மேலும் செய்திகள்
கேரள சட்டசபை தேர்தலிலும் பா.ஜ., சாதிக்குமா?
13 hour(s) ago | 14
ஈரோடு த.வெ.க., கூட்டத்துக்கு போலீசார் விதித்த 84 நிபந்தனைகள்!
13 hour(s) ago | 3
கோவை, திருப்பூர் உள்ளிட்ட 4 நகரங்களுக்கு, நகர்ப்புற மேம்பாட்டு ஆணையங்கள் அமைப்பதற்கான அரசாணை வெளியிட்டு, மூன்றாண்டுகளாகியும் அடுத்த கட்டத்துக்கு நகராமல் இருப்பது, நகர மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. வந்தார்...சென்றார்!
கோவை நகர மேம்பாட்டு ஆணையத்துக்கு, அலர்மேல்மங்கை என்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரியும் நியமிக்கப்பட்டார். அதற்குப் பின், எந்த வேலையும் நடக்கவில்லை. சில மாதங்களில் அவரும் மாற்றப்பட்டார்; வேறு யாரும் நியமிக்கப்படவில்லை.இந்த ஆணையம் உருவாக்கப்பட்டால், லே அவுட், கட்டடங்களுக்கான திட்ட அனுமதி எளிதாகும். புதிய வளர்ச்சித் திட்டங்கள் செயல்படுத்தப்படும். ஆனால் மூன்றாண்டுகளாக, இந்த ஆணையங்கள் குறித்த அறிவிப்பு, அடுத்த கட்டத்துக்கு நகரவே இல்லை. கோவை மாஸ்டர் பிளான்
இதற்கிடையில், கோவை உள்ளிட்ட சில நகரங்களுக்கான, 'மாஸ்டர் பிளான்' வரைவு வெளியிடப்பட்டுள்ளது.இவற்றில் திருத்தம் மேற்கொள்ளப்பட்ட பின், அவை நடைமுறைக்கு வரும். அப்படி வரும்போது, அதிலுள்ள திட்டங்களை, எந்தத் துறை செயல்படுத்தும் என்ற கேள்வி எழுகிறது.நகர மேம்பாட்டு ஆணையம் குறித்த அரசாணை, வெறும் காகிதத்திலேயே இருப்பது, இந்த நகரங்களில் வசிக்கும் பல கோடி மக்களிடம் குறிப்பாக, தொழில் அமைப்பினரிடம் கடுமையான அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.நகர ஊரமைப்பு இயக்குனர் கணேசன் கூறுகையில், ''மொத்தம் ஆறு நகரங்களில் நகர மேம்பாட்டு ஆணையம் அமைக்கப்படவுள்ளது. சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் விதிகளைப் பின்பற்றி, நகர மேம்பாட்டு ஆணைய விதிமுறைகள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த வாரத்தில், அது அரசுக்கு அனுப்பப்படும்; சட்டத்துறையின் ஒப்புதல் பெற்றபின், ஆணையங்களுக்கான அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் நியமிக்கப்படுவர்; மிக விரைவில் இந்த ஆணையங்கள் செயல்பாட்டுக்கு வரும்,'' என்றார்.அரசாணையை வேகவேகமாக வெளியிடும் தமிழக அரசு, அதைச் செயல்படுத்துவதில் மட்டும் இப்படி சுணக்கம் காண்பிப்பது ஏனோ?- நமது சிறப்பு நிருபர் -
13 hour(s) ago | 14
13 hour(s) ago | 3