வாசகர்கள் கருத்துகள் ( 26 )
நிறைவேறாது, 100 கோடி செலவு செய்து சேலம் இளைஞர் மாநாடு நடந்தது. இதில் பேசிய உதயநிதி பேச்சு ஏனோ தானோ என்றும் படபடப்பாகவும் உப்பு சப்பு இல்லாமல் இருந்தது. அதிமுகவும் பாஜகவும் தனித்தனியாக நின்று ஓட்டை பிரித்தால் மட்டுமே திமுக வெற்றி பெறும். இன்று இளைஞர்கள் பொதுவான மனநிலை திமுக தொண்டர் என்று கூறிக் கொள்வதை சற்று தவிர்க்கிறார்கள். அண்ணாமலையின் பேச்சை வெளியிடுவதில் பெருமை கொள்கிறார்கள். பிறகு எப்படி ஜெயிக்கும்?
நடக்கப்போவது நாடாள மன்ற தேர்தல். ஆகையால் திமுக, கோவையை கூட்டணி கட்சிக்கு ஒதுக்குவதே சால சிறந்தது. போட்டியிடும் வேட்பாளரை உதய சூரியன் சின்னத்தில் போட்டியிட சொல்ல வேண்டும். கோவையை பொறுத்த வரை திமுக கூட்டணி வெல்ல அதிக வாய்ப்புள்ளது. காரணம் எதிர்ப்பு வாக்குகள் மூன்றாக பிரிந்து விடும். இரண்டாமிடம் அதிமுக, மூன்றாமிடம் BJ Party, நான்காம் இடம் நாம் தமிழர் என்று தான் வரும்.
என்ன டெபாசிட் கெடைக்காதுன்னு தெரிஞ்சி போச்சா ?
2014 ம் ஆண்டு பிஜேபி கூட்டணி 381286 ஒட்டு, அதிமுக 445445 ஒட்டு, திமுக 217255 ஒட்டு... 2019 ம் ஆண்டு பிஜேபி, அதிமுக கூட்டணி 391286 ஒட்டு, திமுக 5 லட்சம் ஒட்டு
பணம் குடுத்தா ஓட்டு போட்றபோறாங்க கொள்கையாவது மண்ணாவது, ஈரோடு இடைத்தேர்தல் என்ன upலயா நடந்தது கொங்கு தானே. மக்கள் மாறாதவரை மறுமலர்ச்சி ஏற்படாது.
100 ரூபாய் பணம் கொடுத்து பிறகு ஆயிரம் ரூபாய் திருடுவார்கள் ..இது எத்தனை நாட்களுக்கு ??...படித்த மாநிலம் என்று கூறிக்கொள்ளும் கேரளாவில் இப்பொது 58,00,000 பேர் ஆறு மாதமாக பென்ஷன் கிடைக்காமல் காத்திருக்கிறார்கள்.... கம்யூனிஸ்ட் அரசாங்கம் திவால் .....படித்த மாவட்டம் என்று சொல்லும் கன்யாகுமரியில் மலையை பெயர்த்து கேரளா அனுப்புகிறார்கள் ....இதன் விளைவுகள் விரைவில் புரியும் ....அடி பட்டுத்தான் திருந்தனும் ...
இது கோயமுத்தூருங்கோ ரொம்ப வ்யாக்யானம் உள்ளவங்கோ அவிய ஆட்சியிலே பத்து செண்டு இடம் கூட அவியல கேட்காம விக்கமுடியாதுங்கோ அதுலும் திருச்சி ரோட்ல சுத்தமா முடியாதுங்கோ இடம் பிடுங்கி என்னென்னமோ அழுகுணி ஆட்டம் போட்டு எம்புட்டு கட்டடங்களை முழுங்கினாங்க அதானுங்க வெளியூர்கார அமைச்சரை தொரத்திட்டாங்க அதானுங்க அவிய கட்சிக்காரனுங்களையும் சேர்ந்து தொறத்தியாச்சு இனி வர்றது எம்பி எலெக்ஷன் தானே அந்த மவராசன் கம்மி காரரு அன்னக்கி போனவருதான் இன்னும் வரலய்ங்கோ இனி இலையா இல்ல தாமரையா அதாங்கோ டவுட்டு ஆனா கொங்கு கோவையில் இன்னும் ஒர்க்ஷாப் சரியாய் ஓடலைங்கோ கரெண்ட் வில பேணா உசரத்துக்கு போயிருச்சுங்கோ சொத்துவரி எகிரிச்சிருச்சுங்கோ அதனால எம்பிக்கு அ தி மு க இலைக்கு போட்டு பிரயோசனம் இல்லைங்கோ நமக்கு பிரதமமந்திரி யாரு வரணும்ங்கரது தானே அதுக்கு மோதி ஐயா தான் சரிபட்டுவருவாரு அதனாலைங்கோ பா ஜ க தாமரைக்கே நம்ம கொங்கு வோட்டுப்போடுவாங்கோ சட்டசபைக்கு இலைக்கு பார்க்கலாமுங்கோ.
கன்யாகுமரி நாகர்கோவில் சுங்கான்கடை யில் கனிமவள கடத்தல் டாரஸ் லாரி மோதி நேற்று போக்குவரத்து காவலர் உயிரிழப்பு.... இது கன்யாகுமரியில் தொடர்கதை ..கனிமவள கடத்தலால் குமரி மாவட்ட சாலையெங்கும் விபத்துகள் மரண ஓலம் ...மலையை பெயர்த்து ராட்சச லாரிகளில் கேரளா அனுப்புகிறார்கள் ....இந்த ஆட்சியில் இதை கேள்வி கேட்க நாதி இல்லை ...
கொங்கு மட்டும் இல்லை, 40/40 தீயமுக ஜெயிக்கும். அடிமைகள் காசு வாங்கிட்டு அங்க தான் ஓட்டு போடும். பிஜேபி அதிமுக முறையே 8,18% ஓட்டு வாங்குவாங்க. விடியலின் 28 கட்சி கூட்டணி 32% ஓட்டு வாங்கும்
அப்படியே ஜெயிக்கட்டும் ....இங்குள்ளவன் நன்றாக அடி வாங்காமல் திருந்த மாட்டான் ...திராவிடம் அந்த அளவுக்கு மூளை சலவை செய்துள்ளது ..இப்பொது கொஞ்சம் விழிப்புணர்வு வந்துள்ளது ...முழுக்க தெளிவு வர நாட்கள் ஆகும் .
இந்த தேர்தலில் தீ மு க தெரு மாடல் ஆட்சியாக மாறும்
இப்பத்தான் மாமன் மச்சான் பூனை குட்டி வெளியே வந்துவிட்டதே. , ஆகவே கமுக்கமா சமமா பங்குபோட்டுக்க பண்ணை தோட்டத்திலேயோ, மலை பங்களாவிலோ பேசி கும்பியடிப்பானுங்க. தனி தனியா ஆட்டம் போட்டாலே தாங்கமுடியாது. இப்ப மயிலாட்டம் ஒயிலாட்டம் எல்லாம் இருக்கும். இவனுங்க கணக்கு இப்படி.. பார்கலாம் கனவு நனவாக வாய்ப்பிருக்கிறதா என்று. ஷிண்டேக்கள் ரெடியாக காத்திருப்பதாக பேசிக்கொள்கிறார்கள் லெட் அஸ் வெயிட் அன்ட் வாச்.
கோவை, திருப்பூரில் வெற்றி பெற்றால், தி.மு.க., அரசின் சாதனைக்கு மக்கள் கொடுத்த அங்கீகாரம் என பார்க்கலமாம் .....தி மு க வுக்கு வோட்டு போடறவன் கோவை லோக்சபா தொகுதி, மா.கம்யூ., எம் பி கோவைக்கு என்ன செய்தார் என்ற கேள்விக்கு பதில் சொன்னால் போதும் ....எட்டிமடை மதுக்கரை மலுமிச்சம்பட்டி பகுதியில் கேரளா மருத்துவ கழிவு பலருக்கு கொடிய வியாதி தீராத பிரச்னையை உருவாக்கும் ..இதை கேட்க நாதி இல்லை ......
திமுக இந்த தடவை தமிழ் நாட்டில் பெரும்பாலான இடங்களில் தோல்வியை சந்திக்கப் போகிறது இப்படி இருக்கும் சூழ்நிலையில் அவர்களுக்கு சாதகமில்லாத கொங்கு மண்டலத்தில் மட்டும் எப்படி கரை சேரும்? திமுக இதுவரை அவர்களது ஆட்சியில் தமிழக மக்களிடம் நல்ல பெயர் வாங்கியதாக சரித்திரம் இல்லை ஆனால் கெட்ட பெயரை வெகு விரைவிலேயே சம்பாதித்து விடும் சாமர்த்தியமும் திறமையும் அக் கட்சிக்கு நிறைய உண்டு என்பதை அவர்களின் கடந்தகால வராலாறை பார்த்து நாம் தெரிந்து கொள்ளலாம். எனவே திமுகவிற்கு ஆதரவாக சி வோட்டர் இண்டியா டுடே போன்ற வடமாநில பெய்டு ஊடகங்களில் வெளிவரும் கருத்துக் கணிப்புகள் (அந்த கருத்து கணிப்பு போன வருட டிசம்பர் முதல் வாரம் ஃபோன்மூலம் தமிழகத்தில் சிலரிடம் நடத்தியதாம்) எல்லாம் இந்த தேர்தலில் கண்டிப்பாக மண்ணை கவ்வும். தேர்தலுக்கு தேர்தல் தமிழக மக்களை ஏமாற்றுவதற்காக வழக்கமாக பெரும் தொகை கொடுத்து திமுக நடத்தும் தில்லாலங்கடி தில்லுமுல்லு தேர்தல் கணிப்புகள் எல்லாம் இந்த முறை பொய்த்து போவது உறுதி.
தி மு க வேட்பாளர் விண்ணப்பக் கட்டணம், 50,000 ரூபாய்... விண்ணப்ப படிவத்திற்கான விலை, 2,000 ரூபாய்...மூன்றே வருடத்தில் அவ்வளவு சம்பாதனை ....தேர்தல் நேரத்தில் பெரும் பணம் இறக்குவானுங்க ...
மேலும் செய்திகள்
தமிழக அரசின் கைது மிரட்டல்: எதிர்கொள்ள விஜய் புதிய திட்டம்
7 hour(s) ago | 8
அதிகரிக்கும் நெருக்கடி: ரஜினி வழியில் விஜய்?
05-Oct-2025 | 32
சுதேசி பாடத்திட்டம் வெளியிட்ட என்.சி.இ.ஆர்.டி.,
05-Oct-2025 | 5