உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / காங்கிரசுக்கு 125 சீட் கேட்கும் மேலிட தலைவர்; தி.மு.க.,வில் கடும் அதிர்ச்சி

காங்கிரசுக்கு 125 சீட் கேட்கும் மேலிட தலைவர்; தி.மு.க.,வில் கடும் அதிர்ச்சி

'தமிழகத்தில், 125 தொகுதிகளில் போட்டியிடுவோம்' என, காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் பேசியது, தி.மு.க.,வில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 'ஓட்டு திருட்டை தடுப்போம்; ஜனநாயகத்தை காப்போம்' என்ற தலைப்பில், காங்கிரஸ் சார்பாக, அக்கட்சி மாநில தலைவர் செல்வப்பெருந்தகை தலைமையில், திருநெல்வேலியில், நேற்று முன்தினம் மாநாடு நடந்தது. அதில், பங்கேற்ற கட்சியின் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர், ''வரும் சட்டசபை தேர்தலில், 125 தொகுதிகளில் காங்கிரஸ் போட்டியிட வேண்டும்'' என பேசினார். இதுபோல, சட்டசபை காங்., தலைவர் ராஜேஷ்குமார் பேசுகையில், “காங்கிரஸ் கட்சியின் துணை இல்லாமல், கொம்பனால் மட்டுமல்ல; எந்த கொம்பாதி கொம்பனாலும் ஆட்சி அமைக்க முடியாது,” என்றார். இவர்கள் இருவரின் பேச்சு, தி.மு.க., கூட்டணியில் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

இது தொடர்பாக, காங்கிரஸ் வட்டாரங்கள் கூறியதாவது:

தமிழகத்தில் காங்., சார்பில் எடுக்கப்பட்ட, 'சர்வே' அறிக்கையில், 'விஜயின் தமிழக வெற்றிக் கழகத்துக்கு 20 சதவீத ஓட்டுகள் கிடைக்கும் என்றும், விஜய் கட்சியுடன் கூட்டணி அமைத்தால், காங்.,குக்கு 10 சதவீத ஓட்டுகள் கிடைக்கும் என்றும்; கூடவே, காங்., போட்டியிடும் இடங்களில் பெரும்பாலான தொகுதிகளை வெல்லும் என்றும் கூறப்பட்டுள்ளது. 'இவ்விரு கட்சிகளுடன், பிற கட்சிகளும் கூட்டணிக்கு வரும்பட்சத்தில், 40 சதவீத ஓட்டுகள் கிடைக்கும் என்றும், த.வெ.க., - காங்., கூட்டணி ஆட்சிக்கு வாய்ப்பு உள்ளது' என்றும், 'சர்வே' அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்த அறிக்கையை, காங்., மேலிடம் தீவிரமாக பரிசீலித்து வருகிறது. அதன் அடிப்படையில், டில்லி மேலிடம் பச்சைக்கொடி காட்டியதை தொடர்ந்தே, '125 தொகுதிகளில் போட்டியிடுவோம்' என, கிரிஷ் சோடங்கர் பேசியுள்ளார். மேலும், 'காங்கிரஸ் இல்லாமல், தி.மு.க.,வால் ஆட்சி அமைக்க முடியாது' என, ராஜேஷ்குமாரும் பேசியுள்ளார். இவ்வாறு அக்கட்சி வட்டாரங்கள் கூறின. தமிழக காங்., துணைத் தலைவர் பொன்.கிருஷ்ணமூர்த்தி கூறுகையில், “தமிழகத்தில், 125 தொகுதிகளில் கட்சியின் கட்டமைப்பை பலப்படுத்த வேண்டும். அதில் பலம், பலவீனம் கண்டறிந்து, 50 தொகுதிகளை தி.மு.க., கூட்டணியில் பெற வேண்டும் என்ற அடிப்படையில் தான் கிரிஷ் சோடங்கர் பேசினார். அதுபோல், ராஜேஷ்குமார் பேச்சில், எந்த தவறும் இல்லை,” என்றார்.

எம்.பி., - -எம்.எல்.ஏ.,க்கள் 'ஆப்சென்ட்'

திருநெல்வேலி காங்., மாநாட்டில், முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம், முன்னாள் மாநில தலைவர்கள் தங்கபாலு, திருநாவுக்கரசர், அகில இந்திய இளைஞர் காங்., செயலர் லெனின் பிரசாத் உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஆனால், தமிழக காங்., தலைவர் செல்வப் பெருந்தகையின் எதிர்கோஷ்டிகளான முன்னாள் தலைவர் அழகிரி, அகில இந்திய காங்., செயலர்கள் செல்லக்குமார், விஸ்வநாதன், மயூரா ஜெயக்குமார் பங்கேற்கவில்லை. ஐந்து காங்., எம்.பி.,க்களும், இரண்டு எம்.எல்.ஏ.,க்களும் மாநாட்டை புறக்கணித்தனர். - நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 15 )

S.jayaram
செப் 14, 2025 08:45

காங்கிரஸ் 100 சீட் வாங்கினாலும் திமுக கூட்டணி இந்த முறை வெல்லாது மூன்றாவது இடத்திற்கு தள்ளப்படும்


D Natarajan
செப் 10, 2025 07:46

காங்கிரஸ் DMK கூட்டணியில் போட்டியிடும் அநேக தொகுதிகளில் ADMK கூட்டணி வென்றுவிடும்.


krishna
செப் 09, 2025 21:52

NADAKKA KOODA THEMBU ILLADHAVAN 40 PONDAATIKKU AASA PATTANAMINDHA DESA VIRODHA MAFIA MAINO CONGRESS ELLAM ORU KATXHI THAMIZH NAATIL.IDHULA VEKKAM MAANAM SOODU SORANAI ILLADHA JENMANGALAI THALAIVAN THONDARGAL VERU.


பேசும் தமிழன்
செப் 09, 2025 19:34

கான்கிரஸ் கட்சிக்கு இருக்கும் தகுதிக்கு..... 234 தொகுதியில் போட்டியிடலாம்.... ஆனால் ஓட்டு யார் போடுவார்கள்.... அதை மக்கள் தானே போட வேண்டும்..... மக்கள் ஓட்டு போடாத காரணத்தால் தான்..... கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆன கதை போல் கான்கிரஸ் கட்சி நிலமை ஆகி விட்டது.


ஈசன்
செப் 09, 2025 18:08

ஐயோ, 125 பத்தாதே.... மல்லிகாவின் மைண்ட் வாய்ஸ் இப்படி இருக்குமோ!!


palaniappan. s
செப் 09, 2025 12:58

காங்கிரஸுக்கு 175 ஸீட் கேட்க தகுதியிருக்கு. குறைத்து மதிப்பிட வேண்டாம்.


theruvasagan
செப் 09, 2025 10:53

தவெகவில் யாரோ 100 சீட்டுக்கு குறையாமல் தருவோம்னு உசுப்பி விட்டமாதிரி தெரிகிறது. அதை வைத்து டீம்காவிடம் கெத்து காட்டுகிறார்கள் போல. மேலும் பப்புவின் பிஹார் பேரணிக்கு வான்டடா போய் ஆதரவு அளித்ததும் இன்னொரு காரணம். பேஷ். பேஷ் விட்டுடாதீங்க. ஸ்டிராங்கா கேளுங்க.


P.sivakumar
செப் 09, 2025 10:43

மீட்டிங்ல 125 சேரையே fill பண்ண முடியல!இதுல இது வேறயா?


சாமானியன்
செப் 09, 2025 10:18

அரசியல் வியாபார பேரம் சுவாரசியமாகத்தான் இருக்கிறது. மக்கள் மைன்ட் வாய்ஸ். "கூறும்.125 என்று கூறிப்பாரும்". என்ன திருவிளையாடலோ !


ராமகிருஷ்ணன்
செப் 09, 2025 08:50

நேத்து வந்த விசிலடிச்சான் குஞ்சுகளின் கட்சி 100 சீட் தர போவதாக கூறுகையில் காங்கிரஸை கறிவேப்பிலை மாதிரி உபயோகிக்கும் திமுகவிற்கு இந்த அதிர்ச்சி தேவைதான்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை