மேலும் செய்திகள்
எஸ்.ஐ.ஆர்., பணியில் தி.மு.க.,வினர் மிரட்டல்
7 minutes ago
அ.தி.மு.க., - தே.மு.தி.க., கூட்டணி மலருமா?
2 hour(s) ago
''இந்திரா கல் வீசி தாக்கப்பட்டார் என, முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரத்தின் சர்ச்சை பேச்சால், தி.மு.க., காங்கிரஸ் கூட்டணி வெற்றிக்கு குந்தகத்தை ஏற்படுத்தும்,'' என, தமிழக காங்கிரஸ் மூத்த துணைத்தலைவர் பொன்.கிருஷ்ணமூர்த்தி கூறிஉள்ளார். சென்னை அம்பத்துாரில், தமிழக மகளிர் காங்கிரஸ் சார்பில், முன்னாள் பிரதமர் இந்திரா பிறந்த நாளை ஒட்டி, இரண்டு நாள் பயிற்சி முகாம் நடந்தது. அதில் சிதம்பரம் பேசியதாவது: இந்திரா தமிழகத்திற்கு சுற்றுப்பயணம் வந்தபோது, மதுரை, சென்னையில் பல்வேறு எதிர்ப்பு எழுந்து, கற்கள் வீசப்பட்டன. அப்போது மூப்பனாரும், நானும் உடன் இருந்தோம். ஆனால், அவரிடம் எந்த அச்சமும் இல்லை. அவருடைய தைரியம் என்னை மிகவும் கவர்ந்தது. இவ்வாறு அவர் பேசினார். இதையடுத்து 'மதுரையில் இந்திரா மீது, தி.மு.க.,வினர் கல்வீசி தாக்குதல் நடத்தியதைத்தான் குறிப்பிட்டு பேசியிருக்கிறார் சிதம்பரம். இதனால், கூட்டணிக்கு பங்கம் வரலாம்' என, தமிழக காங்கிரஸ் தலைவர்கள் கூறுகின்றனர். தமிழக காங்கிரஸ் துணைத் தலைவர் பொன்.கிருஷ்ணமூர்த்தி அறிக்கை: இந்திரா மீது கல் வீசியது யார் என்பது, தமிழக மக்களுக்கு நன்றாக தெரியும். அச்சம்பவத்தை சுட்டிக்காட்டி, சிதம்பரம் மகிழ்ச்சி அடைகிறாரா அல்லது தி.மு.க., - காங்கிரஸ் கூட்டணிக்கு பங்கம் ஏற்படுத்தும் வகையில் பேசினாரா என்பது, காங்கிரஸ் தொண்டர்களின் கேள்வியாக உள்ளது. இந்திரா மீது தாக்குதல் நடத்திய சம்பவத்தை குறிப்பிட்டு பேசியது, காங்கிரசாருக்கு மன வருத்தத்தை அளிக்கிறது. அவரது துணிவு குறித்து, எவ்வளவோ சம்பவங்களை சுட்டிக்காட்டி பேசியிருக்கலாம். இந்திரா மீது அனல் கக்குகிற மாதிரி, அவரை அவமதிக்கும் வகையில், சிதம்பரம் பேசி வருவதற்கு என்ன வன்மம் என்றால், 1980ம் ஆண்டு லோக்சபா தேர்தலில், சிவகங்கை தொகுதியில் சிதம்பரம் போட்டியிட, இந்திரா வாய்ப்பு தரவில்லை. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. - நமது நிருபர் -
7 minutes ago
2 hour(s) ago