதா இருந்த வரை, அக்கட்சிக்கே பலரும் ஓட்டளித்து வந்தனர். பா.ஜ., ஆதரவாளர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் போட்டியிட்டால், அந்த ஓட்டுகள் அப்படியே தங்களுக்கு கிடைக்கும் என, அ.தி.மு.க., நிர்வாகிகளே நம்பினர்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=f1dsi9sm&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0ஜெயலலிதா மறைவுக்கு பின், அ.தி.மு.க.,வில் பிளவு ஏற்பட்டது. தமிழக பா.ஜ.,வுக்கும் வலுவான தலைமை கிடைத்தது. மாநில தலைவர் அண்ணாமலை, ஜெயலலிதா பாணியில் தி.மு.க., மற்றும் அக்கட்சி தலைவர்களின் மீது ஊழல் குற்றச்சாட்டுகளை தெரிவித்து வருகிறார். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை தொடர்ந்து, இந்தாண்டு நடந்த லோக்சபா தேர்தலிலும், பா.ஜ., தலைமையில் தனி கூட்டணி அமைத்தார். இதனால், பா.ஜ.,வினர் ஓட்டுகள் மட்டுமின்றி, ஜெயலலிதா இருந்தவரை, அ.தி.மு.க.,வுக்கு ஓட்டளித்த பலரும் பா.ஜ., பக்கம் திரும்பினர். இதன் காரணமாகவே, பல தொகுதிகளில் பா.ஜ.,வும், அதன் கூட்டணி கட்சிகளும் இரண்டாம் இடத்தை பிடித்தன. இதன் தொடர்ச்சியாக, அ.தி.மு.க.,வில் உள்ள எம்.ஜி.ஆரின் விசுவாசிகளின் ஓட்டுகளையும் பா.ஜ., வளைக்க தீவிரம் காட்டி வருகிறது. இதற்காக, எம்.ஜி.ஆர்., நினைவு தினத்தை முன்னிட்டு, காமராஜ் உடன் எம்.ஜி.ஆரை ஒப்பிட்டும், எம்.ஜி.ஆர்., முதல்வராக இருந்தபோது அமல்படுத்தப்பட்ட திட்டங்களை விவரித்தும், அண்ணாமலை, மூன்று பக்க அறிக்கை வெளியிட்டுள்ளார். இதற்கு, அ.தி.மு.க., தொண்டர்களிடம் வரவேற்பு கிடைத்துள்ளது. இதை தாங்க முடியாமல் தான், முன்னாள் அமைச்சர் ஜெயகுமார், அண்ணாமலையை இந்த விவகாரத்தில் காட்டமாக விமர்சித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். இவ்வாறு அந்த வட்டாரங்கள் கூறின.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 19 )

venugopal s
டிச 25, 2024 16:25

திமுக அதிமுக எதிர்ப்பு ஓட்டுக்களையே வாங்க முடியாதவர்கள் எம் ஜி ஆர் ஓட்டுக்களை அள்ளப் போகிறார்களாம்!


Narasimhan
டிச 25, 2024 15:12

ஒண்ணும் நடக்காது சார். இருநூறு ரூபாய் குரூப் யாரையும் அண்டவிடாது. கள்ளச்சாராயம் குடித்தோ, குடும்பத்தாரையே கொள்ளை அடித்தாலோ கொலை செய்தாலோ கூட பிரியாணி குவாட்டர் கிடைத்தால் போதும். வோட்டு அங்குதான் விழும்.


Harindra Prasad R
டிச 25, 2024 13:37

ஜெயக்குமார் போல MGR காலத்தில் ஆள் இல்ல இத்திருந்தால் மதத்தை பற்றி பேசி MGR பெயரை கெடுதிருக்கலாம் .. இப்பவும் ஓட்டுக்காகத்தான் தமிழகத்தில் மதம் பற்றி பேசி சிறுபான்மையினரின் ஓட்டை வாங்க முயற்சி செய்யும் வேலை இனி பலிக்காது என்று சிறுபான்மையினருக்கும் தெரிந்துவிட்டது .... இனி திராவிட திருட்டு கட்சிகளுக்கு வேலை இருக்காது.........


Sampath Kumar
டிச 25, 2024 08:53

ஜி பற்றி சொல்லி வோட்டுக்கேட்டு பாரு பார்க்கலாம் முடியுமா ?/ போவியா ?


hari
டிச 25, 2024 10:44

சம்பத்து,, ஒத்த கட்சிய நின்ணு பாரு.....டெபாசிட் கூட வாங்காது.....நீ முட்டு குடுக்கும் கட்சி....காமெடி பண்ணாதே


பேசும் தமிழன்
டிச 25, 2024 14:02

உங்க ஆளு..... 14 கட்சி கூட்டணி இருந்தும்... RK நகர் இடை தேர்தலில் டெபாசிட் கூட வாங்க முடியாத நிலை ஏற்பட்டது..... அதை மறந்து விட வேண்டாம்.... அது தான் உங்கள் கட்சியின் உண்மையான ஓட்டு சதவீதம்.


அப்பாவி
டிச 25, 2024 08:48

எம்.ஜி.ஆர் சிறுவயதிலிருந்தே பா.ஜ ஆதரவாளர். அவருக்கு பிடித்த பூ தாமரை. அமெரிக்கன் டீப் ஸ்டேட் தான் அவரை தி.மு.க ஆதரவாளராக மாற்றிவிட்டது. இதை புரிந்து கொண்டு ரிக்ஷாக்காரன் ரசிகர்கள் பா.ஜ வுக்கு வாக்களிக்க வேண்டும்.


Sakthi,sivagangai
டிச 25, 2024 10:03

அப்படியே அந்த பாஞ்சி லட்சத்தை கேளு அப்புசாமி


Haja Kuthubdeen
டிச 25, 2024 20:43

புரட்சிதலைவர்எம் ஜி ஆர் உயிரோடு இல்லை என்று அவுத்து விடவேணாம்..அவர் இருந்தப்ப பிஜேபி தொடங்கவே இல்லை...ஜாதி மதம் கடந்து அனைத்து மக்களாலும் விரும்பப்பட்டவர் அவர்...இன்றும் என்னைப்போன்ற பல லட்சம் பேரு மனதில் அவர் இருக்கார்.


chennai sivakumar
டிச 25, 2024 08:33

வரும் தேர்தலில் ஓட்டு சதவீதம் மிக குறைவாக இருக்கும். எல்லோரும் ராமன் ஆண்டால் என்ன இராவணன் ஆண்டால் என்ற மனநிலைக்கு தள்ள பட்டு இருக்கிறார்கள். படித்தவர்கள் வாக்கு சாவடிக்கு வந்து ஓட்டளிப்பது மிக கடினம். வழக்கம் போல உபீஸ்+ குவாட்டர்+ கேஷ் கிப்ட் ஓட்டுக்கள் மட்டுமே பதிவாகும். Needless to mention who will come back. Please watch in 2026


S.L.Narasimman
டிச 25, 2024 08:16

என்ன புகழ்ந்தாலும் அதிமுகாவினர் மாற்றி வோட்டோ, கட்சி மாறமாட்டார்கள். இப்படிபட்ட கூட இருந்து குழி தோண்ட நினைக்கும் நபர் தலைவனாக இருக்கும் பட்சத்தில் பிசெபியுடன் எப்படி அதிமுக கூட்டு சேரும்.


சம்பா
டிச 25, 2024 06:40

நீ புகழ்ந்த ஓட்டு போட மாட்டான் உன்ன பத்தி தெரியும்


V வைகுண்டேஸ்வரன், Chennai
டிச 25, 2024 07:56

டேய் சாம்பார், எல்லாரையும் உன்ன மாதிரி 200 ரூவா அப்டின்னு நெனைச்சா...உன் ஓட்டு யாருக்கு வேண்டும். அடுத்தும் எங்க ஆட்சியே. இன்னும் உன் கதறல் கேட்கட்டும். ரொம்ப இனிமை. மொத கையெழுத்து நீட் ஒழிப்பு, ஹிந்தி தெரியாது போ, ஆறிய எதிர்ப்பு சனா தான அழிப்பு அப்டின்னு இன்னு உருட்டு...


SANKAR
டிச 25, 2024 21:22

thadabudalaa neeeelama Central Station perai maaththiyum onnum panna mudiyala.


rama adhavan
டிச 25, 2024 05:41

எம் ஜீ ஆர், அம்மா விசுவாசிகள் ஓட்டு தற்போதைய தலைமையின் கீழ் உள்ள ஆதிமுகவிற்கு கிடைப்பது சந்தேகமே.


முக்கிய வீடியோ