வாசகர்கள் கருத்துகள் ( 1 )
பெட்டி வாங்கும் தோழர்களைத்தான் அவருக்கு ரொம்ப பிடிக்கும். சுதந்திரப் போராட்ட தியாகியும் நூற்றாண்டு கண்ட அப்பழுக்கற்ற அரசியல்வாதியுமான தோழர் நல்லகண்ணு மீது அவருக்கு ஏன் அக்கறை வரப் போகிறது?
சென்னை: நல்லகண்ணு நுாற்றாண்டு விழாவை அரசு கண்டுகொள்ளாததால், முதல்வர் ஸ்டாலின் மீது கம்யூனிஸ்ட் கட்சியினர் அதிருப்தி அடைந்துள்ளனர். இந்திய கம்யூ., கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு, தன் நுாற்றாண்டு விழாவை நிறைவு செய்து, 101 வயதில் அடியெடுத்து வைத்துள்ளார்; வீட்டில் சிகிச்சை பெற்று வருகிறார். விடுதலை போராட்டம் முதல், மக்களுக்கான பல்வேறு போராட்டங்களை அவர் முன்னெடுத்து, தமிழக கம்யூனிஸ்ட் இயக்கத்தின் முக்கிய தலைவராக இருந்து வருகிறார். அவரது நுாற்றாண்டு பிறந்த நாள் விழா, கடந்தாண்டு கலைவாணர் அரங்கில், காலை முதல் மாலை வரை பிரமாண்டமாக நடந்தது. இதில், முதல்வர் ஸ்டாலின் பங்கேற்றார். இதற்கான ஏற்பாடுகளை, சென்னை கோயம்பேடு மார்க்கெட் பழ வியாபாரியும், நல்லகண்ணு நண்பரின் மகனுமான மணிவண்ணன் செய்திருந்தார். அரசு தரப்பிலும், முதல்வர் தரப்பிலும் இதற்கான ஏற்பாடுகளை செய்யாததால், அப்போதே கம்யூனிஸ்ட் கட்சியினர் தங்கள் அதிருப்தியை தெரிவித்தனர். நல்லகண்ணு நுாற்றாண்டு நிறைவு விழா பிரமாண்டமாக கொண்டாடப்படும் என, கம்யூனிஸ்ட் கட்சியினரிடம் முதல்வர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், நுாற்றாண்டு பிறந்த நாளை நிறைவு செய்த நல்லகண்ணுவுக்கு, பெரிய அளவில் எந்த விழாவும் நேற்று எடுக்கப்படவில்லை. அதே நேரத்தில், அவருக்கு தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்த முதல்வர், சமூக வலைதள பக்கத்திலும் வாழ்த்து செய்தி வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டு உள்ளதாவது: தியாகத்தின் பெருவாழ்வு தோழர் நல்லகண்ணுவுக்கு 101வது பிறந்த நாள். விடுதலை போராட்ட வீரராகவும், விவசாய தொழிலாளர்களுக்கான போராளியாகவும் திகழ்ந்து, இன்றளவும் நமக்கு வழிகாட்டும் நுாற்றாண்டு நாயகர். இந்திய பொதுவுடமை இயக்கத்தின் முதுபெரும் தலைவர் நல்லகண்ணுவுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.இந்த வாழ்த்துடன் முதல்வர் நிறுத்திக் கொண்டதால், தி.மு.க., மற்றும் முதல்வர் மீது கம்யூனிஸ்ட் தோழர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
பெட்டி வாங்கும் தோழர்களைத்தான் அவருக்கு ரொம்ப பிடிக்கும். சுதந்திரப் போராட்ட தியாகியும் நூற்றாண்டு கண்ட அப்பழுக்கற்ற அரசியல்வாதியுமான தோழர் நல்லகண்ணு மீது அவருக்கு ஏன் அக்கறை வரப் போகிறது?