உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / ஜாதிகள் இல்லையடி பாப்பா என பாடிய பாரதியார் பல்கலையில் ஜாதி பாகுபாடு!

ஜாதிகள் இல்லையடி பாப்பா என பாடிய பாரதியார் பல்கலையில் ஜாதி பாகுபாடு!

கோவை : கோவை பாரதியார் பல்கலையில், 39வது பட்டமளிப்பு விழா நேற்று நடந்தது; கவர்னர் ரவி பட்டங்களை வழங்கினார்.விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு வ.புதுப்பட்டியை சேர்ந்த மாணவர் பிரகாஷ்; பிஎச்.டி., பட்டம் பெற வந்த இவர், பட்டம் பெறும் முன், மேடையிலேயே புகார் மனு ஒன்றை, தமிழக கவர்னரிடம் வழங்கினார். மனுவை படித்து பார்த்த கவர்னர், உதவியாளரிடம் வழங்கினார். மனுவில், பாரதியார் பல்கலையில் பிஎச்.டி., மாணவர்கள், வழிகாட்டிகளால் அடையும் துன்பங்கள் குறித்து தெரிவிக்கப்பட்டிருந்தது.இதுகுறித்து, பிரகாஷ் கூறியதாவது: ஆராய்ச்சி மாணவர்களுக்கு உள்ள பிரச்னைகளை, யாரிடம் கூறுவது என தெரியாததால், கவர்னரிடம் மனுவாக கொடுத்தேன். பொது இடத்தில், அவரிடம் மனு அளித்ததற்கு மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். ஆராய்ச்சி மாணவர்களை வழிகாட்டிகள், வீட்டு வேலைகள் செய்யவும், சாக்கடையை சரி செய்யவும், குழந்தைகளை பராமரிக்கவும், வங்கி கணக்குகளை பராமரிக்கவும் அறிவுறுத்துகின்றனர்.அவர்களிடம் பட்டம் பெற, நாய் போல வேலை செய்ய வேண்டியுள்ளது. பல்கலையில் உள்ள இரு ஆதிதிராவிடர் விடுதிகளை பராமரிப்பது இல்லை. பராமரிப்புக்கு, ஆண்டுக்கு 1 கோடி ரூபாய் வரை ஒதுக்கப்படுவதாக கூறப்படுகிறது. அது எங்கே செல்கிறது என்றே தெரியவில்லை.'வைவா'வின் போது, ஆராய்ச்சி மாணவர்களிடம் சிலர், 50,000 முதல் 100,000 ரூபாய் வரை கேட்கின்றனர். பல்கலையில் உள்ள இரு மைதானங்களில் பல்கலை மாணவர்கள், ஆசிரியர் அல்லாத ஊழியர்கள் விளையாட அனுமதிப்பதில்லை. அதேநேரம், தனியாருக்கு அனுமதி அளிக்கப்படுகிறது. அதன் வாயிலாகவும் பணம் பார்க்கின்றனர். கடந்த ஐந்து ஆண்டுகளாக விளையாட்டு தினம் நடத்தவில்லை. ஆனால், அதற்கு பணம் மட்டும் பெறுகின்றனர். பல்கலையில் ஜாதி பாகுபாடு அதிகம் உள்ளது. என் புகார்கள் மீது, கவர்னர் நடவடிக்கை எடுப்பார் என்று நம்புகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.பட்டமளிப்பு விழாவில், உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி செழியன், உயர்கல்வித் துறை கூடுதல் தலைமை செயலர் கோபால் உள்ளிட்ட பலர் முன்னிலையில், மாணவர் புகார் மனு அளித்தது பரபரப்பை ஏற்படுத்தியது.மாணவர் புகார் குறித்து, உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி செழியனிடம் கேட்டபோது, “முழுமையாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும்,' என்றார். தொடர்ந்து, மாணவன் தெரிவித்த விடுதியையும், அங்கு வழங்கப்படும் உணவின் தரம் குறித்தும் அமைச்சர் ஆய்வு செய்தார்.

மாணவியர் புகாரை கண்டுகொள்ளாத பல்கலை

இப்பல்கலையின் மூன்று ஆராய்ச்சி மாணவியர், தங்களது வழிகாட்டிகளால் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டதாக, பல்கலையில் இருந்து வெளியேறினர். மாணவியரின் பெற்றோர், பல்கலை நிர்வாகத்திடம் புகார் அளித்தனர். ஆனால், எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல், பல்கலை நிர்வாகம் மெத்தனம் காட்டியது. இதையடுத்து, அம்மாணவியர் மூவரும் ஆராய்ச்சி படிப்பை கைவிட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

Minimole P C
அக் 18, 2024 07:51

I fully agree with the complaints particulars on Guides. These professors treat the research scholars as dogs. I personally know many scholars could not complete their research work. becuase of the guides. Some attention has to be paid to solve the problems.


xyzabc
அக் 15, 2024 13:11

Disgrace to dravida model education tem. They brag so much. It should be reported to UGC.


Kalyanaraman
அக் 15, 2024 08:24

பொதுவாகவே நமது நாட்டில் குற்றங்களுக்கு கடுமையான தண்டனை இல்லை. தண்டனை கடுமையாக்கப்பட்டால் மட்டுமே குற்றங்கள் குறையும். இல்லையேல் வழக்குகளால் நீதிமன்றங்கள் வழிந்து நிரம்பும் அவலம் தொடரும். இது சட்டத்தின் மீது மக்களுக்கு உள்ள நம்பிக்கையை அற்றுப்போகச் செய்து சாமானியனையும் பயங்கரவாதியாக, மாவோயிஸ்டாக உருவாக்கும்.


Tetra
அக் 15, 2024 07:23

இவர்களுக்கு மட்டும் இப்படி நடப்பதில்லை. முனைவர் பட்டத்திற்கு முனையும் அனைவருக்குமே. மாணவரும் வழிகாட்டியும் நல்லவர்களாகவும் கல்வியின் தரத்தை உணர்ந்தவர்களாகவும் இருந்தால் சரியான கால அளவில் பட்டம் பெறலாம். 7 வருடம் ஆனாலும் தீஸீஸ் கொடுக்காமல் இருந்தால் அது விழலுக்கு இறைத்த நீரே.


Rajan
அக் 15, 2024 06:58

ஆண்டாண்டு காலமாக பிஎச்டி படிக்கும் மாணவர்கள் அனுபவிக்கும் ஹிம்சை.


Ram
அக் 15, 2024 06:56

இந்த மாணவர் சொல்வது நூற்றுக்கு நூறு உண்மை .... தமிழக அரசு பல்கலைக்கழகங்களில் இந்தமாதிரி மாணவரிடம் பணம் வாங்குவது , வேலை வாங்குவது சர்வசாதாரணமாக நடக்கிறது .... இடவொதுக்கீட்டால் வந்த வினை


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை