மேலும் செய்திகள்
மின்வாகனம் இயக்கத்தில் பின்னடைவு; சலுகையை நீட்டிக்குமா தமிழக அரசு?
11 hour(s) ago | 1
த.வெ.க., கூட்டணியில் இணைய 10 சீட்; பேரத்தை துவக்கினார் பன்னீர்செல்வம்
12 hour(s) ago | 6
லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் தலைவர்களை திணறடிக்கும் வகையில், வட மாநிலங்களைபோல், கர்நாடகாவிலும் மூத்த தலைவர்கள் பா.ஜ.,வில் இணைவதற்கு காத்திருக்கின்றனர்.லோக்சபா தேர்தல் அறிவிப்பு நெருங்கிக் கொண்டிருக்கும் வேளையில், நாடு முழுதும் காங்கிரசில் பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது. வட மாநிலங்களில் காங்., பெரும் புள்ளிகளே பா.ஜ.,வில் இணைந்து வருகின்றனர். இதனால், காங்கிரஸ் தலைவர்கள் கலக்கம் அடைந்துள்ளனர். ராகுல் யாத்திரையும் பாதியில் நிறுத்தப்பட்டுள்ளது.சில நாட்களுக்கு முன்பு தான், மஹாராஷ்டிரா முன்னாள் முதல்வர் அசோக் சவுஹான் காங்கிரசில் இருந்து விலகி, பா.ஜ.,வில் இணைந்தார். உடனே அவருக்கு ராஜ்யசபா எம்.பி., சீட் தரப்பட்டுள்ளது. தமிழகம்
தமிழகத்திலும், அ.தி.மு.க.,வின் 14 முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் சமீபத்தில் பா.ஜ.,வில் ஐக்கியமாயினர். இதற்கிடையில், மத்திய பிரதேச முன்னாள் முதல்வர் கமல்நாத், லோக்சபா எம்.பி., மனிஷ் திவாரி உட்பட பல தலைவர்கள் பா.ஜ.,வில் இணைய உள்ளதாக கூறப்படுகிறது. தற்போது அவர்கள் மறுத்தாலும், சூழ்நிலைக்காக காத்திருக்கின்றனர் என்றே தகவல் வெளியாகி உள்ளது.வரும் லோக்சபா தேர்தலில், 400 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என்று பா.ஜ., தலைவர்களுக்கு, பிரதமர் நரேந்திர மோடி இலக்கு நிர்ணயித்துள்ளார். அந்த கனவை நனவாக்குவதற்காக, கர்நாடகாவிலும் காங்கிரசின் செல்வாக்குமிக்க தலைவர்கள் பா.ஜ.,வில் இணைவதற்கு தயாராக உள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.காங்., மூத்த தலைவர் சாமனுார் சிவசங்கரப்பாவின் அழைப்பின் பேரில், சுத்துார் மடத்தில், அவர் கட்டிய மண்டபத்தை, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா சமீபத்தில் திறந்து வைத்தார். லோக்சபா தேர்தலில் வீர சைவ லிங்காயத் சமுதாயத்தினருக்கு கூடுதல் வாய்ப்பு தரும்படி, பா.ஜ., தேசிய தலைவர் நட்டாவுக்கு சிவசங்கரப்பா கடிதம் எழுதியுள்ளார். காங்கிரஸ் ஆலோசனை
இதற்கிடையில், தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காது என்று கருதும் பல காங்., தலைவர்கள் பா.ஜ.,வில் இணைவதற்கு ஆலோசித்து வருகின்றனர். அவர்களை சமாதானப்படுத்தும் முயற்சியில் அக்கட்சி தலைவர்கள் ஈடுபட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.புதுடில்லியில் இரண்டு நாட்கள் நடந்த தேசிய பா.ஜ., கவுன்சில் கூட்டத்தில், கர்நாடகாவின் 500க்கும் மேற்பட்ட பிரமுகர்கள் பங்கேற்றனர். கட்சி மேலிட தலைவர்களின் பேச்சினால், பெரும் உற்சாகம் அடைந்து மாநிலம் திரும்பி உள்ளனர். லோக்சபா தேர்தல் நெருங்க, நெருங்க கர்நாடக அரசியலில் மாற்றம் ஏற்படும் என்று கூறப்படுகிறது. காங்கிரஸ் தலைவர்களை திணறடிக்கும் வகையில் பா.ஜ., தலைவர்கள் ஆலோசனை நடத்துகின்றனர். ஆப்பரேஷன் தாமரை நடத்தாமலேயே காங்கிரஸ் தலைவர்கள் கட்சி தாவ உள்ளனர். இதற்கான லிஸ்ட் பா.ஜ.,விடம் மட்டுமின்றி காங்கிரசிலும் உள்ளது.பா.ஜ., பிளான் பற்றி தெரியாமல் திக்கு தெரியாமல் காங்கிரஸ் தலைவர்கள் திணறுகின்றனர்- நமது நிருபர் -.
11 hour(s) ago | 1
12 hour(s) ago | 6