மேலும் செய்திகள்
தொகுதி பங்கீடு முடிந்தும் தொடரும் தி.மு.க., - காங்., மோதல்
3 hour(s) ago | 1
புதுடில்லி: 'இண்டியா' கூட்டணியிலிருந்து திரிணமுல் தலைவர் மம்தா வெளியேற முடிவு செய்துவிட்டார். ஆனால், அதற்குமுன் கூட்டணி கட்சி தலைவர்களுடன் போனில் பேசியுள்ளார்.தான் ஏன் விலகுகிறேன் என்பது குறித்து தலைவர்களுக்கு விரிவாக விளக்கம் கொடுத்துள்ளாராம்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=s3iy2c34&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0தமிழக முதல்வர் ஸ்டாலினுடன் பேசினாராம் மம்தா. 'காங்கிரசை நம்பாதீர்கள்.நம்ப வைத்து கழுத்தறுத்து விடுவர்' என, ஸ்டாலினுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளாராம்.தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரிடமும் பேசியுள்ளார் மம்தா. 'வெற்றி பெற முடியாத தொகுதிகளைக் கேட்கின்றனர். நாங்கள் போட்டியிட்டால் அந்த தொகுதிகளில் வெற்றி நிச்சயம். அதையெல்லாம் காங்கிரசுக்கு கொடுக்க முடியாது.அதனால், நாங்கள் தனியாகவே போட்டியிடப் போகிறோம்' என பவாரிடம் கூறினாராம், மம்தா. 'உங்களின் முடிவு முற்றிலும் சரி; அதை வரவேற்கிறேன்' என மம்தாவிற்கு பச்சைக்கொடி காட்டினாராம் பவார்.
3 hour(s) ago | 1