உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / டில்லி உஷ்ஷ்ஷ்: பா.ஜ., முதல்வருக்கு தி.மு.க., பாராட்டு

டில்லி உஷ்ஷ்ஷ்: பா.ஜ., முதல்வருக்கு தி.மு.க., பாராட்டு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: ஐரோப்பிய நாடான சுவிட்சர்லாந்தில் உள்ள டாவோஸ் நகரில், உலக பொருளாதார மாநாடு நடந்தது. அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் உட்பட உலகின் பல நாடுகளிலிருந்தும் தலைவர்களும், தொழிலதிபர்களும் இதில் பங்கேற்றனர்.தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, மஹாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னவிஸ், தமிழக தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா உட்பட பலரும் இதில் பங்கேற்றனர்.இந்த மாநாட்டில் தமிழக அமைச்சர் ராஜா, மஹாராஷ்டிரா முதல்வர் பட்னவிசை பாராட்டி பேசியுள்ளார். தி.மு.க., அமைச்சராக இருந்தாலும், பா.ஜ., முதல்வரை பாராட்டி பேசியது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. ராஜாவின் அரசியல் மரியாதை, டில்லி வட்டாரங்களில் பாராட்டையும் பெற்றுள்ளது.'பட்னவிஸ் ஒரு மக்கள் தலைவர்; அவர் மீது எனக்கும் மிகுந்த மரியாதை உள்ளது' என, பேசி உள்ளார் ராஜா. தமிழகத்தில் உலக நிறுவனங்களின் முதலீடுகளை ஈர்க்க, பல தொழிலதிபர்களுடன் பேச்சு நடத்தினார் ராஜா.'தமிழகத்தில் முதலீடுகளைக் குவிக்க முயற்சிகள் செய்து வருகிறேன்; ஆனால், தமிழகத்திற்கு வர வேண்டிய முதலீடுகளை மஹாராஷ்டிராவிற்கு இழுக்க பார்க்கிறார் பட்னவிஸ்; இதற்காக நான் வருத்தப்படவில்லை. வியட்நாம், மலேஷியா, இந்தோனேஷியாவிற்கு இந்த முதலீடுகள் போகாமல், இந்தியாவிற்கு வர வேண்டும். அது மஹாராஷ்டிராவோ அல்லது தமிழகமோ எதுவாக இருந்தாலும் சரி' என டி.ஆர்.பி. ராஜா பேசியது, மத்திய அமைச்சர்கள் அனைவரையும் கவர்ந்து உள்ளதாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

theruvasagan
ஜன 26, 2025 17:14

தெலங்கானா முதலமைச்சர் 1.78 லட்சம் கோடி முதலீடுகளை ஈர்த்து வந்திருக்கிறார். அதிலே அமேசான் முதலீடு செய்ய உள்ளது 60000 கோடிக்கும் மேல். அதனால நமக்கு திறமையில்லன்னு சொல்லலை. பதினைந்து வருஷத்துக்கு முன்னாடியே 1.76 லட்சம் கோடி சாதனை நமக்கு சொந்தம். இன்றைய உணக்குப்படி பார்த்தா அது ரெண்டு மடங்குக்கும் அதிகமாக இருக்கும்.


Barakat Ali
ஜன 26, 2025 14:59

தமிழகத்தில் உலக நிறுவனங்களின் முதலீடுகளை ஈர்க்க, பல தொழிலதிபர்களுடன் பேச்சு நடத்தினார் ராஜா.... அண்ணாதுரையின் அமைச்சரவையில் இருந்த அமைச்சர் மதியழகன் பற்றி அறிந்தவர்கள் நாங்கள்..... ஆகவே இதை நம்பிவிட்டோம்....


CHELLAKRISHNAN S
ஜன 26, 2025 14:26

as per la information, tn got zero investment whereas Maharashtra got 15.70 lakh crores n telengana 1.79 lakh crores


Sridhar
ஜன 26, 2025 13:12

அமெரிக்காவுல கூப்டாக ஸ்பைன்ல கூப்டாக னு நிதிய ஈர்க்கறதுக்கு கோட்டு சூட்டு போட்டுக்கிட்டு இந்த கரகாட்ட கும்பல் கிளம்பும்போது இருந்த தெம்பு இப்போ எங்க போச்சுன்னு தெரியலையே? ஏன் எல்லோரும் மஹாராஷ்டிராவுக்கும் கர்நாடகாவுக்கும் முதலீடு செய்யுறாங்க ஆனா தமிழ்நாடுன்னா ஓடறாங்க? தமிழ்நாடோட உண்மை நிலை எல்லாருக்கும் தெரிஞ்சிடுச்சா? கவர்னர் பேச்செல்லாம் கேக்கும்போது கொஞ்சம் கிலியாதான் இருக்கு. பள்ளிக்கூடங்களில் வாத்தியார்கள் இல்ல, யூனிவர்சிட்டி களில் ஆசிரியர்கள் இல்ல, தலித் மக்களுக்கு எதிரே நடந்த கொடுமைக்கு அவுங்களே பொறுப்புன்னு அரசாங்கம் யாரையோ காப்பாத்த முனையுது, இன்னும் எவ்வளவு "சார்"ங்க இருக்கணுங்கனே தெரியல்ல... போறபோக்க பாத்தா அடுத்த வருச தேர்தல்ல ரொம்ப கேவலமா தோத்துருவானுங்க போலருக்கே


Ganapathy
ஜன 26, 2025 12:45

இந்த திராவிட எலி எதுக்கு திடீர்னு அம்மணமா இப்ப ஓடணும் அதுவும் துரைமுருகன் அமலாக்கத் துறையால் ஆப்படிக்கப்படும் வேளையில்?


S Srinivasan
ஜன 26, 2025 12:00

நீ என்ன சோப்பு போட்டாலும் உனக்கு இன்வெஸ்ட்மென்ட் கிடையாது


ஸ்ரீனிவாசன் ராமஸ்வாமி
ஜன 26, 2025 09:40

திராவிட மாடலில் இப்படி ஒரு அமைச்சரா?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை