உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / உதயநிதியை வரவேற்க வசூல்; ஆடியோ பரவியதால் அதிர்ச்சி

உதயநிதியை வரவேற்க வசூல்; ஆடியோ பரவியதால் அதிர்ச்சி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

திருப்பூர் : துணை முதல்வர் உதயநிதி, பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க நேற்று கோவை வந்தார். அவரை வரவேற்கும் நிகழ்ச்சிக்கு, கட்சியினர் பணம் கேட்டு மிரட்டல் விடுத்ததாக, வர்த்தகர்கள் இருவர் பேசிய ஆடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.ஆடியோவில், 'துணை முதல்வர் உதயநிதி ஜல்லிக்கட்டு துவக்கி வைக்க வர்றாரு. அவரை வரவேற்கிற செலவு இருக்கு. கட்டாயம் காசு கொடுக்கணும்னு நின்னாங்க. நானே சம்சாரத்தோட தாலிக் கொடியை அடகு வச்சு தான் இப்ப மெட்டீரியல் வாங்கிப் போட்டிருக்கேன்.இதுல இவங்களுக்கு எதை தர்றது?' என, ஒருவர் கூற, மற்றொருவர், 'இதே மாதிரி தான் நம்ம கடைக்கும் வந்து கேட்டிருக்காங்க. அக்கா தான் கடையில இருந்துருக்கு. 'அவரு இல்லை. வெளியிலே போய்ட்டாருன்னு' சொன்னதுக்கு, 'போனை போட்டு பேசிட்டு வசூல் கொடுங்க'ன்னு கட்டாயப்படுத்தியிருக்காங்க.'இன்னைக்கு வர்றோம்'னு சொல்லிட்டு போனாங்களாம். இதுவரைக்கும் காணலை. அப்படி யாரும் வந்தால் நீ ரோட்டில் வந்து உக்காந்துடுன்னு சொல்லிட்டேன்' என்கிறார்.மேலும், 'இவங்க பிராந்தி கடையில வாங்கற காசெல்லாம் போட்டு செலவு பண்ண வேண்டியது தானே. அரசாங்க செலவுல துணை முதல்வர் வர்றாரு, போறாரு.'கட்சிக்காரங்க வரவேற்கனும்னா அவங்க சொந்த காசுல செலவு பண்ணணும். எதுக்கு பிச்சை எடுக்கற மாதிரி கடை கடையாக போகணும்' என்கிறார்.இவ்வாறு இருவரிடையே நடந்த உரையாடல், 15 நிமிடம் வரை நீள்கிறது. இந்த ஆடியோ பதிவு கோவை பகுதி வர்த்தர்கள் மற்றும் கட்சியினரின் சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

S SRINIVASAN
ஏப் 28, 2025 21:16

திராவிட மாடல் ஆட்சியின் வரலாற்று சாசனம் இந்த வசூல் மாடல்.


சாமானியன்
ஏப் 28, 2025 07:59

எதற்கு இவர் கோவைக்கு விசிட்? முப்பதாயிரம் கோடியில் எவ்வளவு மாநாடு நடத்தலாம் ? வணிகர்கள் கருணாநிதிக்கு அந்தகாலத்தில் டிமிக்கி கொடுத்தது பாவம் பேரனுக்கு நினைவில்லையா ? மக்களே ! காசும் கொடுக்காதீங்க. மாநாட்டிற்கும் போகாதீங்க. வேலையிருந்தா போய்ப் பாருங்க.


Balasubramanian
ஏப் 28, 2025 05:30

இவரை என்ன காங்கிரஸ் கார்கே என்று நினைத்தார்களா? காலி நாற்காலியை பார்த்து திரும்பி போக! நிதி வம்சத்தின் இளவல்! ஒவ்வொரு நாற்காலி க்கும் குறைந்து இரண்டாயிரம் செலவு ஆகும் கூட்டம் பத்தாயிரம் ஆவது இருக்க வேண்டும்! ஆக இரண்டு கோடி எஸ்டிமேட்! வட்டம் மாவட்டம் லாபம் சேர்த்து மூன்று கோடி தேவை! கடைக்கு பத்தாயிரம் தரவில்லை என்றால் தொண்டர்கள் பொறுமை இழந்து விடுவார்கள்! பிறகு சேதாரம் அதிகமாக இருக்கும்! பரவாயில்லையா?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை