4 ராஜ்யசபா சீட்களுக்கு அக்., 24ல் தேர்தல்
வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்
ஜம்மு - காஷ்மீரில், காலியாக உள்ள நான்கு ராஜ்யசபா சீட்களுக்கு வரும் அக்., 24ம் தேதி தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ளது. ஜம்மு - காஷ்மீரில் கடந்த 2021, பிப்., முதல் நான்கு ராஜ்யசபா சீட்கள் காலியாக உள்ளன. பஞ்சாப் சட்டசபை தேர்தலின்போது லுாதியானா மேற்கு தொகுதியில் போட்டியிடுவதற்காக, ஆம் ஆத்மியின் சஞ்சீவ் அரோரா தன் ராஜ்யசபா பதவியை ராஜினாமா செய்தார். இதனால், பஞ்சாபில் கடந்த ஜூலை 1ம் தேதி அந்த இடம் காலியானது. ஜம்மு - காஷ்மீர் மக்கள் ஜனநாயக கட்சியின் மிர் முகமது பயஸ் மற்றும் பா.ஜ.,வின் ஷம்ஷேர் சிங்கின் பதவிக்காலம் கடந்த 2021, பிப்.,10ம் தேதியுடன் முடிவடைந்தது. அதே போல் முன்னாள் காங்., தலைவர் குலாம் நபி ஆசாத், நஸீர் அஹமது லாவேவின் பதவிக்காலமும் 2021, பிப்., 15ம் தேதியுடன் முடிவடைந்தது. மேலும், யூனியன் பிரதேசமாக மாற்றப்பட்டு, தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டசபை இல்லாததால், நான்கு ஆண்டுகளாக, ஜம்மு - காஷ்மீருக்கான ராஜ்யசபா இடங்கள் காலியாகவே இருந்தன. தற்போது சட்டசபை அமைக்கப்பட்டதால், தேர்தல் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. -நமது சிறப்பு நிருபர் -