உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / பா.ஜ., வில் நடிகை மீனா

பா.ஜ., வில் நடிகை மீனா

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மத்திய அமைச்சர் முருகன் வீட்டில் நடந்த பொங்கல் விழாவில் பிரதமர் மோடியுடன் நடிகை மீனாவும் பங்கேற்றதால் அவர் பா.ஜ.வில் இணைந்து தேர்தலில் போட்டியிடுவாரா என்ற கேள்வி அக்கட்சியினரிடையே எழுந்துள்ளது.தற்போதைய நிலையில் தென் சென்னை லோக்சபா தொகுதி தங்களுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதியாக தமிழக பா.ஜ. தரப்பில் கருதப்படுகிறது.இண்டியா கூட்டணி கட்சியின் வேட்பாளராக மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல் போட்டியிடுவார் என்ற எதிர்ப்பு அக்கட்சியில் எழுந்துள்ளது.கமல் போட்டியிடும் பட்சத்தில் தமிழக பா.ஜ. சார்பில் நட்சத்திர வேட்பாளரை களம் இறக்கவும் ஆலோசித்துள்ளது.தென் சென்னை தொகுதியில் பா.ஜ. மாநில நிர்வாகிகள் டாக்டர் மைத்ரேயன், நாராயணன் திருப்பதி, நடிகை குஷ்பு சுமதி வெங்கடேசன் சூர்யா உள்ளிட்டோர் மத்தியில் போட்டி உருவாகியுள்ளது.தென் சென்னை தொகுதி மேலிட பொறுப்பாளராக கரு.நாகராஜனும் இணை பொறுப்பாளராக கராத்தே தியாகராஜனும் நியமிக்கப்பட்டுள்ளனர்.கடந்த சட்டசபை தேர்தலில் குஷ்பு ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். தற்போது அவர் தேசிய மகளிர் ஆணையத்தின் உறுப்பினராக உள்ளார்.தென் சென்னையில் கமல் போட்டியிட்டால் அவரை எதிர்த்து குஷ்பு போட்டியிடுவரா என்பதும் கேள்விக்குறியாக உள்ளது.இந்நிலையில் மத்திய அமைச்சர் முருகன் டில்லியில் உள்ள தன் வீட்டில் நேற்று முன்தினம் பொங்கல் விழாவில் பங்கேற்றார்.இந்த விழாவில் நடிகை மீனாவும் பங்கேற்றார். தென் சென்னை தொகுதியில் அடங்கிய சைதாப்பேட்டை ஸ்ரீநகர் காலனியில் நடிகை மீனா வசிக்கிறார்.அவரை பா.ஜ. வில் இணைத்து தென் சென்னை தொகுதி வேட்பாளராக்க பா.ஜ. டில்லி மேலிடம் காய் நகர்த்துகிறதா என்ற கேள்வியும் அக்கட்சியில் எழுந்துள்ளது.இது தொடர்பாக மீனாவின் கருத்து கேட்க அவரது மொபைல்போனில் தொடர்பு கொண்ட போது மீனாவின் தாயார் ராஜமல்லிகா 'மீனா வெளியூர் சென்றுள்ளார்' என்றார்.'டில்லியில் பிரதமர் மோடி பங்கேற்ற பொங்கல் விழாவில் மீனாவுக்கு முக்கியத்துவம் தரப்பட்டுள்ளதால் அவர் பா.ஜ. வில் சேருகிறாரா?' என்ற கேள்வியை கேட்டதற்கு ராஜமல்லிகா ''கட்சியில் சேரும் முடிவை மீனா தான் எடுக்க வேண்டும்.''பொங்கல் விழா என்பதால் மீனா பங்கேற்றார். அவர் கட்சியில் சேருவாரா என்பது எனக்கு தெரியாது. கட்சியில் சேரும் எண்ணத்தில் பொங்கல் விழாவில் மீனா பங்கேற்கவில்லை'' என்றார்.-நமது நிருபர்-


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 37 )

J.V. Iyer
ஜன 18, 2024 06:22

இப்போதெல்லாம் 'பாரதமாதாவுக்கு வெற்றி (ஜெய் ஹிந்த்), ஜெய் ஸ்ரீராம்' என்று சொன்னாலே பாஜக உறுப்பினர்கள் என்று நினைக்கிறார்கள். என்ன செய்வது. அவர்களுக்குத்தான் இருக்கிறது நாட்டுப்பற்று, மற்றும் தெய்வ நம்பிக்கை. மற்றவர்கள் தேச விரோதிகள், ஹிந்து விரோதிகள் என்று சொல்கிறார்களா?


Vijay D Ratnam
ஜன 16, 2024 23:38

தென் சென்னை பாராளுமன்ற தொகுதியில் இண்டி கூட்டணியில் ஸ்டார் வேட்பாளராக கமல் போட்டியிட்டால் நிச்சயம் வெல்வார். அதுல எந்த சந்தேகமும் இல்லை. திமுக, காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்ட், தமுமுக என்று எல்லா கட்சிகளுக்கும் தென் சென்னையில் கணிசமான வாக்கு வங்கி உள்ளது. இஸ்லாமியர்களும் கிறிஸ்தவர்களும் அதிகம் வசிக்கும் பகுதியாகவும் உள்ளது. அது மட்டுமல்ல பாஜக அதிமுக கூட்டணி முறிந்து வாக்குகள் சிதறுவதால் கமல்ஹாசன் சுலபமாக வென்று விடுவார். சரி ஜெயித்து என்ன செய்வார். கடந்த ஐந்து வருடங்களாக தமிழ்நாடு பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற உறுப்பினர்கள் என்ன செய்து கிழித்தார்களோ அதைத்தான் இவரும் செய்வார். கடந்த எம்.பி தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் கனிமொழி மூன்றரை லட்சம் வாக்கு வித்தியாசத்தில் தமிழிசையை வென்றார். தமிழிசை வெற்றி பெற்றிருந்தால் உறுதியாக மத்திய மந்திரி ஆகி இருப்பார், பாஜகதான் அறுதி பெரும்பான்மை பெற்று ஆட்சியமைக்கும் என்று அந்த மக்களுக்கு தெரிந்தும் கனிமொழிக்கு வாக்களித்தார்கள். தங்கள் தலையில் தாங்களே மண்ணை வாரி போட்டுகொண்டார்கள் தூத்துக்குடி மக்கள். கனிமொழியால் ஏதாவது தம்படிக்கு பிரயோஜனம் இருந்ததா. இப்பவும் அப்டித்தான் வாக்களிப்பார்கள். தென் சென்னையில் கமல் என்ன கருணாஸ் நின்றாலும் வெற்றி உறுதி.


Siddhanatha Boobathi
ஜன 16, 2024 23:23

கவுதமி இல்லேன்னா மீனா


Venkataraman
ஜன 16, 2024 23:11

மீனா அவர்கள் அரசியலில் நிச்சயமாக சேர மாட்டார்.


beindian
ஜன 16, 2024 15:57

இதெல்லாம் ஒரு பொழப்புன்னு இந்த ப்பீஸேப்பீ கோஷ்டி இப்படி அலையுது


ராஜேந்திரன்,அரியலூர்
ஜன 16, 2024 19:32

நீயெல்லாம் மூளை வளர்ச்சி அடையாமல் ஜோம்பி மாதிரி இன்னும் அறிவாலயத்துல அடிமையாக சுத்திட்டு இருக்கியே உனக்கெல்லாம் பிஜேபியை பற்றி ஏதாவது தெரியுமா? அந்த அறிவுதான் உனக்கு இருக்கா?


rajen.tnl
ஜன 16, 2024 21:11

நயன்தாராவுக்கு பம்பாய் யில் கேச முடிக்க வக்கீலை அனுப்புவது உதயநிதிதான் .. இது பொழப்பா


Veeraraghavan Jagannathan
ஜன 16, 2024 21:22

மூர்க்க மதத்துக்கு காரனுக்கு எப்படி விளங்கும்?


Velan Iyengaar
ஜன 16, 2024 15:42

முருகனுக்கும் சினிமா உலகுக்கும் ரொம்போ நெருக்கமான தொடர்பு போலயே ஒரே ஜாலி தான்


g.s,rajan
ஜன 16, 2024 12:58

எப்படியோ பஞ்சம் பொழைக்கணும் ....


g.s,rajan
ஜன 16, 2024 12:57

இனி அரசியலில் சேவை செய்யப்போறாங்க ....


s vinayak
ஜன 16, 2024 12:27

மைத்ரேயன் பெயரை consider பண்ண கூடாது. பச்சோந்தி. திமுக கூட்டணி வெற்றி உறுதி.


திகழ்ஓவியன்
ஜன 16, 2024 12:14

மீனா இணைந்த வுடன் TN bjp க்கு வோட்டு குவிய போகுது என்று எவனாவது நினைத்தால் அவன் தான் உலகமகா புத்திசாலி


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை