உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / டில்லி உஷ்ஷ்ஷ்: விஜய்க்கு பா.ஜ., ஆதரவு?

டில்லி உஷ்ஷ்ஷ்: விஜய்க்கு பா.ஜ., ஆதரவு?

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாட்டை, பிரமாண்டமாக நடத்திக் காட்டி விட்டார் நடிகர் விஜய். 'தி.மு.க.,வும் பா.ஜ.,வும் என் எதிரி' என சொன்னாலும், தி.மு.க.,வைத் தான் கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார்.'வரும் 2026ல், தமிழகத்தில் நடக்கவிருக்கும் சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தால், கூட்டணி கட்சிகளுக்கு ஆட்சியில் பங்கு நிச்சயம் உண்டு' என, தி.மு.க.,வின் கூட்டணி கட்சிகளுக்கு துாண்டில் போட்டுஉள்ளார் விஜய்.இந்நிலையில், விஜய் கட்சி குறித்து பா.ஜ., தலைமையின் நிலைப்பாடு என்ன என்பது குறித்து பா.ஜ., ஆலோசனை நடத்தி உள்ளதாக சொல்லப்படுகிறது.'தி.மு.க.,விற்கு எதிராக அரசியல் செய்யும் தமிழக வெற்றிக் கழகத்தை ஆதரிக்க வேண்டும்; தி.மு.க.,வை ஒழிக்க வேண்டும். அதே நேரத்தில், அ.தி.மு.க.,வும் கலைந்து போக வேண்டும். எனவே, பா.ஜ.,வை விஜய் கடுமையாக விமர்சனம் செய்தாலும், பா.ஜ., தலைவர்கள் அமைதியாக இருக்க வேண்டும். விஜய்க்கு எதிராக எதுவும் பேசக் கூடாது' என, கட்சி தலைமை தற்போது முடிவெடுத்து உள்ளதாக சொல்லப்படுகிறது.ஆனால், இப்போது பா.ஜ.,வின் முக்கிய குறிக்கோள், மஹாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் சட்டசபை தேர்தல்கள் தான்; எனவே, அதில் மும்முரமாக இறங்கியுள்ளனர் தலைவர்கள். 'இம்மாதம் 23ம் தேதி, இந்த இரண்டு மாநில தேர்தல் முடிவுகள் வெளியாகும். அதற்குள், த.வெ.க., தொடர்பாக கட்சி மேலிடம் ஒரு இறுதி முடிவை எடுக்கும்' என்கின்றனர் டில்லி பா.ஜ., தலைவர்கள்.அத்துடன், ஐரோப்பிய நாடான பிரிட்டனுக்கு சென்றுள்ள தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை இம்மாத இறுதியில் தாயகம் திரும்புகிறார். விஜய் கட்சி விவகாரத்தில், தமிழக பா.ஜ., எப்படி செயல்பட வேண்டும் என, அண்ணாமலைக்கு பா.ஜ., தலைமை தன் முடிவை தெரிவிக்கும் என்றும் சொல்லப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

தர்மராஜ் தங்கரத்தினம்
நவ 19, 2024 08:36

உங்கள் தொகுதியில் யார் யோக்கியமான வேட்பாளரோ அல்லது இருப்பவர்களில் கொஞ்சம் பரவாயில்லை ரகம் ........ அவரைத் தேர்ந்தெடுங்கள் ....... அப்படி அனைவரும் செய்தால் பத்தே ஆண்டுகளில் அரசியல்வாதிகள் அனைவரும் திருந்துவர் ......


MADHAVAN
நவ 08, 2024 16:57

ஜோசப்பு விஜய் னு சொல்லி ராஜா கிண்டல் பண்ணுவான்


Indian
நவ 04, 2024 13:30

விஜய், பஜா உடன் கூட்டணி வைத்தால், தோல்வி தான் கிடைக்கும்


ameen
நவ 04, 2024 09:28

கூட்டாணிக்காக ஜோசப் விஜயிடம் கைகட்டி நிற்க வேண்டிருக்குதே.....


அப்பாவி
நவ 03, 2024 23:51

வருங்கால தமிழக துணை, இணை அமைச்சர்கள் பா.ஜ தலிவர்கள் வாழ்க.


Azar Mufeen
நவ 03, 2024 17:48

இல்ல விஜய்க்கு எதிரா பேசித்தான் பாருங்களேன், அவரின் ரசிகர்கள் உங்களை கிழித்து தொங்கவிட்ருவாங்க சமூக வலைத்தளங்களில்


venugopal s
நவ 03, 2024 15:26

எல்லா முடிவுகளையும் டெல்லி தலைமை தான் முடிவு செய்வார்கள் என்றால் அப்புறம் தமிழக தலைமைக்கு என்ன அவசியம்? இந்த ஒரே காரணத்துக்காகத் தான் தேசிய கட்சிகள் தமிழகத்தில் வெற்றி பெற முடிவதில்லை!


SP
நவ 03, 2024 10:53

பாஜக தனித்துதான் இயங்க வேண்டும். இவரிடம் எல்லாம் கூட்டணிவைத்து தனது தரத்தை தாழ்த்திக்கொள்ளக்கூடாது.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை