மேலும் செய்திகள்
மூன்றாண்டாக கோவில் வளாகத்தில் நடத்தப்படும் அரசு பள்ளி வகுப்புகள்!
16 hour(s) ago | 9
- நமது நிருபர் - பீஹார் தேர்தல் முடிவு, அனைவருக்கும் பாடங்களை வழங்கியுள்ளதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ள கருத்து, தமிழகத்தில் காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணி கட்சிகளுக்கான எச்சரிக்கையாகவே கருதப்படுகிறது. 'அனைவருக்கும் பாடங்களை வழங்கியுள்ள பீஹார் சட்டசபை தேர்தல்' என்ற தலைப்பில், சமூக வலைதள பதிவு ஒன்றை நேற்று முன்தினம் முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டிருந்தார். அதில், 'பெரும் வெற்றியை பெற்றுள்ள நிதிஷ் குமாருக்கு என் பாராட்டுகள். ஓயாமல் பிரசாரம் மேற்கொண்ட தேஜஸ்வி யாதவுக்கும் என் பாராட்டுகள். நாம் சொல்ல வேண்டிய அரசியல் ரீதியான செய்தியை தெளிவாக மக்களிடம் சொல்வது, இறுதி ஓட்டுகள் பதிவாகும் வரை அர்ப்பணிப்புடன் தேர்தல் பணியாற்றுவது என பலவற்றையும், ஒரு தேர்தல் முடிவு பிரதிபலிக்கிறது. 'இண்டி' கூட்டணியில் உள்ள அனுபவமிக்க தலைவர்கள் இத்தகைய செய்தியை உணரவும், இனி எழும் சவால்களை எதிர்கொள்வதற்கான திட்டங்களை வகுக்கவுமான ஆற்றலை பெற்றவர்கள்' என, குறிப்பிட்டுள்ளார். இது குறித்து, தி.மு.க., வட்டாரங்கள் கூறியதாவது: பீஹார் தேர்தலில், காங்கிரஸ் கட்சி ஆறு தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றிருப்பதால், தமிழகத்திலும் காங்கிரசுக்கு, 11 தொகுதிகளை மட்டுமே ஒதுக்க முடியும் என, தி.மு.க., மூத்த தலைவர் ஆர்.எஸ்.பாரதி மகன், சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். இது காங்கிரசுக்கு, தி.மு.க., தலைமை விடுத்துள்ள மறைமுக எச்சரிக்கை. ஆட்சியில் பங்கு, அதிக தொகுதிகள் கேட்டு மிரட்டல் என, காங்கிரசாரின் சமீபத்திய செயல்பாடுகள் அமைந்துள்ளன. 'எங்கள் கோரிக்கையை நிறைவேற்றவில்லை என்றால், த.வெ.க., கூட்டணிக்கு செல்வோம்' என, காங்கிரஸ் கோஷ்டி தலைவர்கள் சிலர் பேசியும் வருகின்றனர். இந்நிலையில், பீஹார் தேர்தல் முடிவுகளில் இருந்து காங்கிரசார் பாடம் படித்துக் கொள்ள வேண்டும் என்பதை சுட்டிக்காட்டி இருக்கிறார் முதல்வர். தமிழக காங்கிரஸ் முன்னணி தலைவர்கள் யாரும் வாய் திறக்கக்கூடாது; தி.மு.க., கொடுக்கிற தொகுதிகளை பெற்று, தேர்தல் வெற்றிக்கு பாடுபட வேண்டும் என்பதை உணர்த்தும் விதமாகவே, முதல்வரின் வலைதள பதிவு அமைந்துள்ளது. இவ்வாறு அந்த வட்டாரங்கள் கூறின.
16 hour(s) ago | 9