உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / அதிகரிக்கும் போதைப்பொருட்கள் கடத்தல் ஐந்து ஆண்டுகளில் ஆறு மடங்கு அதிகரிப்பு: தென் மாநிலங்களில் தீவிரம்

அதிகரிக்கும் போதைப்பொருட்கள் கடத்தல் ஐந்து ஆண்டுகளில் ஆறு மடங்கு அதிகரிப்பு: தென் மாநிலங்களில் தீவிரம்

புதுடில்லி: மஹாராஷ்டிராவின் மும்பை, குஜராத், கேரளா மற்றும் தமிழகத்தின் கடல் வழியாக போதை பொருள் கடத்தும் நடவடிக்கை ஆறு மடங்காக அதிகரித்துள்ளது என போதை பொருள் தடுப்பு அமைப்பு கவலை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக போதை பொருள் தடுப்பு அமைப்பு வெளியிட்டுள்ள , 2024ம் ஆண்டுக்கான அறிக்கையில் கூறப்பட்டுஉள்ளதாவது: நிலப்பகுதிகளை விட, கடல் பகுதியில் கண்காணிப்பு பலவீனமாக இருப்பதே போதை பொருள் கடத்தல் அதிகரிக்க காரணம். மெத் ஆம்பெட்டமைன் கடந்த 2020ல் 1,704 கிலோ அளவுக்கு பிடிபட்ட போதைப் பொருட்கள், 2024ல் 8,406 கிலோ அளவுக்கு சிக்கியது. அதே போல் 2019ல், ஆய்வகங்களில் தயாரிக்கப்படும் மெத் ஆம்பெட்டமைன் போன்ற போதைப் பொருட்கள், 1,890 கிலோ கைப்பற்றப்பட்டன . இதுவே, 2024ல் ஆறு மடங்காக அதிகரித்து 11,994 கிலோவாக இருந்தது. தெற்கு ஆசியா, தென்கிழக்கு ஆசியா மற்றும் மேற்காசிய நாடுகளில், போதைப் பொருள் சந்தை அசுர வேகத்தில் வளர்ந்து வருவதும் கடத்தல் அதிகரிக்க காரணம். உலகிலேயே அதிக அளவு போதைப் பொருள் தயாரிக்கும் நாடுகளுக்கு மத்தியில், இந்தியா அமைந்திருக்கிறது. அதாவது, ஹெராயின், ஏ.டி.எஸ்., எனப்படும் அம்பெட்டமைன், மெத் ஆம்பெட்டமைன் போன்ற போதைப் பொருட்களை அதிக அளவில் தயாரிக்கும் 'டெத் கிரசன்ட்' நாடுகள் என அழைக்கப்படும் ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் மற்றும் ஈரான் ஆகிய நாடுகள், நம் நாட்டின் மேற்கு பக்கத்தில் அமைந்துள்ளன. 'டெத் டிரையங்கிள்' இன்னொரு புறம், மெத் ஆம்பெட்டமைன் மற்றும் பிற செயற்கை போதைப் பொருட்களின் முக்கியமான சப்ளையராக விளங்கும் 'டெத் டிரையங்கிள்' நாடுகளான மியான்மர், தாய்லாந்து மற்றும் லாவோஸ் நம் நாட்டின் கிழக்குப் பக்கத்தில் உள்ளன. எனவே, நம் நாட்டின் கடல் வழியாக போதைப் பொருள் கடத்தல் முன்பை விட அதிகரித்திருக்கிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

நிக்கோல்தாம்சன்
செப் 20, 2025 04:36

அந்த கட்சியின் அயலக அணி தலைவன் , அந்த கட்சியின் மருமகளோடு கூட்டு சேர்ந்து திரைப்படம் எடுத்தானே அந்த பணம் எங்கிருந்து வந்தது அமீரு , ஓஹோ நீங்கல்லாம் அடங்க மறு , அத்துமீறு என்று கூவி Gen Z மக்களின் வாழ்வை பாழ் பண்ணவந்த கட்சியினரே ?


Ravi
செப் 19, 2025 21:44

முட்டு கொடுக்க முப்பது பேர் ரெடியா இருக்காங்க. உனக்கு என்ன கவலை.


karthik
செப் 19, 2025 17:53

தென்மாநிலங்களில் கேடுகெட்ட ஆட்சி நடக்கிறது...வடக்கன் வடக்கன் என்று ஊரை ஏமாற்றி,தமிழர்களை குடிகாரர்களாக போதையில் தள்ளாடுபவர்களாக மாற்றி வைத்திருக்கிறார்கள்...


Venugopal S
செப் 19, 2025 17:42

பங்களாதேஷ் உடனான நிலப்பகுதி எல்லையைக் கோட்டை விட்டது போதாதென்று இப்போது கடல்பகுதி எல்லையிலும் கோட்டை விடுகிறார்கள் இந்த கையாலாகாத மத்திய பாஜக அரசு! ஆளத் தகுதியற்றவர்கள் கையில் நாட்டைக் கொடுத்தால் இப்படித்தான் நடக்கும்!


ram
செப் 19, 2025 14:04

அதுவும் திருட்டு திமுக ஆட்சிக்கு வந்த பிறகு மூளை முடுக்கெல்லாம் கிடைக்குது


karuththuraja
செப் 19, 2025 13:31

போதை பொருள் நடமாட்டத்தை கண்காணித்து வேரோடு புடுங்க மத்திய அரசுக்கு தான் அதிக பவர் உண்டு, அவர்களுக்கு கல்லா கட்டும் வரை இதை ஒழிக்க முடியாது, நம்நாட்டுக்கு கொண்டு வருபவர்கள் கடல் வழியே தான் கொண்டு வருகிறார்கள், அங்கு நேர்மையான ஆட்களை கொண்டு நவீன ஆயுதம் கொடுத்து தடுக்க வேண்டும்


Venugopal S
செப் 19, 2025 12:58

நேற்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இதைச் சொன்னபோது பொய் என்று பொங்கி எழுந்த கூட்டம் இன்று தலைமறைவாகி விட்டனர்!


raja
செப் 19, 2025 08:04

இதன் எல்லா புகழும் திருட்டு திராவிட மாடல் ஆட்சி நடத்தும் முதல்வருக்கும் அவரின் உடன் பிறப்புகளையும் சேரும்...


Sangi Mangi
செப் 19, 2025 17:26

இதன் எல்லா புகழும் சங்கி மாடல் ஆட்சி நடத்தும் அவருக்கும், அவருக்கு சேரும்...


ராமகிருஷ்ணன்
செப் 19, 2025 04:39

அமெரிக்க விடியலார் அண்ணன் டிரம்பு தமிழக அரசின் போதை பொருட்களின் உற்பத்தி விற்பனை ஏற்றுமதி இறக்குமதி பற்றிய புகழ் பாடியுள்ளார்.


Vasan
செப் 19, 2025 11:15

டிரம்ப் சொன்னதில் ஏதும் தவறு இல்லையே. 5 வருடத்தில் 600 சதவீத வளர்ச்சி. அடுத்ததாக நடைபெற உள்ள அரசாங்க பாராட்டு விழாவில், திரு ரஜினிகாந்த் அவர்கள், இந்த போதை பொருள் பற்றியும் பேசி, இளைஞர்களை ஊக்குவிக்கலாம்.


சமீபத்திய செய்தி