உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / த.வெ.க.,வுடன் காங்கிரஸ்; ராகுலை சந்திக்க விஜய் முயற்சி?

த.வெ.க.,வுடன் காங்கிரஸ்; ராகுலை சந்திக்க விஜய் முயற்சி?

சென்னை: மதுரையில் நடைபெறும் தமிழக வெற்றிக் கழக மாநாட்டுக்கு முன், ராகுலை த.வெ.க., தலைவர் விஜய் சந்திப்பார் என அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. த.வெ.க., முதல் மாநாடு, விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில், கடந்த 2024 அக்டோபரில் நடந்தபோது, தன் தலைமையில் கூட்டணி அமைக்கப்படும் என்றும், ஆட்சியில் கூட்டணி கட்சிகளுக்கும் பங்கு வழங்கப்படும் என்றும் விஜய் அறிவித்தார். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=5e9la2ug&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0ஆனால், இதுவரை எந்த கட்சியும் கூட்டணிக்காக, த.வெ.க.,வை நேரடியாக அணுகவில்லை.

எதிர்ப்பு தலைவர்கள்

அ.தி.மு.க., தரப்பில், கூட்டணி முயற்சி மேற்கொண்டாலும், தன் தலைமையில் தான் கூட்டணி எனவும், பா.ஜ.,வுக்கு அதில் இடமில்லை எனவும் விஜய் உறுதியாக இருந்ததால், அந்த முயற்சி பாதியில் நின்றது. இதையடுத்து, தி.மு.க., கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியை இழுக்க, விஜய் தரப்பில் முயற்சி எடுக்கப்பட்டது. அக்கட்சி பிடிகொடுக்காமல் நழுவி வருகிறது. அடுத்ததாக, காங்கிரஸ் உடன் கூட்டணி சேர, த.வெ.க., திட்டமிடுகிறது. இதற்காக, டில்லியில் காங்கிரஸ் எம்.பி., ராகுலை சந்திக்க நேரம் கேட்டு, விஜய் தரப்பில் தகவல் அனுப்பபட்டு உள்ளது. இதற்கு, தமிழக காங்கிரசில் உள்ள தி.மு.க., எதிர்ப்பு தலைவர்கள் சிலர் உதவிக்கரம் நீட்டியுள்ளனர்.https://www.youtube.com/embed/tqG2tU38ynIதொழில் வளம் மிகுந்த தொகுதியின் காங்கிரஸ் எம்.எல்.ஏ.,வாக உள்ள அக்கட்சியின் முக்கிய பிரமுகர் ஒருவரை, எழும்பூர் தொகுதிக்கு மாறும்படி, தி.மு.க., தரப்பில் அழுத்தம் கொடுக்கப்பட்டு உள்ளது. மீண்டும் அவர் போட்டியிட்டால் தோல்வி நிச்சயம் என்பதால், தி.மு.க., தேர்தல் வியூக வகுப்பு நிறுவனம் தந்த ஆலோசனைப்படி, அந்த எம்.எல்.ஏ.,விடம் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனால், வருமானம் மிகுந்த அதே தொகுதியில் மீண்டும் போட்டியிடவே அவர் விரும்புகிறார்.

கார்கேவிடம் பேச்சு

தி.மு.க., தலைமையின் செயலால், அதிருப்தியில் உள்ள அவரை, சென்னையில் உள்ள நண்பர் ஒருவர் வீட்டில், விஜய் சந்தித்து, ஒரு மணி நேரம் ஆலோசனை நடத்தியதாகவும், அப்போது, காங்., தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவிடம், விஜய் சில நிமிடங்கள் மொபைல் போனில் பேசியதாகவும் கூறப்படுகிறது.இது குறித்து, த.வெ.க., வட்டாரத்தில் கூறப்படுவதாவது:தமிழகத்தில் மீண்டும் காமராஜர் ஆட்சி அமைக்க வேண்டும் என, காங்கிரஸ் தொண்டர்கள் விரும்புகின்றனர். ஆனால், ஆதாயத்திற்காக தி.மு.க.,வுடன், 10 சீட்டுக்கும், 20 சீட்டுக்கும் காங்கிரஸ் கூட்டணி அமைக்கிறது. த.வெ.க.,வுடன் கூட்டணி அமைத்தால், மீண்டும் காமராஜர் ஆட்சி அமைக்கலாம். த.வெ.க.,வும், காமராஜரை கொள்கை தலைவராக அறிவித்துள்ளது.

மாநாட்டுக்கு முன்

இரண்டு கட்சிகளும் கூட்டணி சேர்ந்தால், மற்ற கட்சிகளும் தேடி வரும். இந்த தகவல்களை எல்லாம், ராகுலிடம் எடுத்துக்கூறுமாறு, காங்., தேசிய தலைவரிடம் விஜய் கேட்டுக் கொண்டுள்ளார். விரைவில், ராகுல் சந்திப்புக்கு ஏற்பாடு செய்வதாக, அவரும் விஜயிடம் உறுதி அளித்துள்ளார். மதுரையில் த.வெ.க., இரண்டாவது மாநில மாநாடு நடப்பதற்குள், இந்த சந்திப்பு நடக்கலாம். இவ்வாறு த.வெ.க., வட்டாரங்கள் கூறின.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 14 )

ராமகிருஷ்ணன்
ஜூலை 17, 2025 14:25

தம்முடைய ஓட்டு வங்கி பலம் தெரியாமல் கூட்டணிகள் பேசுவதில் அர்த்தமில்லை. ஓவர் கான்பிடென்ட் கட்சிக்கு ஆவாது. பில்டப் பலமாக தான் உள்ளது. ஏற்கனவே விஜயகாந்த், கமல்ஹாசன் பட்ட பாட்டை நினைத்து பாருங்கள்.


Santhakumar Srinivasalu
ஜூலை 17, 2025 13:20

காங்கிரஸ், தவெக, கம்யூனிஸ்ட்கள், மற்றும் திருமாவளவன் ஆகியோர் ஒரு கூட்டணி போல் தெரிகிறது! மேலும் மதிமுக வும் செரலாம்


SK
ஜூலை 17, 2025 08:12

மத சார்பற்ற மதம், மதம் பிடித்து,மதம் தேவ ஆலயத்துடன் வேலை செய்கிறது பிதாவே, உன்னையும் ஊரையும் ஏமாற்றும் இவர்களையும் மன்னியும்


Oviya Vijay
ஜூலை 17, 2025 07:57

தமிழகத்தில் வெற்றிபெற மிகச்சிறந்த கூட்டணி எதுவெனக் கேட்டால் என்னால் சொல்ல முடியும்... அது தவெக கட்சியுடன் காங்கிரஸ், விசிக மற்றும் மக்கள் நீதி மையம் ஆகிய கட்சிகள் இணைய வேண்டும். இவைகளைத் தவிர்த்து வேறு எந்தக் கட்சியும் வேண்டியதில்லை. இவ்வாறு நடந்தால் கண்டிப்பாக திமுக தோற்கும். அதிமுகவும் பாஜகவும் மக்களால் தூக்கி எறியப்படுவர்.. பாமக, தேமுதிக, நாதக, கம்யூனிஸ்ட் மற்றும் மதிமுக இவையாவும் காணாமல் போயிருக்கும். ஆனால் இவைகள் எல்லாம் 2026 தேர்தலில் நடக்குமா எனத் தெரியவில்லை. ஆனால் 2031 தேர்தலில் நடக்க வாய்ப்புள்ளதாகத் தோன்றுகிறது...


vivek
ஜூலை 17, 2025 09:07

பாவம், புலம்பல்கள் தொடரட்டும். ஆனாலும் ரூபாய் இருநூறு மட்டுமே


P
ஜூலை 17, 2025 13:00

Joke


பேசும் தமிழன்
ஜூலை 17, 2025 07:53

செல்வம் என்னய்யா நடக்குது.. குற்றுயிரும்.. குலையிருமாக இழுத்து கொண்டு இருக்கும் கான் கிராஷ் கட்சியை ஒரேடியாக முடிக்க ஏதாவது திட்டம் வைத்து இருக்கிறாயா ???


kamal 00
ஜூலை 17, 2025 07:00

இனம் இனத்தோட தான் செல்லும்


நிக்கோல்தாம்சன்
ஜூலை 17, 2025 04:45

செல்வப்பெருந்தகை நோட் திஸ் பாய்ண்ட்


Haja Kuthubdeen
ஜூலை 17, 2025 16:41

விசயமே செல்வபெருந்தகைதான்...அவரைதான் எலும்பூருக்கு மாற சொல்லி நிர்பந்தம்...


Sathyan
ஜூலை 17, 2025 03:07

கிறித்துவ கட்சியான தா.வே.க முஸ்லீம் கட்சியான காங்கிரஸ் உடன் இனைய முயற்சி செய்கிறது. ஆகவே அவர்களின் நோக்கம் என்ன என்பதை ஹிந்து மக்கள் எளிதில் புரிந்து கொண்டு இந்த இரு கட்சிகளையும் புறம் தள்ளுங்கள்.


Poojari
ஜூலை 17, 2025 09:21

அட


Haja Kuthubdeen
ஜூலை 17, 2025 16:45

மக்கள் அரசியல் பண்ணாமல் எப்பவும் மத அரசியலே செய்வதால்தான் பிஜெபிய தமிழ்நாட்டில் எல்லோரும் வெறுப்பதே...உங்களை போன்ற சிந்தனை உள்ளவர்களால் பிஜெபி தமிழ்நாட்டில் வளராது...


Sathyan
ஜூலை 17, 2025 03:01

இனம் இனத்தோடு தான் சேரும் என்பது ஆன்றோர் கூற்று. இந்தியாவின் முன்னேற்றத்திற்கு எதிராக இருக்கும் காங்கிரஸுடன் விஜய் கட்சியான தா.வே.க சேர்ந்தால் அந்த கட்சியும் இந்தியாவின் முன்னேற்ற பாதையிலும் முட்டுக்கட்டை போடும் என்பதை நாம் அனைவரும் புரிந்து கொள்ளலாம்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை