உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / ஜாதி அரசியல் நீடிக்க தி.மு.க.,வே காரணம்!

ஜாதி அரசியல் நீடிக்க தி.மு.க.,வே காரணம்!

'என் மண்; என் மக்கள்' நடைபயணம், இந்த மண்ணுக்கும் மக்களுக்கும் நன்மைகள் கிடைக்க வேண்டும், மக்களை நேசிக்கும் பிரதமரின் நல்லாட்சி தொடர வேண்டும் என்ற நல்ல நோக்கத்தில், தொகுதி மக்களை எல்லாம் சந்திக்கும் பேராவலில், பல்வேறு நெருக்கடிகளைக் கடந்தும் இந்தப் பயணம் நடக்கிறது.

ஓமலுார்

கெங்கவல்லி, ஓமலுார் பகுதிகள், மைசூருடன் இணைக்கும் கணவாய் அமைந்துள்ள முக்கியமான பகுதிகளாக விளங்கின. ரோஜா, சாமந்தி, மல்லிகைப் பூ என, 5,000 ஏக்கர் பரப்பளவில் மலர் சாகுபடி நடைபெறும் மண். திருப்பதி பகவான் ஏழுமலையானை அலங்கரிக்கும் சாமந்திப் பூ, ஓமலுாரிலிருந்து செல்கிறது என்பது, இந்த மண்ணுக்குப் பெருமை.ராமருக்கும் தமிழகத்துக்கும் என்ன தொடர்பு உள்ளது என கேட்கின்றனர். ராமர் வைகுண்டம் சென்றடைய, சரபங்கா முனிவர் யாகம் நடத்திய மண் ஓமலுார். அவர் பெயரிலேயே சரபங்கா நதியும் இங்கு உள்ளது. மேலும், ஆயிரம் ஆண்டுகள் பழமையான கோட்டை மாரியம்மன் கோவில், கோட்டை பெருமாள் கோவில், வசந்தீஸ்வரர் கோவில்கள் இந்த நதிக்கரையில் அமைந்துள்ளன. இங்கு இருந்து கொண்டுதான், சனாதன தர்மத்தை ஒழிப்போம் என்கின்றனர்.இத்தனை அற்புதமான கலாசாரமும், சரித்திரமும் உடைய நம் தமிழகத்தில் ஜாதியை வைத்து அரசியல் செய்து, மக்களைப் பிரித்து சூழ்ச்சி செய்து, ஜாதி அரசியல் இன்றும் தமிழகத்தில் இருக்கக் காரணம், தி.மு. க., மட்டும்தான்.

வீரபாண்டி

ஒருகாலத்தில் முத்து எடுக்கப்பட்ட திருமணிமுத்தாற்றின் மையப் பகுதி, வீரபாண்டி தொகுதியில் தான் உள்ளது. புகழ்பெற்ற செவ்வாய்ப்பேட்டை மாரியம்மன் மூக்குத்தி, திருமணிமுத்தாற்றில் இருந்து எடுக்கப்பட்ட முத்தால் ஆனது.ஆனால், இப்பேர்ப்பட்ட பெருமைக்குரிய திருமணிமுத்தாறு, இன்று சேலத்தின் கூவம் என அழைக்கும் அளவுக்குப் பாழடைந்து விட்டது. வீரபாண்டி ஆட்டையாம்பட்டி கைமுறுக்கு புகழ்பெற்றது.இங்குள்ள இளம்பிள்ளை மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில், 4 லட்சத்துக்கும் மேற்பட்ட கைத்தறி மற்றும் விசைத்தறிகள் இயங்கி வருகின்றன. இங்கு உற்பத்தியாகும், அபூர்வா பட்டு, சாமுத்திரிகா பட்டு, எம்போஸ் பட்டு, ஆல் எம்போஸ் பட்டு போன்றவை, தேசிய அளவில் மிகவும் புகழ் பெற்றவை.* நெசவாளர்கள் நலன் காக்க, கடந்த 3 ஆண்டுகளில், மத்திய அரசு, தமிழகத்தில் 15 நெசவாளர் நேரடி விற்பனை சந்தைகள் அமைத்துள்ளது* இந்தியாவில் அதிக நெசவாளர்கள் பயன் பெற்ற மாநிலம் தமிழகம். தமிழகத்தில் 1,07,335 பேர் பயன் பெற்றுள்ளனர்* சூரியசக்தி மின்சாரம் மூலமாக விசைத்தறிகளை இயக்க, அதிகபட்சம் 8 விசைத்தறிகள் வைத்திருப்போருக்கு, மானியம் வழங்குகிறது மத்திய அரசு.கடந்த 14 தேர்தல்களில், 10 முறை ஒரே ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்தான் வீரபாண்டி தொகுதி எம்.எல்.ஏ.,க்களாக இருந்துள்ளனர். ஒரு குடும்பத்தின் பிடியில், வீரபாண்டி தொகுதி எந்த முன்னேற்றமும் இல்லாமல், நெசவுத் தொழிலும் நசிந்து, பல ஆண்டுகளாகச் சிக்கித் தவித்து வருகிறது.

தி.மு.க., செய்தது என்ன?

* பிரதமர் மோடியின் நல்லாட்சியில், சேலம் மாவட்டத்தில் 63,828 பேருக்கு பிரதமரின் திட்டத்தில் வீடுகள்* 4,49,970 வீடுகளில் குழாயில் குடிநீர்* 3,01,532 வீடுகளில் இலவச கழிப்பறைகள்* 1,90,151 விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 6000 ரூபாய் என வழங்கப்பட்ட நலத் திட்டங்கள் ஏராளம்.ஆனால், தமிழகத்தை ஆளும் தி.மு.க., அரசு மக்களுக்கு செய்த நலத் திட்டங்கள் என்ன?வரும் காலத்தில் தேசிய நதிகள் அனைத்தையும் இணைக்கும் பல்வேறு முக்கியத் திட்டங்களைச் செயல்படுத்த, தமிழகமும் பிரதமர் மோடிக்கு துணை நிற்க வேண்டும்.பயணம் தொடரும்...


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 21 )

K.n. Dhasarathan
ஜன 06, 2024 22:32

ஐயா அண்ணாமலை மதம் வைத்து பிழைப்பு நடத்துவது, ஆட்சியை பிடித்தது, நதி நீர் இணைப்பு என்று தேர்தல் நேரத்தில் ஒரு உடான்ஸ் விட்டு பிறகு சுத்தமாக மறந்து போயி, அடுத்த தேர்தலில் மறுபடி நதி நீர் இணைப்பு என்று கொஞ்சமும்வெட்கமே இள்ளாமல் திரும்ப பேசுவது உங்களுக்கே உள்ள தனி கலை


திகழ்ஓவியன்
ஜன 06, 2024 19:28

proud கண்ணடிக்கா சொல்லுகிறார் கேட்டு கொள்ளுங்கள் , ஒரு நாலு பேர் சுற்றி இருந்தால் பேச்சு சரளமா வரும் , இதே சுற்றி பெண்கள் இருந்தால் வெரி மொழி வரும் இவர் எல்லாம் ஆள் மாறாட்டம் செய்து தான் தேர்வில் வெற்றி பெற்று இருப்பார் , எவரோ ஸ்ஸ்ல்வி ஜோசியன் சொன்னார் என்று அரசியலுக்கு வந்திருக்கார் இவர்


K.Ramakrishnan
ஜன 06, 2024 18:41

சரிங்க.. அப்ப எதுக்கு உங்க கட்சியில ஓபிசி அணி, சிறுபான்மையினர் அணி, பழங்குடியினர் அணி, ஆதிதிராவிடர் நலப்பிரிவு என்று தனித்தனியாக வைச்சிருக்கீங்க... எல்லாத்தையும் ஒன்றாக்கி ஒரே அமைப்பாக வைக்க வேண்டியது தானே...


MADHAVAN
ஜன 06, 2024 18:30

மதம் வைச்சு அரசியல் பண்றது யாருன்னு சொல்லு,


MADHAVAN
ஜன 06, 2024 18:29

உங்க காட்சிலதண் ஜாதிபெயரை போட்டுட்டுஇருக்கீங்க,


g.s,rajan
ஜன 06, 2024 18:08

All Ploitical Parties are responsible for eeism....


g.s,rajan
ஜன 06, 2024 16:53

All Political Parties are mostly responsible for Spreading the eism among the People.


திகழ்ஓவியன்
ஜன 06, 2024 18:16

எல்லாத்துக்கும் DMK தான் காரணம்


இசக்கிமுத்து,தூத்துக்குடி
ஜன 06, 2024 13:05

சாதிகளை வளர்ப்பதற்கு தனித் தொகுதிகள் வேண்டும், மற்ற சாதியினரை பழி வாங்க PCR சட்டம் வேண்டும் நன்றாக படிக்காவிட்டாலும் வேலைவாய்ப்புக்கு சாதி வேண்டும் குற்றம் செஞ்சிட்டுஈஸியாக தப்பிப்பதற்கு சாதி வேண்டும் ஆனால் சாதியை ஒழிக்கணும்னு வெட்கப்படாம வீரவேசமா பொங்குவானுங்க இந்த திமுகவும் அதன் கூட்டணி கட்சிகளும் ஏலே இன்னும் ஆயிரம் வருஷம் ஆனாலும் எவனும் எந்த சாதியையும் ஒழிக்க முடியாது


Sampath Kumar
ஜன 06, 2024 11:57

ஆமாம் அதுக்கு இப்போ என்னகிற சனம் இல்லாத இடத்தில நின்று குத்தம் கண்டு பிடிக்க ஏலம் அரசியிலுக்கே லாயக்கு நஹி


அசோகன்
ஜன 06, 2024 11:26

ஜாதி ஜாதி ஜாதி என்று வெறி பிடித்து அலையும் கூட்டம் திமுக...... அண்மையில் நடந்த அருவா வெட்டு கோவிலில் நுழைந்த தலித்தை திமுக நிர்வாகி கெட்ட கெட்ட வார்த்தையில் திட்டி வெளியே அடித்து தூரத்தியது நீர்த்தோட்டியில் மலம் கலந்தது ஸ்கூல் குடிநீரில் மலம் கலந்தது என அடுக்கிக்கொண்டே போகலாம்........... டிவி பார்த்தால் திக கூட்டத்திற்கு அடிமையாகவே இருந்து சாகவேண்டியதுதான்


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை