உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / போலீஸ் மிரட்டலால் ஓட்டம் பிடித்த பா.ஜ.,

போலீஸ் மிரட்டலால் ஓட்டம் பிடித்த பா.ஜ.,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ராசிபுரம் : ராசிபுரம் டாஸ்மாக் மதுபான கடை சுவரில், தமிழக முதல்வரின் படத்தை ஒட்ட வந்த பா.ஜ., மகளிரணியினரை, போலீசார் மிரட்டியதால் போராட்டத்தை வாபஸ் பெற்று கலைந்து ஓடினர். தமிழக அரசின் டாஸ்மாக் நிறுவனத்தில் சமீபத்தில் சோதனையிட்ட அமலாக்கத் துறையினர், 1,000 கோடி ரூபாய்க்கு மேல் ஊழல் நடந்திருப்பதைக் கண்டறிந்தனர்; அதற்கான ஆவணங்களையும் கைப்பற்றி உள்ளனர். இப்படி ஊழலில் ஊறித் திளைக்கும் டாஸ்மாக் நிறுவனத்தைக் கண்டித்து, டாஸ்மாக் கடைகள்தோறும் முதல்வர் ஸ்டாலின் படத்தை ஒட்டும் போராட்டத்தை அறிவித்தார் தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை. அதன்படி, நேற்று ராசிபுரம் பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள டாஸ்மாக் மதுபானக் கடையில் முதல்வர் ஸ்டாலின் படத்தை ஒட்டப்போவதாக, ராசிபுரம் நகர பா.ஜ., மகளிரணியினர் அறிவித்திருந்தனர். இதற்காக, நேற்று மதியம் 12:30 மணிக்கு மகளிரணியைச் சேர்ந்த பலர், ராசிபுரத்தில் பஸ் ஸ்டாண்ட் பகுதிக்குள் இருக்கும் டாஸ்மாக் கடை நோக்கி வந்தனர். இதை அறிந்து, அங்கு வந்த ராசிபுரம் போலீசார், 'இப்படி போராடுவோர் மீது, நேற்று வரை வழக்கு மட்டுமே போடச் சொல்லி மேலிடத்தில் இருந்து உத்தரவு வந்தது. ஆனால், இன்று கைது செய்ய உத்தரவிட்டுள்ளனர். வாகனம் தயாராக இருக்கிறது. இன்று கைது செய்யப்பட்டால், சனி, ஞாயிறு இரண்டு நாட்கள் கட்டாயம் ஜெயிலுக்குள் இருந்தாக வேண்டும். ஜாமினும் அவ்வளவு எளிதில் கிடைக்காது; வசதி எப்படி?' என போராட வந்தோரிடம் கேட்டுள்ளனர். இதைக் கேட்ட பா.ஜ., மகளிரணியினர், 'போராட்டம் வாபஸ்' என கூறிவிட்டு, அங்கிருந்து ஓட்டமும் நடையுமாக கிளம்பினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

venugopal s
மார் 22, 2025 21:07

குப்புற விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்று சொல்லி பாஜக ஆதரவாளர்கள் திருப்திப் பட்டுக் கொள்ள வேண்டியதுதான்!


சிவம்
மார் 22, 2025 17:58

பிஜேபியின் இந்த சுவரொட்டி போராட்டம் தேவையற்றது. காவல் துறையின் நேரமும் வீணாகிறது. அமலாக்க துறையின் நேரடியான ரெய்டு மூலம் பெறப்பட்ட ஆதாரங்கள் அடிப்படையிலேயே மத்திய அரசு நடவடிக்கை எடுக்கலாம். இதுவரை இது போன்ற ரெய்டுகளில் பெறப்பட்ட ஆதாரங்கள் வழியே எந்த நடவடிக்கையும் மத்திய அரசு எடுக்க வில்லை. அல்லது காலம் தாழ்த்துகிறது. நமக்கே தெரியும் பொது அண்ணாமலைக்கு தெரியாதா. பின்பு சுவரொட்டி போராட்டம் எதற்கு என்று புரியவில்லை.


அசோகன்
மார் 22, 2025 17:29

இதற்கு பெயர்தான் சர்வாதிகார அரசியல் தன்னை பற்றி எதாவது சொன்னாலே கைது.........


அருண், சென்னை
மார் 22, 2025 08:20

ஆடு போலீசை வைத்து ஆட்டம் ஆடு...எவ்வளவு நாள் அல்லது வருடம் பார்க்கலாம்... தந்தை இருந்த தைரியத்தில் என்ன ஆட்டம் ஆடினாய், பிறகு புரட்சி தலைவர் MGR என்ன செய்தாரோ அது மறுபடியும் நடந்தே தீரும்..


மண்டைக்காடு பகவதி
மார் 22, 2025 06:11

இது பிஜேபியின் தோல்வி அல்ல‌ அண்ணாமலையின் வெற்றி. போலீஸை பூரா எல்லா டாஸ்மாக் கடை வாசலில் நிக்க வச்சிட்டாருள்ள. அவங்க போலீச வைத்தே டாஸ்மாக் ஊழல அடுத்த கட்டத்துக்கு கொண்டு போயிட்டார். அண்ணாமலை உன்மையிலேயே மலை, மோதுனா உங்கள் மண்டை காலி


vijai hindu
மார் 22, 2025 10:53

சூப்பர் அண்ணாமலை


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை