உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / அல்வா கிண்டும் விவகாரம்: டில்லியில் தலைவலி!

அல்வா கிண்டும் விவகாரம்: டில்லியில் தலைவலி!

வரும், 2026 - -27ம் ஆண்டிற்கான பட்ஜெட் தயாரிப்பில் படு பிஸியாக உள்ளார், நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன். ஆனால், இவருக்கு மூன்று விஷயங்களில் பெரும் பிரச்னை. முதலாவது, வழக்கமாக பட்ஜெட் பிப்., 1ம் தேதி பார்லிமென்டில் தாக்கல் செய்யப்படும். ஆனால், அடுத்த ஆண்டு பிப்ரவரி 1ம் தேதி ஞாயிற்றுக் கிழமை.அன்று எப்படி தாக்கல் செய்வது? ஜனவரி 31ம் தேதி சனிக்கிழமை அல்லது பிப்ரவரி 2ம் தேதி திங்களன்று பட்ஜெட் தாக்கல் செய்ய வேண்டும். ஞாயிறன்று தாக்கல் செய்வதாக இருந்தால், பார்லிமென்ட் சிறப்பு கூட்டத்தைக் கூட்ட வேண்டும். இந்த பிரச்னையை பிரதமர் மோடியிடம் சொன்னாராம் நிதி அமைச்சர். 'நீங்கள் கவலைப்பட வேண்டாம்; இதை நான் பார்த்துக் கொள்கிறேன்' என, பதில் அளித்தாராம் மோடி.இரண்டாவது பிரச்னை, பட்ஜெட்டை எங்கே பிரின்ட் செய்வது? நிதி அமைச்சகம், தற்போது டில்லியின் நார்த் பிளாக்கிலிருந்து, புதிதாக கட்டப்பட்டுள்ள, கர்த்தவ்ய பவனுக்கு மாறிவிட்டது. வழக்கமாக, நார்த் பிளாக்கின் பேஸ்மெண்டில் தான் பட்ஜெட் பிரின்ட் செய்வர். இப்போது என்ன செய்யலாம்?- 'இதைப் பற்றியும் கவலைப்பட வேண்டாம்; என்னிடம் விட்டுவிடுங்கள்' என்றாராம் மோடி.மூன்றாவது, அல்வா கிண்டுவது. பட்ஜெட் வேலைகளை துவங்குவதற்கு முன், அல்வா- கிண்டுவது வழக்கம். நிதி அமைச்சர் மற்றும் அதிகாரிகள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பர்; இதை ராகுல் எதிர்க்கிறார். 'அல்வா கிண்டும் நிகழ்ச்சியில், ஒருவர் கூட பின் தங்கிய அல்லது தாழ்த்தப்பட்ட சமூகத்தினர் இல்லை' என்பது ராகுலின் குற்றச்சாட்டு. இந்த பிரச்னையையும் தீர்ப்பதாக, நிர்மலா சீதாராமனிடம் உறுதி அளித்துள்ளாராம் மோடி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

மாயவரம் சேகர்
நவ 16, 2025 20:19

அல்வா கிண்ட , மோடி எந்த சாதியினரை கூப்பிட்டாலும் காஷ்மீரை, சேர்ந்தவரை, கூப்பிட்ட வேண்டும் என அழுத்தமாகச் சொல்வார் ராகுல் இப்போது வெளிநாட்டில் இருக்கும் அவர் அந்த திட்டத்துடன்தான் வருவார்.


M Ramachandran
நவ 16, 2025 17:48

ராகுலுக்காக நிறைய நிறைய ஆல்வா கொடுங்க்கள். பிகார் தேர்தலில் உங்க்ளுக்காக உழைத்தவர்


Shekar
நவ 16, 2025 09:54

இந்த ராகுலும் ஸ்டாலினும் எப்போதும் பயன்படுத்தும் கேடயம் பிற்பட்டோர், சமூகநீதி.


Rajarajan
நவ 16, 2025 07:36

அரசின் மொத்த வருவாயில், அதிகளவு அரசு ஊழியருக்கு சம்பளம், சலுகை, போனஸ், ஊதிய உயர்வு, பஞ்சபடி, ஓய்வூதியமாக போகிறது என்ற கவலை இல்லையா ?? தேவையற்ற மற்றும் நஷ்டத்தில் இயங்கும் பொதுத்துறை / அரசு துறைகளின் வீணான செலவை பற்றி கவலை இல்லையா ?? இவற்றை மிச்சப்படுத்தினால், நாட்டின் எதிர்கால அடுத்தகட்ட வளர்ச்சிக்கு அதை கொண்டுசெல்லும் கவலை இல்லையா ?? அரசு ஊழியரின் செலவு தேவை போக, மீதி தானே நாட்டின் வளர்ச்சி திட்டத்திற்கு பட்ஜெட்டில் ஒதுக்க முடிகிறது. இதற்காக மேலும் மேலும் கடன் வாங்கி, பொதுமக்களின் தலையில் வரி மற்றும் விலைவாசி சுமையை ஏற்றுவது பற்றி கவலை இல்லையா ?? இவ்வளவு கவலைகளை என்ன செய்ய ??


Senthoora
நவ 16, 2025 06:42

இந்த அம்மா முதலில் கணக்கு படிக்கணும். 9133 என்பதை, தொழாயிரத்து நூற்றி முப்பத்தி மூணு என்று ஒரு கூட்டத்தில் சொன்னாங்க,


JAYACHANDRAN RAMAKRISHNAN
நவ 16, 2025 08:16

சிலர் குடியரசு தினத்தையும் சுதந்திர தினத்தையும் மாற்றி பேசி உள்ளார்கள்.


Suppan
நவ 16, 2025 17:55

ஒவ்வொருவருக்கும் பேசுவதில் தவறு நேர்வதுண்டு . இங்கே தந்தைக்கு துண்டு ஏட்டில் எழுதிக்கொடுத்தாலே உளறுகிறார். மகனோ கேட்கவே வேண்டாம்


சாமானியன்
நவ 16, 2025 06:34

மோடிஜி இருக்க பயம் ஏன் ?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை