உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / பிரதமர் மோடியின் படத்துடன் லிங்க் வந்தால் தொட வேண்டாம்; சைபர் கிரைம் குற்றவாளிகளின் அடுத்த மோசடி

பிரதமர் மோடியின் படத்துடன் லிங்க் வந்தால் தொட வேண்டாம்; சைபர் கிரைம் குற்றவாளிகளின் அடுத்த மோசடி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சமூக வலைதளத்தில் பிரதமர் மோடி படத்துடன் பா.ஜ., அனுப்பியது போல், 'லிங்க்' அனுப்பி, '675 மற்றும் 5,000 ரூபாய் உங்கள் வங்கி கணக்கில் வரவு வைக்க இங்கே, 'கிளிக்' செய்யவும்' என வந்தால் ஜாக்கிரதை; உங்கள் வங்கி கணக்கில் இருந்து, மர்ம நபர்கள், மொத்த பணத்தையும் சுருட்டி விடுவர். நாளுக்குள் நாள் சைபர் கிரைம் அதிகரித்து வருகிறது. போனில் பேசி நம் வங்கி கணக்கு விபரங்களை பெற்று பணம் திருடிய கும்பல், தற்போது தகவல் தொழில்நுட்பத்திற்கு ஏற்ப தங்களை, 'அப்டேட்' செய்து, விதவிதமாக மோசடியில் ஈடுபட்டு வருகிறது.

பணம் திருட்டு

குறிப்பாக வாழ்த்து கடிதம் போல் நம், 'வாட்ஸாப்' எண்ணிற்கு பி.டி.எப்.பைல் அனுப்பி அதன்மூலம் வங்கி கணக்கில் நுழைந்து பணத்தை திருடுகின்றனர். வங்கியில் இருந்து, 'நோ யுவர் கஸ்டமர்' தகவல், 'அப்டேட்' செய்ய வேண்டும் எனக் கூறி, பைல் அனுப்பி மோசடி செய்கின்றனர். அமேசான், பிளிப்கார்டில் குறைந்த விலையில் பொருட்கள் கிடைப்பதாக கூறி, 'லிங்க்' அனுப்பி பணத்தை சுருட்டுகின்றனர். இதுகுறித்து மக்களுக்கு ஓரளவு விழிப்புணர்வு இருப்பதாலும், போலீசாரின் தொடர் எச்சரிக்கையாலும் தற்போது சைபர் கிரைம் குற்றவாளிகள், புதிதாக ஒரு மோசடியில் ஈடுபட ஆரம்பித்துள்ளனர். 'பேஸ்புக், இன்ஸ்டாகிராம், திரெட்' போன்ற சமூகவலை தளத்தில் பிரதமர் படத்துடன், பா.ஜ., வெளியிட்டது போல் போலியாக ஒரு விளம்பர ஸ்டில்லை, 'லிங்க்' வசதியுடன், 'அப்டேட்' செய்துள்ளனர். அதில், பாரத் ஜன் தன்யோஜனா மூலம் ஒவ்வொரு பொதுமக்களுக்கும், 5,000 ரூபாய் வங்கி கணக்கில் வரவு வைக்க 'ஸ்கிராட்ச்' செய்யவும் என குறிப்பிட்டுள்ளனர்.அதுபோல் பா.ஜ.,வில் இருந்து 5,000 ரூபாய் கிடைக்க இங்கே, 'கிளிக்' செய்யவும் என, 'லிங்க்' கொடுத்துள்ளனர்.விழிப்புணர்வு இல்லாதவர்கள் அதன் வழியாக, 'கிளிக்' செய்யும்போது, நம் வங்கி விபரங்களை பெற்று, பணத்தை மொத்தமாக சுருட்டி விடுகின்றனர். இப்படி தமிழகம் முழுதும் பல லட்சம் ரூபாய் மோசடி செய்து வருகின்றனர்.

மோசடி கும்பல்

போலீசார் கூறியதாவது: அவர்கள் அனுப்பும், 'லிங்க்'கை தெரிந்தோ தெரியாமலோ நாம் தொட்டுவிட்டால், நம் வங்கி கணக்கு மற்றும் அலைபேசியில் உள்ள விபரங்கள் அனைத்தும், இணைய வழி மோசடி கும்பலிடம் சென்று விடும். அதுபோல் முன்பின் தெரியாத வெளிநாட்டு அழைப்பை ஏற்கக்கூடாது. அதில் உங்களது அலைபேசி எண், 'வெரிபிகேஷன்' என தகவல் தெரிவிப்பர். 'ஓகே' செய்ய ஒரு எண்ணை அழுத்தச் சொல்வர்.அழுத்தினால் நம் விபரங்கள் அவர்களிடம் சென்றுவிடும். சைபர் குற்றங்கள் குறித்து இலவச எண்ணான, 1930க்கு உடனே தகவல் தெரிவிக்க வேண்டும்.இவ்வாறு போலீசார் கூறினர். - நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

PADMAGIREESAN
ஜன 02, 2025 17:45

if criminals are in foreign country such as Nigeria , China etc ., cyber police can not do any thing. we can not post 140 crore police to monitor 140 crore people . So it is better to be careful from our side also . if anything happens , we shall go to police .


venugopal s
ஜன 02, 2025 10:04

அவருக்கு ஓட்டளித்து ஏற்கனவே மக்கள் ஏமாந்து தானே போய் உள்ளனர், இன்னும் இது வேறா?


ghee
ஜன 02, 2025 10:32

வேணு.... அங்கே marxist கட்சி திமுக வை கலாய்குது ...அந்த பக்கம் உன்னையே காணோமே


hariharan
ஜன 02, 2025 07:37

1930 தொலைபேசி எப்பொழுதும் நமது அரசு போல செயல்படாது. ஏதேனும் பண மோசடி புகார் தெரிவிக்கவேண்டுமென்றால் NATIONAL. CYBER CRIME REPORTING PORTAL மூலமாக தெரிவிக்க வேண்டும். உடனடியாக நம் வீட்டின் அருகிலுள்ள சைபர் குற்ற தடுப்பு காவல் நிலையத்திலிருந்து அழைத்து மேல் நடவடிக்கை எடுப்பதற்கு ஆவன செய்வார்கள். இந்த விஷயங்கள் அனைவருக்கும் சென்றுசேர வேண்டும்.


அப்பாவி
ஜன 02, 2025 05:41

மர்மநபர்களை புடிக்க துப்பில்லை. டிஜிட்டல்.புரட்சின்னு மெடல் குத்தி உடுவாங்க.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை